தங்கம் யாருக்கு தான் பிடிக்காது, முதலில் சீனா மற்றும் இந்தியர்கள் தான் அதிகளவில் தங்க நகைகளை வாங்கி அணிந்துக்கொள்ள விரும்புவார்கள். ஆனால் தற்போது மேற்கத்திய நாடுகளிலும் அதிகளவிலான மக்கள் தங்க நகைகளை அணிந்துக்கொள்ல விரும்புகின்றனர். இதனால் வெளிநாடுகளிலும் தங்க நகை விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுவே முதலீட்டு ரீதியாக பார்த்தால் தங்கம் காலம் காலமாக பாதுகாப்பான முதலீட்டு சொத்தாக கருதப்படுகிறது, குறிப்பாக போர், உள்நாட்டு கலவரம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற நிலைகளில் தங்கம் மிகவும் முக்கியமான முதலீடாக மாறுகிறது. இருப்பினும், இஸ்ரேல்-ஈரான் மத்தியிலான மோதல் மற்றும் அமெரிக்காவின் தலையீடு இருந்தபோதிலும், தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் 3,400 டாலர அளவீட்டை தாண்டவில்லை என்பது பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

2025-ன் முதல் பாதியில், தங்கம் 30% உயர்ந்து, சர்வதேச சந்தையில் 3,500 டாலர் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியது. ஆனால், தற்போது 3,400 டாலரக்கு கீழே நிலைபெற்றுள்ளது. இதனால் இஸ்ரேல்-ஈரான் போர் தங்கத்தில் எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதோடு தங்கம் விலை குறித்தும், அடுத்த 12 மாதத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து பிரபல முதலீட்டு வங்கியான சிட்டி குரூப் முக்கியமாந ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது.
சிட்டி குழுமத்தின் சந்தை ஆய்வாளர் மேக்ஸ் லேய்டன் (Max Layton) தலைமையிலான குழு, "தங்கத்தின் அதிரடி விலை உயர்வு முடிவடைந்துவிட்டது" என்று கூறுகிறது. அடுத்த காலாண்டில், 60% வாய்ப்புகளுடன் தங்கம் 3,000 டாலருக்கு மேல் நிலைபெறலாம், இதேபோல் 2026-ன் இரண்டாம் பாதியில் 2,500-2,700 டாலர் வரையில் குறையலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தங்க விலை குறையக் காரணம் என்ன?: சிட்டி குழுமத்தின் அறிக்கையின்படி, தங்க விலையில் எதிர்பார்க்கப்படும் சரிவுக்கு 3 முக்கியமான காரணங்கள் முன்வைக்கப்படுகிறது.
- முதலீட்டு தேவை குறைவு: தங்கத்திற்கான முதலீட்டு ஆர்வம் குறைந்து வருகிறது, ஏனெனில் முதலீட்டாளர்கள் பங்கு சந்தைகள் மற்றும் பிற ரிஸ்க் சொத்துகளில் (Risk Assets) முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். இந்த முதலீடுகளும் தற்போது லாபம் கொடுக்க துவங்கியுள்ளதால் தங்கம் தற்போதையை முதலீட்டு சந்தையில் தேவையற்ற ஒன்றாக மெல்ல மெல்ல மாறி வருகிறது. இதன் காரணமாகவே இஸ்ரேல் - ஈரான் போரில் அமெரிக்காவில் தலையீடு இருப்பதாக தகவல் வெளியான நிலையிலும் தங்கம் விலை குறைந்து வருகிறது.
- உலகளாவிய பொருளாதார வளர்ச்சி: உலகளவில் பொருளாதார வளர்ச்சி மேம்படுவதற்கான எதிர்பார்ப்புகள் புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. இதன் வாயிலாகவும் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கம் மீதான ஈர்ப்பை குறைத்துள்ளது.
- அமெரிக்க வட்டி விகித குறைப்பு: அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) வட்டி விகிதங்களை குறைக்கலாம் என்ற நம்பிக்கை, தங்கத்தின் விலையை பாதிக்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது. இரண்டு நாள் கூட்டம் ஜூன் 17ஆம் தேதி துவங்கிய நிலையில் ஜூன் 18 அமெரிக்க நேரத்தில் இக்கூட்டத்தின் முடிவுகள் வெளியாக உள்ளது. இக்கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் தங்கம் விலை குறையும் என கணக்கிடப்பட்டு உள்ளது. ஏனெனில் வட்டி விகித குறைப்பு பொதுவாக டாலர் மதிப்பை பலவீனப்படுத்தும், இதனால் தங்க விலையை உயர்த்தும், ஆனால் இந்த முறை முதலீட்டுக்கான டிமாண்ட் மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால் தங்கம் விலை உயராது.
2025-ன் முதல் பாதியில் தங்க விலை உயர என்ன காரணங்கள்:
- அமெரிக்க நிதி பற்றாக்குறை: அமெரிக்காவின் நிதி பற்றாக்குறை குறித்த கவலைகள், முதலீட்டாளர்களை தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்த காரணத்தால் தங்கம் விலை அதிகளவில் உயர்ந்தது.
- வரி அச்சுறுத்தல்கள்: அமெரிக்காவின் வரி (Tariff) கொள்கைகள், ரிஸ்க் பாதிப்பு கொண்ட சொத்துகளின் மீதான முதலீட்டு வாய்ப்பை பாதித்து, தங்கத்தை உலகளவில் முக்கியமான முதலீடாக மாற்றியது.
- இந்த இரு காரணங்களால் மட்டுமே தங்கம் விலை 2025ன் முதல் பாதியில் சுமார் 30 சதவீதம் வரையில் உயர்ந்தது.
சிட்டி குழுமத்தின் 3 முக்கிய கணிப்பு:
- அடிப்படை கணிப்பு (60% வாய்ப்பு): தங்கம் அடுத்த காலாண்டில் 3,000 டாலருக்கு மேல் நிலைபெற்று, 2026-ன் இரண்டாம் பாதியில் 2,500-2,700 டாலர் வரையில் குறையும்.
- உயர்வதற்கான வாய்ப்பு (20% சான்ஸ் மட்டுமே): 2025-ன் மூன்றாம் காலாண்டில், வரி கொள்கைகள், போர் பதற்றங்கள் மற்றும் அமெரிக்காவில் பணவீக்கம மற்றும் பொருளாதார மந்தநிலை (Stagflation) காரணமாக, தங்கம் புதிய உச்சத்தை எட்டலாம்.
- சரிவதற்கான வாய்ப்பு (20% சான்ஸ் மட்டுமே): வரி பிரச்சினைகள் விரைவாக தீர்க்கப்பட்டால், ஏற்கனவே செய்யப்பட்ட தங்கம் மீதாந முதலீட்டில் கடுமையான விற்பனை ஏற்பட்டு, விலை பெரிய அளவில் குறையலாம் என சிட்டி குரூப் கணித்துள்ளது.
பிற பொருட்களுக்கு அதிக வாய்ப்பு:
இக்காலக்கட்டத்தில் தங்கத்திற்கு மாறாக, சிட்டி குழுமம் அலுமினியம் மற்றும் செம்பு (Copper) மீது அதிகப்படியான நம்பிக்கையுடன் உள்ளது. உலகளாவிய பொருளாதார வளர்ச்சி இந்த உலோகங்களின் தேவையை அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.
தமிழ்நாட்டு முதலீட்டாளர்களுக்கு அட்வைஸ்:
தமிழ்நாட்டில், தங்கம் ஒரு முதலீட்டு சொத்து மட்டுமல்ல, கலாச்சார ரீதியிலும், சேமிப்பு பழக்கத்திலும் முக்கியமான பொருளாக உள்ளது. சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற நகரங்களில், தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகளில் முதலீடு செய்யும் பழக்கம் அதிகமாகவே உள்ளது. தங்க விலையில் எதிர்பார்க்கப்படும் சரிவை உணர்ந்து மக்கள் தங்களுடைய முதலீட்டு உத்தியை மாற்றலாம். எடுத்துக்காட்டாக, நேரடியாத தங்கத்தை வாங்காமல் ETF வாயிலாக வாங்கலாம், இல்லது போர்ட்போலியோவில் தங்கம் மீதான முதலீட்டு பங்கை குறைக்கலாம்.
இதை தொடர்ந்து தங்க விலை குறைந்தால், திருமணங்கள் மற்றும் பண்டிகைகளுக்காக நகை வாங்குவோர் செலவை குறைக்கலாம். 2026-ல் தமிழ்நாட்டில் திருமண சீசனில் இது பயனளிக்கலாம்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?



Click it and Unblock the Notifications