ரூ.4,000க்கும் மேல் குறைந்த தங்கம் விலை.. ஒரே வாரத்தில் தங்கம் விலையில் நடந்த தலைகீழ் மாற்றம்..!!

வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கள்கிழமையான இன்று தங்கம் விலை தடாலடியாக குறைந்து மக்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் விலை சரிவிலேயே தொடங்கி இருப்பதால் இனி வரும் நாட்களிலும் தங்கம் விலை சரிவில் தான் இருக்க போகிறதா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 235 ரூபாய் விலை சரிந்து 13,765 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,880 ரூபாய் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,10,120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ரூ.4,000க்கும் மேல் குறைந்த தங்கம் விலை.. ஒரே வாரத்தில் தங்கம் விலையில் நடந்த தலைகீழ் மாற்றம்..!!

செப்டம்பர் மாதத்தில் தங்கம் விலை ஒரே நாளில் இப்படி அதிகளவு விலை குறைவது இதுவே முதல் முறையாகும். கடந்த வாரத்தில் 6 வர்த்தக நாட்களில் ஒரு நாளை தவிர மீதமுள்ள 5 நாட்கள் தங்கம் விலை குறைந்தது. அப்படி பார்த்தால் கடந்த திங்கள் முதல் இந்த திங்கள் வரையிலான ஒரு வார காலத்தில் ஆபரண தங்கம் விலை ஒரு கிராமுக்கு 520 ரூபாயும் ஒரு சவரனுக்கு 4,160 ரூபாயும் விலை குறைந்துள்ளது.

செப்டம்பர் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை ஒரு ஏறுவது மறுநாள் சரிவது என ஏற்ற இறக்கமாகவே இருந்தது. முதல் இரண்டு வாரங்கள் குழப்பத்தை ஏற்படுத்திய தங்கம், மூன்றாவது வாரத்தில் இருந்து விலை குறைந்து வருகிறது.

Also Read

24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 256 ரூபாய் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிராம் 15,017 ரூபாய்க்கும் 10 கிராம் 1,50,170 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,535 ரூபாய்க்கும், ஒரு சவரன் 92,280 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

Recommended For You

வெள்ளியின் விலையும் இன்று மாற்றமடைந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் விலை சரிந்து 245 ரூபாய்க்கும் ஒரு கிலோ 5000 ரூபாய் விலை சரிந்து 2.45 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. ஈரான் அமெரிக்கா போர், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலர் மதிப்பு ஆகியவை தான் தங்கம், வெள்ளி விலைகளை நிர்ணயம் செய்யும் காரணிகளாக உள்ளன. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டு விலை 4,197 டாலர்களாக சரிந்துள்ளது அதுவே தமிழ்நாட்டிலும் தங்கம் விலை குறைய காரணம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+