தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக தங்கம் விலை குறைந்து மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்து வருகிறது. கடந்த 2 வாரங்களாகவே தங்கம் விலை வேகமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. உலக சந்தையில் தங்கம் விலை குறைந்து வருவதே இந்தியாவிலும் விலை குறைய காரணம். முதலில் சென்னை,மதுரை , திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை 470 ரூபாய் குறைந்து 11,510 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 3,760 ரூபாய் விலை சரிந்து 92,080 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த மாதத்திலேயே ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 3,760 ரூபாய் விலை குறைவது இன்று தான்.

தங்கம் விலை தொடர்ந்து 9ஆவது வர்த்தக நாளாக விலை குறைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 9 வர்த்தக நாட்களில் மட்டும் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 1,700 ரூபாயும் ஒரு சவரனுக்கு 13,600 ரூபாயும் விலை சரிந்துள்ளது. 10 கிராமுக்கு 17,000 ரூபாய் விலை குறைந்துள்ளது. இது வரலாற்றிலேயே இல்லாத விலை வீழ்ச்சி ஆகும். தங்கம் விலை தனது வரலாற்று உச்சபட்ச விலையில் இருந்து சவரனுக்கு 40,000 ரூபாய் விலை குறைந்துள்ளது.
24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 12,557 ரூபாய்க்கும் 10 கிராம் 1,25,570 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரே நாளில் 10 கிரமுக்கு 5000 ரூபாய்க்கு மேல் விலை குறைந்துள்ளது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 9,420 ரூபாய்க்கும் ஒரு சவரன் 75,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் விலை குறைந்து ஒரு கிராம் 175 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 5000 ரூபாய் விலை சரிந்து 1.75 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை அதன் வரலாற்று உச்சபட்ச விலையில் இருந்து கிராமுக்கு 250 ரூபாயும் கிலோவுக்கு 2.50 லட்சம் ரூபாயும் விலை குறைந்துள்ளது.
உலக சந்தையில் தங்கம், வெள்ளி விலைகள் தாறுமாறாக குறைந்து வருகின்றன. இது தான் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கிறது. அமெரிக்க மத்திய வங்கி கூட்டம் அடுத்த மாதம் நடக்க உள்ளதால் அதில் வட்டி உயர்த்தப்படும் என்ற 100% நம்பிக்கையில் முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்பனை செய்கின்றனர். இதனால் தங்கம் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. கடந்த ஓராண்டில் இல்லாத அளவாக ஒரு அவுன்ஸ் தங்கம் 3,544 டாலர்களாக இருக்கிறது. ஒரு அவுன்ஸ் வெள்ளி 41 டாலர்களாக விலை சரிந்துவிட்டது.
எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 1.22 லட்சம் ரூபாயாக சரிந்துள்ளது. தங்கம் விலை இன்னமும் விலை குறையவே வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அடுத்த மாதம் அமெரிக்க மத்திய வங்கி வட்டியை உயர்த்தினால் இன்னமும் கூட தங்கம் விலை சரியும் என தெரிவிக்கின்றனர். வீட்டு விஷேசங்களுக்கு தங்கம் வாங்க வேண்டியவர்களுக்கு இது பொன்னான வாய்ப்பு என்கின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

