தமிழ்நாட்டில் தங்கம் விலை கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது. ஜூன் தொடக்கத்திலிருந்தே படிப்படியாக சரிவடைந்து வந்த தங்கம் மாதத்தின் கடைசி நாளான இன்று சவரனுக்கு 2000 ரூபாய்க்கு மேல் சரிவடைந்து மக்களுக்கு நிம்மதியை தந்திருக்கிறது.
இன்றைய தினம் ஆபரண தங்கத்தின் விலை 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. ஜூன் மாதம் 1ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் சென்னை, மதுரை ,கோவை உள்ளிட்ட பிரதான நகரங்களில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமின் விலை 14,500 ரூபாயாக இருந்தது. இதனை அடுத்து படிப்படியாக சரிவடைந்த தங்கம் விலை ஜூன் மாதத்தின் கடைசி நாளான இன்று பெரிய சர்ப்பிரைஸை தந்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 270 ரூபாய் விலை குறைந்திருக்கிறது ஒரு சவரனுக்கு 2,160 ரூபாய் விலை சரிவடைந்து இருக்கிறது.சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இன்றைய தினம் ஆபரண தங்கம் ஒரு கிராம் 13,030 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 1,04,240 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடர்ச்சியாக உயர்ந்து வந்த தங்கம் கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதி ஒரு சவரன் 1.33 லட்சம் ரூபாய் என்ற வரலாற்று உச்சபட்ச விலையை எட்டியது. ஜனவரி மாதத்திற்கு பிறகு முதன்முறையாக ஆபரண தங்கம் ஒரு கிராம் விலை 13,030 ருபாய் என சரிவடைந்து இருக்கிறது. அதாவது இந்த ஆறு மாதங்களில் இல்லாத விலை வீழ்ச்சி இன்று ஏற்பட்டிருக்கிறது.
வரலாற்று உச்சபட்ச விலையிலிருந்து தங்கத்தின் விலை 29,000 ரூபாய் வரை சரிவடைந்து இருக்கிறது. இந்த மாதத்தில் மட்டும் என பார்க்கும்போது தங்கத்தின் விலை சராசரியாக 10 % குறைந்திருக்கிறது. அதாவது ஒரு கிராமுக்கு 1470 ரூபாயும் ஒரு சவரனுக்கு 11,760 ரூபாயும் விலை சரிவடைந்து இருக்கிறது.
வெள்ளியின் விலையும் இன்றைய தினம் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் விலை குறைந்து 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜூன் 1ஆம் தேதி வெள்ளி ஒரு கிராம் 290 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது அந்த வகையில் ஒரு கிராமுக்கு 50 ரூபாயும் ஒரு கிலோவுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வெள்ளியின் விலை குறைந்திருக்கிறது. வரலாற்று உச்சத்தில் இருந்து வெள்ளி விலை கிலோவுக்கு 1.85 லட்சம் ரூபாய் விலை குறைந்துள்ளது.
தங்கம், வெள்ளி வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் வீட்டில் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களை நடத்துபவர்கள் இன்றைய வாய்ப்பை தவற விடாமல் தங்கம், வெள்ளியை வாங்கி வைப்பது நல்லது. வழக்கமாக தங்க நகை வாங்கும் போது தங்கத்திற்கான விலையும் செய்கூலி சேதாரம், ஜிஎஸ்டி ஆகியவையும் செலுத்துகிறோம். எனவே தங்கம் விலை குறையும் போது நாம் செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டியாக செலுத்தும் தொகையும் குறைகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

