8 நாட்களில் ரூ.61,000 வரை குறைந்த தங்கம்! அமெரிக்கா - ஈரான் போருக்கு மத்தியில் இப்படி ஒரு நல்ல விஷயம்!

மே 31-ஆம் தேதியில் இருந்து நகை பிரியர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது. ஒரு சில மாதங்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை கடந்த 9 நாட்களாக உயரவே இல்லை. ஜூன் 2, ஜூன் 3, ஜூன் 7 ஆகிய தேதிகளில் விலையில் எந்த மாற்றமும் இல்லை. மற்ற தினங்களில் சவரனுக்கு 800 ரூபாய்க்கு மேல் குறைந்து இன்ப அதிர்ச்சி தந்தது. இதில் ஜூன் 1 முதல் ஜூன் 8-ம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களில் தங்கம் விலை 100 கிராமுக்கு ரூ.61,000 வரை குறைந்திருக்கிறது.

ஜூன் 8-ஆம் தேதி அன்றும் விலை சரிந்துள்ளது. உலகில் என்ன நடந்தாலும் அது தங்கத்தின் விலையில் பிரதிபலிக்கும். அமெரிக்கா ஈரான் போர் மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. எப்போது போர் பிரச்சனை ஏற்பட்டாலும் தங்கத்தின் விலை உச்சத்தை எட்டும் என்பார்களே.. ஆனால் எப்படி விலை குறைகிறது என்றுதானே யோசிக்கிறீர்கள்? இதன் பின்னால் சில காரணங்கள் இருக்கிறது.

ஈரான் போர் காரணமாக ஹர்மோஸ் ஜலசந்தியை நீண்ட நாட்களாகவே மூடி வைத்துள்ளது. இதன் வழியாகத்தான் உலக நாடுகளுக்கு சில பொருட்கள் சென்றடைகிறது. போர் பதற்றத்தினால் உலகளவில் இறக்குமதி பாதிக்கப்பட்டு கச்சா எண்ணையின் விலை அதிகரித்துள்ளது. பொதுவாக எண்ணெய் விலை உயர்ந்தால் போக்குவரத்து செலவு முதல் உற்பத்தி வரை அனைத்தும் அதிகரிக்கும். இது அந்தந்த பொருட்களின் விலையையும் அதிகரித்து பணவீக்கத்தை ஏற்படுத்தும்.

8 நாட்களில் ரூ.61,000 குறைந்த தங்கம்! அமெரிக்கா - ஈரான் போருக்கு மத்தியில் இப்படி ஒரு நல்ல விஷயம்!

பணவீக்கம் ஏற்பட்டால் அதை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டின் உலக வங்கிகள் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வரும். அந்த வகையில் அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் தங்கள் நாட்டின் வட்டி விகிதங்களை.. ஒன்று உயர்த்த வாய்ப்புள்ளது அல்லது தற்போதைய வட்டி விகிதத்தை மாற்றமின்றி வைத்திருக்க வாய்ப்புள்ளது. அப்படி என்ன நடந்தாலும் வட்டி தரும் அரசு பத்திரங்களின் பக்கம் முதலீட்டாளர்கள் திரும்புவார்கள். இந்த நேரத்தில் தங்கத்தை வாங்கி வைப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை. தங்கத்தின் மூலம் வட்டி வருமானம் கிடைக்காது. இதனால் டிமாண்ட் குறைந்து தங்கத்தின் விலையும் குறையும்.

ஜூன் 8-ஆம் தேதி நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு 1136 ரூபாய் குறைந்திருக்கிறது. 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.142 குறைந்து ரூ.15,349-க்கும், 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.130 குறைந்து ரூ.14,070-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.1,136 குறைந்து ரூ.1,22,792-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.1040 குறைந்து ரூ.1,12,560-க்கும் விற்பனையாகிறது.

ஜூன் 8-ஆம் தேதி நிலவரப்படி வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளி 2,70,000 ரூபாயாக இருக்கிறது.

புதிதாக நகை வாங்க திட்டமிட்டவர்கள் இந்த விலை குறைவைப் பயன்படுத்தி பயனடையலாம். ஏனெனில் கடந்த 8 நாட்களாக விலைக் குறைவாக இருப்பதால் இனி வரும் காலத்திலும் இதே நிலை தொடரும் என்று சொல்ல முடியாது. நிபுணர்களும் வரும் காலத்தில் தங்கம் விலை அதிகரிக்கும் என்ற கருத்தையே முன்வைக்கின்றனர். இதில் எது உண்மை என்பது தங்க விலையை பொறுத்து தெரியவரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+