தங்கம் விலை திங்கட்கிழமை வரலாற்று உச்சத்தைத் தொட்ட நிலையில் மக்கள் இனி தங்கத்தை வாங்கவே முடியாதா என்று புலம்ப துவங்கிவிட்டனர், அட்சய திருதியை பண்டிகையின் போது தங்கம் விலை தடாலடியாக உயர்ந்த பின்பு மெல்ல மெல்லக் குறைந்து வந்தது.
இந்த நிலையில் திங்கட்கிழமை ஈரான் அதிபரின் மரணம், அமெரிக்க வட்டி விகிதம் குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகள் என அனைத்தும் சேர்ந்து தங்கத்தை வரலாற்று உச்ச விலைக்கு உயர்த்தியது. ஆனால் திங்கட்கிழமை மாலையிலேயே அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அந்நாட்டின் பணவீக்கம் குறைவது உறுதியான பின்பே வட்டி விகிதம் குறைக்கப்படும் என அறிவிக்க உள்ளது. இதனால் தங்கம் விலை சடசடவென குறையத் துவங்கியது.

செவ்வாய்க்கிழமை கிராமுக்கு 40 ரூபாய்க்கு மேல் சரிந்த நிலையில், இன்று ரீடைல் சந்தையில் நேற்றைய வர்த்தக முடிவின் விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தங்கம் வாங்குவோருக்குச் சிறப்பான வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
ஆனால் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை நேற்று 2430.90 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் இன்று, 2413 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் இந்திய MCX சந்தையில் ஜூன் மற்றும் ஜூலை மாதம் முடியும் தங்கம் மற்றும் வெள்ளி பியூச்சர்ஸ் விலை குறைந்துள்ளது.
இன்று 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.31 சதவீதம் சரிந்து 73,795.00 ரூபாயாக உள்ளது, இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 0.53 சதவீதம் சரிந்து 94,219.00 ரூபாயாக உள்ளது. இது இந்திய ரீடைல் சந்தையில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலை விலை மாற்றத்தில், எவ்விதமான மாற்றமும் இல்லாமல் உள்ளது.
இதன் எதிரொலியாக இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 68600 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 74,840 ரூபாயாக உள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 54,880 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோ 1300 ரூபாய் உயர்ந்து 1,00,300 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 390 ரூபாய் குறைந்து 28,050 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications