கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் தங்கத்தின் விலை, பெரும்பாலும் உயர்வாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான நேற்று (ஜூன் 2), காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் தங்கம் விலை உயர்ந்தது. இதன் தொடர்ச்சியாக, இன்று (ஜூன் 3) தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.
தங்கம் விலை நிலவரம்- 22காரட் தங்கம்: நேற்று ஒரு சவரன் 22 காரட் தங்கம் ரூ.72,480-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.9,060-க்கும் விற்பனையானது. அதே வேளையில், இன்று காலையில், இந்த விலை மேலும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம்: ரூ.20 உயர்ந்து, ரூ.9,080-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.160 உயர்ந்து, ரூ.72,640-க்கு விற்பனையாகிறது.

24 காரட் தங்கம்: 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.22 அதிகரித்து ரூ.9,906 விற்பனையாகிறது. சவரன் ரூ.176 உயர்ந்து ரூ.79,248 ஆகவும் விற்பனை செய்யப்ப்டுகிறது.
அதேபோல், 18 காரட் தங்கத்தை பொறுத்தவரையில், 22 காரட் மற்றும் 24 காரட் தங்கத்தின் விலை உயர்வு போலவே, 18 காரட் தங்கத்தின் விலையும் இன்று சற்று உயர்ந்துள்ளது. 18 காரட் தங்கம் என்பது 75% தூய தங்கத்தையும், மீதமுள்ள 25% மற்ற உலோகக் கலவையையும் கொண்டது. இது ஆபரணங்கள் செய்ய அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இன்று ஒரு கிராம் ரூ.15 அதிகரித்து ரூ.7,475-க்கும், ஒரு சவரன் ரூ.58,800-க்கும் விற்பனையாகிறது.
இந்தத் தொடர் விலை உயர்வு, தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக இருந்தாலும், நகை வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்குச் சற்று சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலை நிலவரம் (ஜூன் 3, 2025 காலை நிலவரம்): கடந்த சில நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலையிலும் இன்று உயர்வு காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி: ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.113-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி: ரூ.2,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.1,13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உலகளாவிய பொருளாதார நிலவரங்கள், கச்சா எண்ணெய் விலைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு, மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் போன்ற காரணிகள் தங்கத்தின் விலையைத் தொடர்ந்து பாதித்து வருகின்றன. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டுப் புகலிடமாகத் தங்கத்தை நாடுவதே இந்தத் தொடர் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் இந்த விலை உயர்வு தொடருமா அல்லது ஒரு திருத்தம் ஏற்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications