தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் வேளையில் தங்கம் வாங்க ஒரு வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கும் மக்களுக்கு, இன்று உண்மையிலான பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். தங்கம் தற்போது சாமானிய மக்கள் முதல் பில்லியனர்கள் வரையில் முக்கியமான முதலீடாக மாறி வரும் வேளையில் இந்தியாவில் தங்கத்திற்கான டிமாண்ட் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் திங்கட்கிழமை வர்த்தகத்தில் தங்கம் விலை மாறாமல் இருந்து சூழ்நிலையில், செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் அதிரடியாகக் குறைந்துள்ளது தங்கம் வாங்குவோருக்கு ஜாக்பாட் ஆக மாறியுள்ளது.

செவ்வாய்க்கிழமை ஆசிய வர்த்தக நேரத்தில் தங்க விலை சர்வதேச சந்தையில் மாற்றமின்றி இருந்தது. சர்வதேச ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸுக்கு 4,186.99 டாலராகவும், அமெரிக்க பியூச்சர்ஸ் ஒப்பந்தம் விலை 4,215.80 டாலராகவும் பதிவாகியுள்ளது. பெரும்பாலான முதலீட்டாளர்கள் அமெரிக்க மத்திய வங்கியின் டிசம்பர் கூட்டத்தில் 25 அடிப்படைப் புள்ளி வட்டி குறைப்பு நடக்கும் என ஏற்கனவே கணித்துவிட்டனர். இதனால் தங்க விலையில் சர்வதேச சந்தையில் பெரிய மாற்றம் இல்லை.
அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-ன் இரண்டு நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இக்கூட்டத்தில் பென்ச்மார்க் வட்டி விகிதம் 90 சதவீதம் வாய்ப்பு உள்ளது எனவும், இக்கூட்டத்தில் 0.25 சதவீதம் குறைக்கப்படும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது. இதேவேளையில் அடுத்தவரும் கூட்டங்களில் பெடரல் ரிசர்வ் தனது வட்டி விகிதத்தை மிதமான வேகத்திலேயே வட்டி விகிதங்களைக் குறைக்கும் எனவும் முதலீட்டாளர்கள் கணித்துள்ளனர். இதனால் தங்கம் சற்று அழுத்தத்தில் வர்த்தகமாகி வருகிறது.
ஆனால் இந்திய சந்தையில் நிலைமை வேறு, ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் விலை உயரும் பாதிப்பு இருக்கிறது. இதேபோல் பெடரல் ரிசர்வ் வட்டி குறைப்பிற்குப் பின்பு டாலர் பற்றாக்குறை குறையும், இதேபோல் ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் துவங்கும் காரணத்தால் ரூபாய் மதிப்பு விரைவில் மேம்படும் எனக் கணிக்கப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில் தான் சென்னை ரீடைல் சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ளது. ஆனால் இந்த சரிவு தொடருமா என்பது மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது. காரணம் பெடரல் ரிசர்வ்-ன் வட்டி குறைப்பு, பொதுவாக பெட் வட்டியை குறைக்கும் போது தங்கம் மீது அதிகப்படியான முதலீடுகள் குவியும். இதனால் தங்கம் விலை உயர வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது,
இன்று தங்கம் விலை
இன்று சென்னை ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 400 ரூபாய் குறைந்து 1,20,000 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 440 ரூபாய் உயர்ந்து 1,30,910 ரூபாயாக உள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 352 ரூபாய் குறைந்து 1,04,728 ரூபாயாக உள்ளது.
24 கேரட் தங்கம் 4400 ரூபாய் சரிவு
இன்றைய வர்த்தகத்தில் 24 கேரட் 1 கிராம் தங்கம் 13,091 ரூபாய்க்கு விற்கப்படும் வேளையில், 100 கிராம் தங்கம் விலை 100 கிராம்-க்கு 4400 ரூபாய் குறைந்து 13,09,100 ரூபாயாக குறைந்துள்ளது. இந்த விலை சரிவைப் பயன்படுத்தி பெட் வட்டி குறைப்புக்கு முன்பு வாங்கினால் கூடுதல் லாபத்தைப் பார்க்க முடியும்.
நீண்ட கால சேமிப்புக்கும், முதலீட்டுக்கும் 22 கேரட் தங்கத்தைக் காட்டிலும், 24 கேரட் மிகவும் சரியான தேர்வாக இருக்கும். மேலும் நகையாக வாங்கும் போது நீங்கள் செய்கூலி சேதாரம் ஆகியவை செலுத்த வேண்டும், ஆனால் 24 கேரட் தங்கத்தைப் பார் ஆகவோ, அல்லது காயின் ஆகவோ வாங்கினால் இத்தகைய வீண் செலவுகளைக் குறைத்து செய்கூலி சேதாரம் தொகைக்குக் கூடுதல் தங்கத்தை வாங்க முடியும்.
வெள்ளி, பிளாட்டினம், பெல்லாடியம் விலை நிலவரம்
இன்று சென்னை ரீடைல் சந்தையில் வெள்ளி விலை கிலோவுக்கு 1000 ரூபாய் உயர்ந்து 1,99,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 330 ரூபாய் குறைந்து 47,650 ரூபாயாக உள்ளது.
இதுவே சர்வதேச சந்தையில் வெள்ளி விலை ஒரு அவுன்ஸ்-க்கு 58.10 டாலராக ஆக நிலையாக உள்ளது. வெள்ளிக்கிழமை வெள்ளி அதன் உச்ச விலையான 59.32 டாலரை தொட்டது. இதை தொடர்ந்து பிளாட்டினம் 0.5 சதவீதம் உயர்ந்து 1,650.20 டாலராகவும், பெல்லாடியம் 0.4 சதவீதம் ஏற்றத்துடன் 1,471.25 டாலராகவும் வர்த்தகமாகி வருகிறது.
அமெரிக்க மத்திய வங்கியின் கூட்ட முடிவு புதன்கிழமை வெளியாகும். அதுவரை தங்க விலையில் பெரிய மாற்றம் இருக்காது, ஆனால் இந்திய சந்தையில் ரூபாய் மதிப்பின் தாக்கத்தின் எதிரொலியாக சில தடுமாற்றம் வரலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?



Click it and Unblock the Notifications