ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வந்த தங்கம் விலை, சமீபத்திய தினங்களாக திடீரென தடம் மாறி சரிவை சந்தித்தது சாமானிய மக்கள் முதல் பெரிய முதலீட்டாளர்கள் வரை அனைவரையும் சந்தோஷத்தில் திகைக்க வைத்துள்ளது. ஆனால் இன்னும் விலை குறையும் என்று காத்திருப்பதா அல்லது இதுதான் தங்கம் வாங்க சரியான நேரம் என்று இப்போதே முந்திக்கொள்வதா? என்ற குழப்பமும் நீடித்து வருகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் போர் பதற்றங்கள், அமெரிக்க டாலரின் அதிரடி எழுச்சி மற்றும் மத்திய வங்கிகளின் திடீர் முடிவுகள் என தங்கத்தின் போக்கை மாற்றும் காரணிகள் பலவும் உண்டு. ஒருபுறம் 1 லட்சம் ரூபாய் என்ற இலக்கை நோக்கி தங்கம் பாயும் என கணிக்க பட்டாலும், தற்போதைய இந்த திடீர் சறுக்கல் முதலீட்டாளர்களுக்கு பொன்னான வாய்ப்பா அல்லது ஆபத்தான எச்சரிக்கையா? 2026-ல் தங்கத்தின் எதிர்காலம் என்ன? நிபுணர்கள் முன்வைக்கும் அனல் பறக்கும் கணிப்புகளின் முழு விவரம் இதோ..

கடந்த வர்த்தக தினத்தில் 4% மேலாக சரிந்த தங்கம் விலை, தொடர்ந்து ஏழாவது நாளாக சரிவில் காணப்படுகிறது. மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் உள்ளிட்ட காரணிகள் மத்தியில், பொருளாதாரத்தில் நிச்சயமற்ற சூழலே காணப்படுகிறது. குறிப்பாக எரிபொருள் விலைகள் தாறுமாறாக ஏற்றம் கண்டு வருவது, பணவீக்கத்தை எகிற வைத்துள்ளது. இதனிடையே மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை மாற்றம் செய்யாமல் உச்சத்தில் அப்படியே வைத்திருக்கலாம் என்ற நிலையே காணப்படுகிறது. இந்த சூழலில் தான் தங்கம் விலையானது 7 வது நாளாக தொடர்ந்து வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது. பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து பார்க்கும்போது மிக குறைவான விலையாக, ஒரு அவுன்ஸ் தங்கம் விலையானது 4.3% குறைந்து, 4,612.21 டாலரை எட்டியுள்ளது. இதே வரும் ஏப்ரல் மாதத்திற்கான டெலிவரிக்கான தங்கத்தின் விலை 5.95 குறைந்து, 4,605.70 டாலராகவும் காணப்படுகிறது. இந்த சூழலில் இனி எப்படி இருக்கும், சரிவு தொடருமா என்ற கேள்வியும் முதலீட்டாளர்கள் மத்தியில் காணப்படுகிறது.
வழக்கமாக பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங்காக பார்க்கப்படும் தங்கம், புவிசார் அரசியல் பதற்றங்கள் என சில காரணிகளுக்கு மத்தியில் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படும். ஆனால் வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அமெரிக்கா உள்பட பல்வேறு மத்திய வங்கிகளும் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் உச்சத்திலேயே வைத்துள்ளன. ஆக வங்கி சார்ந்த முதலீடுகள் உள்ளிட்டவற்றில் பணம் போட்டால் அதிக வருமானம் கிடைக்கலாம். இதனிடையே தான் தங்கத்தில் முதலீடுகள் குறையத் தொடங்கியுள்ளன. தங்கத்தில் இருக்கும் முதலீடுகளும் வெளியேறத் தொடங்கியுள்ளன.
அதிலும் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர, இன்னும் வட்டி விகிதங்களை உயர்த்த தயாராக இருப்பதாக மத்திய வங்கிகள் கூறியிருப்பது, இன்னும் தங்கத்தின் மீதான மோகத்தை குறைத்துள்ளது. இது குறித்து டிடி செக்யூரிட்டீஸ் ஆனது, கடந்த ஓராண்டாக தங்கம் ஒரு வலுவான இடத்தில் இருந்தது. ஆனால் இப்போது அதன் அடித்தளம் பலவீனமடைந்து வருகிறது. குறுகிய காலத்தில் தங்கம் விலை இன்னும் சரிவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்துள்ளது.
ஈரான் இஸ்ரேல் இடையிலான போரும் தற்போதைக்கு முடிவுக்கு வரும் என்பதாக தெரியவில்லை. இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் மற்ற நாடுகளின் எண்ணெய் வளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் நீண்ட கால போக்கு மாறாது என்றாலும், தற்போதைக்கு தங்கம் விலை சரியவே வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?



Click it and Unblock the Notifications