தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என புலம்பி வந்த மக்களுக்கு அடுத்தடுத்து நல்ல செய்தி காத்திருக்கிறது என்றால் மிகையில்லை. தங்கம் எப்போதும் இந்திய சந்தையை சார்ந்து இருக்காது, சர்வதேச சந்தையை தான் அதிகளவில் நம்பியிருக்கும். குறிப்பாக அமெரிக்க முதலீட்டு சந்தை.
அமெரிக்கா ஈரான் மீது போர் தொடுத்தது பெரும் தவறு என அந்நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கத்தையும், முதலீட்டு முடிவுகளையும், நிதி நிலையில் படம் போட்டு காட்டுகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்று தடாலடியாக குறைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை. ஆனால் இதற்கான காரணம் தான் முக்கியமான பேசு பொருளாக உள்ளது.
இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் கணிசமான சரிவு பதிவாகியுள்ளது. சர்வதேச அரசியல் பதற்றம் மற்றும் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான செய்திகளின் தாக்கம், நேரடியாக தங்க விலையில பிரதிபலித்துள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
இன்றைய சந்தை நிலவரப்படி, 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.13,620 ஆக உள்ளது. இது நேற்றை விலையை விட ரூ.330 குறைவாகும். அதேபோல், 18 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.11,360 ஆகக் குறைந்து, ரூ.280 சரிவை பதிவு செய்துள்ளது. வெள்ளி விலையும் குறைந்துள்ளது, ஒரு கிராம் வெள்ளி ரூ.250 ஆக இருப்பதுடன் இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.
இந்த சரிவு, முதலீட்டாளர்களுக்கும் நகை வாங்குபவர்களுக்கும் முக்கியமான பார்க்கப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து குறையும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்கள் காத்திருந்து தங்கத்தை வாங்குவது நல்லது. இதேபோல் தங்கத்தை நீண்ட கால முதலீடாக பார்க்கும் மக்களுக்கு தங்கத்திற்கு புதிய பேஸ் விலை உருவாகியிருப்பதை கவனிக்க வேண்டும்.
சர்வதேச சந்தை தாக்கம்
சர்வதேச அளவில், ஸ்பாட் தங்கம் விலை விலை 3.45% குறைந்து, ஒரு அவுன்ஸ் $4,491.15.64 ஆக பதிவாகியுள்ளது, வெள்ளிக்கிழமை அமெரிக்க வர்த்தக சந்தையில் 4,477.82 டாலர் வரையில் குறைந்தது குறிப்பிடத்தக்கது. நேற்றைய ஆசிய சந்தை வர்த்தகத்தின் ஆரம்பத்தில் 1% உயர்ந்திருந்தாலும், பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக திடீர் சரிவு ஏற்பட்டது.
மேலும், அமெரிக்காவின் ஏப்ரல் மாத டெலிவரிக்கான அமெரிக்க தங்க ஃப்யூச்சர்ஸ் விலை 0.7% குறைந்து $4,574.90 ஆக உள்ளது. இந்திய சந்தையில் தங்கம் பியூச்சர்ஸ் மதிப்பு 0.23 சதவீதம் உயர்ந்து 1,44,825 ரூபாயாக உள்ளது.
அமெரிக்கா ராணுவ நகர்வு
அமெரிக்கா மத்திய கிழக்கில் கூடுதல் ராணுவப்படைகளை அனுப்புகிறது என்ற தகவல் வெளிவந்ததும், உலக சந்தைகளில் அச்சம் அதிகரித்தது. Donald Trump தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை, எண்ணெய் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
டாலர் வலிமை
இதனால் அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்ததும், அமெரிக்க அரசு பத்திரங்களின் வருமானம் (Treasury yields) அதிகரித்ததும் தங்க விலையை கீழே தள்ளியுள்ளது. பொதுவாக டாலர் வலுப்பெற்றால், பிற நாணயங்களை பயன்படுத்தும் முதலீட்டாளர்களுக்கு தங்கம் வாங்குவது அதிக செலவாக மாறுகிறது. இதனால் தங்கத்தின் தேவையும் குறைகிறது.
பணவீக்கம் மற்றும் வட்டி விகிதம்
எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலகளாவிய பதற்றம் காரணமாக பணவீக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும். வட்டி விகிதம் உயர்ந்தால், தங்கத்தில் முதலீடு செய்வது பெரிய அளவில் குறையும், மேலும் வட்டி வருமானம் அதிகம் தரும் முதலீடுகள் மீது முதலீட்டாளர்கள் கவனம் செலுத்துவார்கள். இதுவும் தங்க விலை குறைவுக்கு முக்கிய காரணமாகும்.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவு, ஒரு சாதாரண சந்தை மாற்றம் அல்ல; இது உலக அரசியல், அமெரிக்க ராணுவ நடவடிக்கைகள், டாலர் வலுப்பாடு மற்றும் பணவீக்கம் ஆகிய பல காரணிகளின் கூட்டு பாதிப்பாகும். இந்த பாதிப்பை கண்டு உடனே தங்கத்தை வாங்குவதை காட்டிலும், காத்திருந்து விலையின் போக்கை கணித்து வாங்குவது சிறந்தது, காரணம் ஈரான் போர் உடனே முடியும் என்ற நிலைப்பாடு கண்ணுக்கு எட்டும் தூரம் வரையில் தெரியவில்லை. இதனால் டாலர் மதிப்பு உயரும் வரையிலும், போர் முடியும் வரையிலும் தங்கத்திற்கு சந்தையில் வேலையில்லை என்பது தான் நிதர்சனமாக உண்மை.
More From GoodReturns

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!



Click it and Unblock the Notifications