ஈரான் போர் தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படவில்லை. இதனால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்வு கண்டுள்ளன. இதனால் பல நாடுகளிலும் பெட்ரோல், டீசல் விலைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் விரைவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி மக்கள் எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என கூறி இருந்தார்.
மக்கள் ஓராண்டு காலத்திற்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்ற மோடியின் வேண்டுகோளை அடுத்து இந்திய சந்தையில் தங்கம் விலை என்ன ஆனது? சென்னையில் ஆபரண தங்கம் விலை குறைந்ததா , உயர்ந்ததா என்பதை தெரிந்து கொள்ளலாம். சென்னையில் வாரத்தின் முதல் நாளான இன்று சில்லறை விற்பனையில் ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,150 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 50 ரூபாய் குறைந்து 14,100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,13,200 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று ஒரு சவரனுக்கு 400 ரூபாய் விலை சரிந்து 1,12,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை குறைந்திருந்தாலும் வெள்ளி விலை உயர்வு கண்டுள்ளது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் விலை குறைந்துள்ளது. நேற்று 275 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெள்ளி இன்று 5 ரூபாய் விலை கூடி 280 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் இன்று 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 55 ரூபாய் விலை குறைந்து 15,382 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் தங்கம் 550 ரூபாய் விலை சரிவடைந்து 1,53,820 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கக்கூடிய 18 கேரட் தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது. சென்னையில் நேற்று 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,810 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று 40 ரூபாய் விலை குறைந்து 11,770 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 320 ரூபாய் விலை சரிவடைந்து 94,160 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் அந்நிய செலாவணி இருப்பை பாதுகாக்க மக்கள் தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் அடுத்த ஓராண்டு காலத்திற்கு தங்கம் வாங்காதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிலையில் இன்றைய தினம் தங்கம் விலை சரிவடைந்து இருக்கிறது. கூடிய விரைவில் மக்கள் தங்கம் வாங்குவதை கட்டுப்படுத்தும் நோட்டில் மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தலாம் என சொல்லப்படுகிறது. இவ்வாறு இறக்குமதி வரி உயர்த்தப்பட்டால் இந்தியாவில் தங்கத்தின் விலை உயரும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

