தங்கம் விலை சர்வதேச ஸ்பாட் சந்தையில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு 3 சதவீதம் வரையில் சரிந்த நிலையில், இந்திய ரீடைல் சந்தையில் கிராமுக்கு 500 ரூபாய்க்கும் அதிகமாகச் சரிந்து 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை 12,555 ரூபாய்க்கு வந்துள்ளது.
இதன் மூலம் கடந்த 8 மாதத்தில் காணப்படாத மோசமாகச் சரிவைத் தங்கம் இந்த வாரம் எதிர்கொள்ள உள்ளது.

அமெரிக்காவின் பணவீக்கம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது, இதேபோல் எரிபொருள் இருப்பும் வேகமாகக் குறைந்து வருகிறது. இதனால் டிசம்பர் மாத கூட்டத்தில் பெடரல் ரிசர்வ் கட்டாயம் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்பதால், மீண்டும் பத்திர சந்தையின் ஆதிக்கம் அதிகரித்து, டாலர் மதிப்பும் உயரக் கூட்டும் என்பதால் தற்போது தங்கம் விலை வேகமாகக் குறைந்து வருகிறது. டாலர் மதிப்பு இன்று 19 மாத உயர்வில் உள்ளது.
சர்வதேச ஸ்பாட் சந்தையில் 2.67 சதவீத சரிவுடன் 3,529.16 டாலருக்கு வர்த்தகமாகும் ஒரு அவுன்ஸ் தங்கம், அமெரிக்காவில் காமெக்ஸ் சந்தையில் 4.32 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
அமெரிக்க பெடரல் ரிசர்வால் தற்போது வட்டி விகித உயர்வைத் தவிர்க்க முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதால் முதலீட்டாளர்கள் திட்டமிட்டு வேகமாகத் தங்கம் மீதான முதலீட்டில் இருந்து வெளியேறுவதாலேயே தற்போது விலை வேகமாகச் சரிந்து வருகிறது.
அமெரிக்காவுக்கு முன்பு இந்தியாவில் ரெப்போ விகிதம் உயர்த்தப்படும் நிலை உள்ளது, இதனால் இந்தியச் சந்தையில் இருக்கும் முதலீட்டின் வெளியேற்றத்தை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியும்.
அதேபோல் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தினால் பெரும்பாலான உலக நாடுகள் தனது வட்டி விகிதத்தை உயர்த்தும். தற்போதைய சூழ்நிலையில் அமெரிக்காவின் பெட் 0.25 சதவீதம் அளவிலான வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு 97.3 சதவீதம் வாய்ப்புள்ளது என CME Fed watchtool தெரிவித்துள்ளது.
ஆனால் டிசம்பர் உலக நாடுகளுக்கு மிகவும் முக்கியமான பண்டிகை + வர்த்தக காலம் என்பதால் வட்டி உயர்வு மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. எனவே பெட் தலைவர் கெவின் வார்ஷ் வட்டி குறையும் வரையில் தங்கம் விலை தொடர் சரிவு பாதையில் தான் இருக்கும்.
தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது சர்வதேச பொருளாதாரத்திற்கு உண்மையிலேயே பெரிய பிரச்சனை. இதனால் தற்போது தங்கம் விலை உயர்த்தால் அடுத்த சப்போட் நிலை 3900 டாலராகும். இதேபோல் 200 நாள் SMA அளவு 4408.12 டாலராக உள்ளது. எனவே தங்கம் விலை தொடர் சரிவு பாதையில் இருந்தாலும், மீண்டும் உயர்வடைய துவங்கினால் வேமாக உயரும் என கணிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

