தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ஈரான் போர் நம் அன்றாட வாழ்க்கையில் பல தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எல்பிஜி தட்டுப்பாடு, உணவு பொருட்கள் விலை உயர்வு, டீ, காஃபி விலை உயர்வு என மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். இந்த சிக்கல்களுக்கு மத்தியில் ஒரே ஆறுதலாக இருப்பது தங்கம் விலை சரிவு தான்.

ஈரான் போர் தொடங்கியது மார்ச் 28ஆம் தேதி. வழக்கமாக போர் நடந்தால் தங்கம் விலை உயரும் ஆனால் இந்த முறை விலை சரிந்துள்ளது. மார்ச் முழுவதுமே தங்கம், வெள்ளி விலை பெரிய அளவில் சரிவடைந்தது. ஏப்ரல் மாதமும் இதே நிலை நீடிக்குமா என நகை பிரியர்கள் காத்திருந்தனர். ஆனால் ஏப்ரல் 1ஆம் தேதியான நேற்று தங்கம் விலை உயர்ந்தது.

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

இந்த மாதம் முழுவதும் இப்படி தான் விலை உயரும் என மக்கள் சோகமடைந்த நிலையில் இன்று காலை முதல் தங்கம் விலை குறைய தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஏப்ரல் மாதமும் தங்க நகை வாங்குவதற்கு சிறப்பான ஒரு மாதமாகவே இருப்பது போல தோன்றுகிறது. ஏனெனில் ஈரான் போர் தீவிரமடைய தீவிரமடைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையும்.

போர் காரணமாக கச்சா எண்ணெயின் விலை அதிகரித்திருப்பதால் சர்வதேச முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை கச்சா எண்ணெயிலும் அமெரிக்க டாலரிலும் முதலீடு செய்கின்றனர். இதனால் தங்கம், வெள்ளியில் முதலீடு குறைந்து டிமாண்ட் குறைந்த அவற்றின் விலை குறைகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் மீது அடுத்த இரண்டு மூன்று வாரங்களுக்கு தீவிர தாக்குதல் நடத்துவதாக தெரிவித்திருக்கிறார்.

அதேபோல ஈரானும் எதிரிகள் சரணடையும் வரை போரிடுவோம் என கூறியிருக்கிறது. எனவே அடுத்த சில வாரங்களுக்கு போர் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிவிட்டது. இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருப்பதால் தங்கம் விலை சரிவடைந்து இருக்கிறது. அந்த வகையில் சென்னையில் இன்று காலை, மாலை என இரண்டு வேளை தங்கத்தின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 14,050 ரூபாய்க்கு விற்பனையானது ஒரு சவரன் தங்கம் 1,12,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்று காலை ஒரு கிராம் ஆபரண தங்கம் 100 ரூபாய் விலை குறைந்து 13,950 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,11,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த சூழலில் மாலையிலும் தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது.

பிற்பகல் 3:30 மணியளவில் சென்னை நகை விற்பனையாளர்கள் சங்கம் தங்கத்தின் விலையை குறைத்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இதன்படி மாலையில் சென்னையில் தங்கத்தின் விலை காலையுடன் ஒப்பிடும்போது ஒரு கிராம் 200 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. அதாவது 13,750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 1,10,000க்கு விற்பனையாகிறது.

நேற்று விலையுடன் ஒப்பிடும்போது சென்னையில் தற்போது தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 300 ரூபாயும் ஒரு சவரனுக்கு 2400 ரூபாயும் விலை குறைந்திருக்கிறது. வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை இன்று காலையில் இருந்ததை போலவே ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஈரான் போர் தீவிரமடையும் பட்சத்தில் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+