திங்கட்கிழமை தங்கம் விலை காலை வர்த்தகத்திலேயே பெரும் சரிவு ஏற்பட்டது. 24 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு 730 ரூபாய் குறைந்து ரூ.14,128 ஆகக் குறைந்து, இதேபோல் 22 காரட் தங்கம் ரூ.670 குறைந்து ரூ.12,950க்கும், 18 காரட் தங்கம் 560 ரூபாய் குறைந்து ரூ.10,800க்கும் வர்த்தகமானது.
இந்த நிலையில் எம்சிஎக்ஸ் மற்றும் சர்வதேச ஸ்பாட் சந்தையில் பெரும் சரிவு பதிவான நிலையில், இன்று 2வது முறையாக தங்கம் விலை குறைந்துள்ளது. இது மிகவும் அரிதாக நடக்கும் ஒரு விஷயம், என்பதால் தங்கம் விலை குறைந்து நகை வாங்குவோருக்கு ஜாக்பாட் ஆக மாறியுள்ளது.

சென்னை நகைக் கடைகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி மதிய வர்த்தகத்தில் 3.43 மணி நிலவரப்படி தங்கம் விலை 2வது முறை குறைந்துள்ளது. 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு காலை சரிவை தாண்டி கூடுதலாக 280 ரூபாய் குறைந்து ரூ.12,670 ஆகவும், 18 காரட் தங்கம் 160 ரூபாய் குறைந்து ரூ.10,640 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது. இந்த தொடர் சரிவு சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் இன்று ஒரு நாளில் மட்டும் 22 கேரட் தங்கம் விலை கிராமுக்கு 950 ரூபாயும், சவரனுக்கு 7600 ரூபாயும் சரிந்துள்ளது.
சர்வதேச அளவில் தங்கம் விலை கடுமையாக சரிந்து வருகிறது. வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம், அமெரிக்க டாலர் வலிமை, எரிசக்தி விலை உயர்வு ஆகியவை முதலீட்டாளர்களை தங்கத்தை விற்கத் தூண்டியுள்ளன.
இதனால் உலக சந்தையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் மிகவும் மோசமான அளவான 4,099.55 டாலரை தொட்டு உள்ளது. இது கிட்டத்தட்ட 6.5 சதவீதமாகும். இதேபோல் வெள்ளி விலை 7 சதவீதம் வரையில் குறைந்து 60.98 டாலர் வரையில் குறைந்துள்ளது.
எம்சிஎக்ஸ் சந்தையில் ஏப்ரல் மாதம் முடியும் பியூச்சர்ஸ் தங்க ஒப்பந்தத்தின் மதிப்பு 8 சதவீதம் சரிந்து 129595.00 ரூபாய் நிலையை அடைந்துள்ளது. இதேபோல் மே மாதம் முடியும் பியூச்சர்ஸ் வெள்ளி ஒப்பந்தம் விலை 2,17,702 ரூபாயில் இருந்து 1,99,643.00 ரூபாயாக குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications