தங்கம் விலை 5840 ரூபாய் சரிவு.. அதிர்ச்சியில் மக்கள்.. இது வெறும் ட்ரைலர் தான் பாஸ்!

உலகம் முழுவதும் முக்கியமான முதலீட்டுச் சொத்தாகப் பார்க்கப்படும் தங்கம் நாளுக்கு நாள் தனது பொழிவை இழந்து வருகிறது, குறிப்பாக ஈரான் போர் துவங்கியதில் இருந்து தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து தேக்க நிலையிலேயே இருக்கிறது.

தற்போது ஈரான் போர் முடிந்தாலும் அமெரிக்க மத்திய வங்கி முதல் இந்திய ரிசர்வ் வங்கி வரையில் அனைத்தும் வட்டி விகிதத்தை உயர்த்தும் காரணத்தால் அதிக வட்டி, நிலையான வருமானம் தரும் கருவியாகப் பத்திர சந்தை மாறி வருகிறது. இதற்கு மத்தியில் தங்கமும், வெள்ளியும், தேவையற்ற முதலீடாக முதலீட்டாளர்கள் மத்தியில் உருவெடுத்துள்ளது.

தங்கம் விலை 5840 ரூபாய் சரிவு.. அதிர்ச்சியில் மக்கள்.. இது வெறும் ட்ரைலர் தான் பாஸ்!

இதன் தாக்கம் செப்டம்பர் மாதத்தில் தெளிவாகத் தெரிய வந்துள்ளது, சர்வதேசச் சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் விலை 7.04 சதவீதம் சரிந்து தற்போது 4145 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

இதேபோல் இந்தியாவில் இம்மாத துவக்கத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 1,54,640 ரூபாய் அளவில் இருந்து 1,48,800 ரூபாயாகக் குறைந்துள்ளது, இந்த 29 நாட்களில் தங்கம் விலை 5,840 ரூபாய் குறைத்தது மட்டும் அல்லாமல் 3.78 சதவீதம் சரிவைப் பதிவு செய்துள்ளது.

சர்வதேச சந்தைக்கும் இந்தியச் சந்தைக்கும் மத்தியிலான வித்தியாசம் குறைய மிக முக்கியமான காரணம் டாலர் - ரூபாய் மதிப்புக்கு மத்தியில் ஏற்பட்ட சரிவு தான். FCNR வைப்பு நிதி வாயிலாக 12 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய செலாவணியை உருவாக்கினாலும் ரூபாய் மதிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் மீண்டும் 96 ரூபாய் வரையில் சரிந்துள்ளது ரிசர்வ் வங்கிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

சரி தங்கம் விலை மீதான சரிவு இதோடு நின்றுவிடுமா அல்லது தொடருமா என பார்த்தால் 3 முக்கிய காரணத்தால் தங்கம் விலை தொடர்ந்து சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் உயர்வு, அதிகரிக்கும் பணவீக்கம், பெடரல் ரிசர்வ் அடுத்த நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படும் காரணத்தால் முதலீட்டு சந்தையில் தங்கத்திற்கான தேவை குறைந்துள்ளது.சமீபத்தில் பெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 3.75 -4 சதவீதமாக உயர்த்தியது.

அக்டோபர் மாதம் நடக்கும் நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு 68 சதவீத வாய்ப்புகள் உள்ளது. அமெரிக்காவில் அதிகரித்திருக்கும் பணவீக்கமும், அதிகரித்துள்ள வேலைவாய்ப்பு மூலம் மக்கள் கைகளில் உயர்ந்துள்ள வருமானமும் பணவீக்கத்தை மேலும் மோசமாக்கி அந்நாட்டின் பொருளாதாரத்தைப் பெரிய அளவில் பாதிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது, இதனால் நாணய கொள்கையில் தொடர்ந்து கடுமையான நிலைபாட்டை கொண்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வட்டி விகிதம் உயர்வு தங்கத்திற்கு எதிராக மாறும் என கணிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+