பட்டென விழுந்த தங்கம் விலை.. அமெரிக்க சந்தையில் நடந்த முக்கிய விஷயம்..!

தங்கம் விலை நாளுக்கு நாள் குறைந்து வருவது முதலீடு சந்தையில் பெரும் தடுமாற்றத்தை உருவாக்கியுள்ளது என்றால் மிகையில்லை, வெள்ளிக்கிழமை அமெரிக்க சந்தையில் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 1.48 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

கடந்த ஒரு மாதமாக தினசரி அடிப்படையில் சராசரியாக 0.5 சதவீதம் மட்டுமே ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் பெடரல் ரிசர்வ் முடிவுகள் வெளியான அடுத்த 24 மணிநேரத்தில் முதலீட்டு சந்தையில் ஏற்பட்ட மாற்றம் தங்கம் விலை பெரும் சரிவுக்கு ஈட்டுச்சென்றது.

பட்டென விழுந்த தங்கம் விலை.. அமெரிக்க சந்தையில் நடந்த முக்கிய விஷயம்..!

தங்கம் விலை பெரிய அளவில் சரிவுக்கு தள்ள 2 முக்கியமான காரணம் உள்ளது. முதல் காரணம் ஜப்பான் அரசும் அந்நாட்டு மத்திய வங்கியும் யென் மதிப்பை சரி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் பெரும் முதலீடாக திகழ்ந்த டாலரின் மதிப்பு பெரிய அளவில் குறைந்துள்ளது.

இதனால் தங்கம் மீதான முதலீடுகள் வெளியேறி டாலருக்கு சென்ற கதை மாறி தற்போது பத்திர சந்தைக்கு அனைத்தும் இடமாறி வருகிறது.

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் டாலர் குறியீடான DXY யாரும் எதிர்பார்க்காத வகையில் 99.80 ஆக குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக தங்கம் விலை ஸ்பாட் சந்தையில் 1.48 சதவீதம் குறைந்து ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 4042.67 டாலராக குறைந்துள்ளது. இதே வேளையில் 10 வருட அமெரிக்க அரசு பத்திரத்தின் வட்டி வருமானம் 4.745 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் மட்டும் சுமார் 0.075% அதிகரித்துள்ளது.

பொதுவாக டாலர் மதிப்பு குறைந்தால் தங்கம் விலை உயர வேண்டும், ஆனால் செப்டம்பர் கூட்டத்தில் வட்டி விகித உயர்வு கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கும் காரணத்தால் தங்கம் தனது முக்கியதுவத்தை சந்தையில் இழந்துள்ளது.

இதேவேளையில் போர் அச்சம் குறைந்து கச்சா எண்ணெய் விலை குறைந்தால் டாலர் மதிப்பு குறைந்தாலும் தங்கம் விலை உயரும். இந்த நிலையில் இன்று சென்னை ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 35 ரூபாய் சரிந்து 13,220 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 4வது நாளாக 235 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+