வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, திங்கட்கிழமை (பிப்ரவரி 16) தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சரிந்துள்ளன. அமெரிக்காவில் ஜனவரி மாதம் பதிவான பணவீக்க தரவுகளால் சமீபத்தில் $5,000-ஐ கடந்திருந்த தங்கம், இப்போது முதலீட்டாளர்களின் மூலம் லாபம் பார்க்க முடிவு செய்துள்ள காரணத்தால் அதிகப்படியான விற்பனை மூலம் பெரும் சரிவை சந்தித்துள்ளது.
இதன் எதிரொலியாக இன்று தங்கம் விலை ரீடைல் சந்தையில் சற்று குறைந்துள்ளது. 24 காரட் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.15,753 ஆக உள்ளது, இது சனிக்கிழமை விலையை விட ரூ.131 குறைவாகும். இதன் மூலம் இன்று 100 கிராம் 24 கேரட் தங்கம் விலை 13,100 ரூபாய் சரிந்துள்ளது.

மேலும் 22 காரட் தங்கம் விலை இன்று ரூ.14,440 ஆக உள்ளது, இது சனிக்கிழமை விலையை விட ரூ.120 குறைவாகும், 18 காரட் தங்கம் விலை 100 ரூபாய் குறைந்து ரூ.12,350 ஆக உள்ளது. இந்த சரிவு சமீபத்தில் தங்கம் விலை சர்வதேச சந்தையில் 5,000 டாலரை தாண்டிய பிறகு முதலீட்டாளர்கள் லாபம் பெற வேண்டும் என்ற நோக்கித்தில் தங்கங்த்தை விற்ற காரணத்தால் ஏற்பட்டது.
வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.2,80,000 விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் உள்ளது. பிளாட்டினம் ஒரு கிராமுக்கு 18 ரூபாய் குறைந்து ரூ.5,988 ஆகவும், 10 கிராம் விலை 180 ரூபாய் குறைந்து ரூ.59,880 ஆக உள்ளது. பிளாட்டினம் விலை சற்று ஸ்திரமாக உள்ளதால் உலோக சந்தையில் ஒட்டுமொத்தமாக விலை ஏற்ற இறக்கம் தொடர்கிறது.
ஆசிய வர்த்தக நேரத்தில் ஸ்பாட் தங்கம் விலையில் ஒரு அவுன்ஸ்-க்கு 1.02% குறைந்து 4,991 டாலராக வர்த்தகமாகிறது. இதேபோல் ஸ்பாட் வெள்ளி 2.65% சரிந்து ஒரு அவுன்ஸ் 75.37 டாலராக வர்த்தகமாகிறது. தங்கம் இன்னும் 5,000 டாலர் எல்லையை பாதுகாத்து வருவது நம்பிக்கையான விஷயம் என்றாலும் எப்போதும் வேண்டுமானாலும் இந்த அளவை உடைத்துக்கொண்டு கீழே விழுவும், உயரவும் வாய்ப்பு இருப்பதால் முதலீட்டு சந்தையில் தட்டுமாற்றம் நிலவுகிறது.
இன்று உலகின் 2 பெரிய பொருளாதார நாடுகளில் பங்குச்சந்தை விடுமுறை என்பதால் திங்கட்கிழமை வர்த்தகம் மந்தமாக துவங்கியுள்ளது. அமெரிக்காவில் Presidents' Day விடுமுறை காரணமாக NYSE, Nasdaq மற்றும் பத்திர சந்தைகள் மூடப்பட்டுள்ளன. வர்த்தகம் நாளை (பிப்ரவரி 17) மீண்டும் தொடங்கும்.
இதேபோல் சீனாவில் Lunar New Year விடுமுறை இந்த வாரம் முழுவதும் தொடர்கிறது - இதனால் சந்தை செயல்பாடு குறைவாக உள்ளது. சீனாவில் சமீப காலமாக அந்நாட்டின் ரீடைல் சந்தையில் தங்கம் தேவை மிக அதிகமாக இருப்பதால், Shenzhen போன்ற இடங்களில் சட்டவிரோத தங்க வர்த்தகம் நடப்புது அதிகரித்து உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தங்கம் வர்த்தகம் தொடர்பாக சீனா புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வரவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்தாலும் மிகவும் மெதுவாகவே உயர்ந்து வருகிறது, இதனால் அமெரிக்காவின் உண்மை வட்டி விகிதங்கள் பெரிய அளவில் மாறாமல் உள்ளன. இதன் எதிரொலியாக தங்கம் விலை உடனடியாக குறையும் என்ற எதிர்பார்ப்பு இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளர்.
என்ரிச் மணி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பொன்முடி கூறுகையில் சந்தையின் இயக்கம் காட்டுவது என்னவென்றால், முதலீட்டாளர்கள் பயம் காரணமான விற்பனை குறைந்து, நீண்ட கால முதலீட்டு சுழற்சி அடிப்படையில் முதலீட்டாளர்கள் சேகரிப்பு பக்கம் தொடங்கியுள்ளது. மேலும் பங்கு விற்பனை கட்டாயம் என்ற நிலையிலிருந்து மூலோபாய நிலைக்கு மாறியுள்ளது என்றும் முன்னணி பத்திரிக்கையிடம் தெரிவித்தார். இதன் சந்தையில் ஏற்படும் சரிவை கட்டுப்படுத்துவது மட்டும் அல்லாமல் நிலையான முதலீட்டு சந்தையை உருவாக்கும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?



Click it and Unblock the Notifications