தங்கம் விலை தொடர் சரிவால் மக்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர், ஏற்கனவே ஒரு சவரன் தங்கம் விலை 1 லட்சம் ரூபாய்க்குக் கீழ் குறைந்துள்ளதைக் கொண்டாடும் மக்களுக்கு அடுத்த இன்ப அதிர்ச்சியாக இன்று தங்கம் விலை கிராமுக்கு 278 ரூபாய்க்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.
ஏற்கனவே தமிழ் குட்ரிட்டன்ஸ் கணித்தது போல் பணவீக்கம் அதிகரிப்பால் மத்திய வங்கிகள் குறிப்பாக அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ், இந்திய ரிசர்வ் வங்கி தங்களுடைய பென்ச்மார்க் வட்டி விகிதங்களை உயர்த்தும் காரணத்தால் டாலர் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து, பத்திர முதலீட்டின் மீதான வட்டி லாபமும் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கும் காரணத்தால் தங்கம் விலை தொடர்ந்து குறையும்.

இதன் எதிரொலியாகத் தங்கம் விலை கடந்த 6 -7 நாட்களாகத் தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 278 ரூபாய் குறைந்து 13,326 ரூபாயாகக் குறைந்துள்ளது. மேலும் ஒரு சவரன் தங்கம் விலை 2040 ரூபாய் குறைந்து 97,720 ரூபாயாகச் சரிந்துள்ளது, இதன் மூலம் திருமணத்திற்காக நகை வாங்குவோருக்கு இந்த விலை சரிவு மிகப்பெரிய ஜாக்பாட் ஆகப் பார்க்கப்படுகிறது.
இதைவிட முக்கியமாக நவம்பர் மாதம் தங்கம் விலை அதிகப்படியாக 5ஆம் தேதி 24 கேரட் தங்கம் விலை ஒரு கிராம் 14,602 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 13,326 ரூபாயாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் கடந்த 13 நாளில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 12,760 ரூபாய் குறைந்துள்ளது பெரும் அதிர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.
இது புதிதாகத் தங்கம் வாங்குவோருக்கு ஜாக்பாட் ஆக இருந்தாலும், ஏற்கனவே தங்கம் வாங்கி வைத்துள்ளவர்களுக்கும், நகைக் கடன் வாங்கியவர்களுக்கும் பெரும் நெருக்கடியை உருவாக்கும்.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று பெரியளவில் குறைந்துள்ளது, கிராமும் 5 ரூபாய் குறைந்து 1 கிலோ வெள்ளி விலை 1,85,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை கிராமுக்கு 218 ரூபாய் குறைந்து 10 கிராம் விலை 2,180 ரூபாயாக உள்ளது.
இதேபோல் இன்று எம்சிஎஸ் சந்தையில் தங்கம் விலை 2 சதவீதம் சரிந்து 1,31,471 சதவீதம் வரையில் சரிந்து அதிர வைத்துள்ளது. மேலும் வெள்ளி விலை ஒரு கிலோ 3 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்து 1,64,555 ரூபாயாக உள்ளது.
சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு ட்ராய் அவுன்ஸ் தங்கம் விலை 2 சதவீதம் வரையில் சரிந்து 3,776.10 டாலராக குறைந்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வரும் வேளையில் தங்க பியூச்சர்ஸ்-ல் முதலீடு செய்வோர் எண்ணிக்கை 3.79 சதவீதம் வரையில் குறைந்துள்ளது. இதேபோல் எஞ்சிய முதலீட்டாளர்களும் கிடைக்கும் லாபத்தை எடுத்துக்கொண்டு ஓடி வருகிறார்கள்.
மேலும் தங்கம், வெள்ளி ஆகிய இரண்டும் அதன் சப்போர்ட் அளவை காட்டிலும் குறைந்திருக்கும் வேளையில் இனி வேகமாக சரியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications