தங்கம் விலை சரிவால் நகை கடைகள் திண்டாட்டம்.. கல்யாண் ஜுவல்லர்ஸ், தங்கமயில் ஜுவல்லரி நிலைமையை பாத்தீங்களா..?

அமெரிக்க பெடரல் ரிசர்வ்-ன் வட்டி விகித உயர்வு கணிப்பு, டாலர் மதிப்பின் வலிமை ஆகியவற்றின் மூலம் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் வேளையில், தங்க நகை கடை பங்குகளும், தங்கம் வைத்து கடன் கொடுக்கும் நிதி நிதி நிறுவனங்களும் தற்போது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையாக மாறியுள்ளது.

தங்கம் விலை சரிவு இவ்விரு பிரிவையும் கடுமையாகப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை சரிவால் நகை கடைகள் திண்டாட்டம்.. கல்யாண் ஜுவல்லர்ஸ், தங்கமயில்  ஜுவல்லரி நிலைமையை பாத்தீங்களா..?

நவம்பர் மாதம் தங்கம் விலை அதிகப்படியாக 5ஆம் தேதி 24 கேரட் தங்கம் விலை ஒரு கிராம் 14,602 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 13,326 ரூபாயாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் கடந்த 13 நாளில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 12,760 ரூபாய் குறைந்துள்ளது பெரும் அதிர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.

தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு மக்கள் மத்தியில் தங்க நகை வாங்குவதை ஊக்குவித்தாலும், முந்தைய காலாண்டில் அதிகப்படியான தங்கம் விலை உயர்வால் நகை கடைகள் பெற்றுவந்த அதிகப்படியான வருமானம் தற்போதைய விலை சரிவால் பாதிக்கக் கூடும்.

இதேபோல் தங்க நகையை வைத்து கடன் கொடுக்கும் NBFC நிறுவனங்கள், விலை அதிகமாக இருக்கும் போது அதிக கடன் கொடுத்திருக்கும், தற்போது விலை குறைந்துள்ளதால் அடமானத்தில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு குறையும்.

Also Read

இது பெரும் சுமையாக மாறக்கூடும் என்பதால் இவ்விரு பிரிவும் தற்போது முதலீட்டாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் தங்க நகை மற்றும் தங்க நகை கடன் நிறுவனப் பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளன.

டாடா குழுமத்தின் நகை விற்பனை நிறுவனமான டைட்டன் நிறுவனப் பங்கு 4.11 சதவீதம் சரிந்துள்ளது. இதேபோல் கல்யாண் ஜுவல்லர்ஸ் 4.57 சதவீதம், தங்கமயில் ஜுவல்லரி பங்குகள் 3.5 சதவீதம், பிசி ஜுவல்லர் 2.05 சதவீதம், பிஎன்ஜி ஜுவல்லர்ஸ் 0.18 சதவீதம், சென்கோ கோல்டு 2.32 சதவீதம் சரிந்தன.

அதேபோல் முத்தூட் ஃபைனான்ஸ் 3.53 சதவீதம், மணப்புரம் ஃபைனான்ஸ் 5.12 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளன. இதற்கு மாறாக, ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸ் பங்கு 5.95% உயர்ந்தது, இதற்கு முக்கிய காரணம் இன்று நடந்த பிளாக் டீல்.

அமெரிக்காவில் பணவீக்கம் 4 சதவீதத்தை காட்டிலும் அதிகமாக இருக்கும் காரணத்தால், பெடரல் ரிசர்வ் பொருளாதார வல்லுனர்களின் முந்தைய எதிர்பார்த்ததைவிடக் கடுமையான நாணய கொள்கையை கடைப்பிடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதனால் டிசம்பர் மாதம் பெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்துவதற்கு 95.7 சதவீத வாய்ப்பு இருப்பதாக முதலீட்டாளர்கள் கணித்துள்ளனர். இதன் எதிரொலியாக தற்போது தங்கம் விலை அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+