இந்தியாவில் தங்கம் அதிகம் விற்பனையாகும் காலம் இது, தீபாவளி நேரத்தில் வட இந்தியாவில் அதிகப்படியான தங்கம் வாங்கும் வழக்கம் உள்ளது. ஆனால் மறுபுறம் இது திருமண சீசன் என்பதால் நாடு முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளிக்கான டிமாண்ட் அதிகமாக உள்ளது. இத்தகைய நேரத்தில் தங்கம் விலை தினமும் வரலாற்று உச்ச நிலையை அடைந்து வருகிறது.
இந்தியாவில் முதல் முறையாக 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 80000 ரூபாய் அளவீட்டை தாண்டியுள்ளது, மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பங்குச்சந்தை, மியூச்சவல் பண்ட், கிரிப்டோ, NFT என பல முதலீட்டு வாய்ப்புகள் இருந்தாலும், இந்தியாவில் பெருவாரியான மக்கள் தங்கத்தில் தான் அதிகளவில் சேமித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சர்வதேச சந்தையின் தாக்கம் காரணமாக இன்று தமிழ்நாடு ரீடைல் தங்க நகை விற்பனை சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 400 ரூபாய் உயர்ந்து 73,400 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 430 ரூபாய் உயர்ந்து 80,070 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 320 ரூபாய் உயர்ந்து 58,720 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாயும், கிலோவுக்கு 2000 ரூபாயும் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி 1,12,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 670 ரூபாய் உயர்ந்து 27,860 ரூபாயாக உள்ளது.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 58720 ரூபாய், மும்பை - 58720 ரூபாய், டெல்லி - 58840 ரூபாய், கொல்கத்தா - 58720 ரூபாய், பெங்களூர் - 58720 ரூபாய், ஹைதராபாத் - 58720 ரூபாய், கேரளா - 58720 ரூபாய், புனே - 58720 ரூபாய், பரோடா - 58760 ரூபாய், அகமதாபாத் - 58760 ரூபாய், ஜெய்ப்பூர் - 58840 ரூபாய், லக்னோ - 58840 ரூபாய், கோயம்புத்தூர் - 58720 ரூபாய், மதுரை - 58720 ரூபாய்.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,340 ரூபாய், மும்பை - 7,340 ரூபாய், டெல்லி - 7,355 ரூபாய், கொல்கத்தா - 7,340 ரூபாய், பெங்களூர் - 7,340 ரூபாய், ஹைதராபாத் - 7,340 ரூபாய், கேரளா - 7,340 ரூபாய், புனே - 7,340 ரூபாய், பரோடா - 7,345 ரூபாய், அகமதாபாத் - 7,345 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,355 ரூபாய், லக்னோ - 7,355 ரூபாய், கோயம்புத்தூர் - 7,340 ரூபாய், மதுரை - 7,340 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,007 ரூபாய், மும்பை - 8,007 ரூபாய், டெல்லி - 8,022 ரூபாய், கொல்கத்தா - 8,007 ரூபாய், பெங்களூர் - 8,007 ரூபாய், ஹைதராபாத் - 8,007 ரூபாய், கேரளா - 8,007 ரூபாய், புனே - 8,007 ரூபாய், பரோடா - 8,012 ரூபாய், அகமதாபாத் - 8,012 ரூபாய், ஜெய்ப்பூர் - 8,022 ரூபாய், லக்னோ - 8,022 ரூபாய், கோயம்புத்தூர் - 8,007 ரூபாய், மதுரை - 8,007 ரூபாய்.
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,055 ரூபாய், மும்பை - 6,006 ரூபாய், டெல்லி - 6,018 ரூபாய், கொல்கத்தா - 6,006 ரூபாய், பெங்களூர் - 6,006 ரூபாய், ஹைதராபாத் - 6,006 ரூபாய், கேரளா - 6,006 ரூபாய், புனே - 6,006 ரூபாய், பரோடா - 6,010 ரூபாய், அகமதாபாத் - 6,010 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,018 ரூபாய், லக்னோ - 6,018 ரூபாய், கோயம்புத்தூர் - 6,055 ரூபாய், மதுரை - 6,055 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 27,860 ரூபாய், மும்பை - 27,860 ரூபாய், டெல்லி - 27,860 ரூபாய், கொல்கத்தா - 27,860 ரூபாய், பெங்களூர் - 27,860 ரூபாய், ஹைதராபாத் - 27,860 ரூபாய், கேரளா - 27,860 ரூபாய், புனே - 27,860 ரூபாய், வதோதரா - 27,860 ரூபாய், அகமதாபாத் - 27,860 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,12,000 ரூபாய், மும்பை - 1,04,000 ரூபாய், டெல்லி - 1,04,000 ரூபாய், கொல்கத்தா - 1,04,000 ரூபாய், பெங்களூர் - 99,000 ரூபாய், ஹைதராபாத் - 1,12,000 ரூபாய், கேரளா - 1,12,000 ரூபாய், புனே - 1,04,000 ரூபாய், பரோடா - 1,04,000 ரூபாய், அகமதாபாத் - 1,04,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 1,04,000 ரூபாய், லக்னோ - 1,04,000 ரூபாய், கோயம்புத்தூர் - 1,12,000 ரூபாய், மதுரை - 1,12,000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30.80 - 6,868 ரூபாய்
குவைத் - KWD 24.83 - 6,811 ரூபாய்
மலேசியா - MYR 368 - 7,126 ரூபாய்
ஓமன் - OMR 32.45 - 7,087 ரூபாய்
கத்தார் - QAR 308 - 7,103 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 304 - 6,805 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 110.90 - 7,077 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 307 - 7,028 ரூபாய்
அமெரிக்கா - USD 82 - 6,894 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 306.50 - 7,016 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 306.50 - 7,016 ரூபாய்
துபாய் (UAE) - AED 306.50 - 7,016 ரூபாய்
புஜைரா (UAE) - AED 306.50 - 7,016 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 306.50 - 7,016 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 306.50 - 7,016 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 308 - 7,103 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 32.45 - 7,087 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 304 - 6,805 ரூபாய்
இங்கிலாந்து - GBP 62.46 - 6,819 ரூபாய்
கனடா - CAD 113.75 - 6,920 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 121.70 - 6,832 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 32.80 - 7,314 ரூபாய்
குவைத் - KWD 27.09 - 7,431 ரூபாய்
மலேசியா - MYR 386 - 7,475 ரூபாய்
ஓமன் - OMR 34.55 - 7,546 ரூபாய்
கத்தார் - QAR 329.50 - 7,599 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 328 - 7,343 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 122.10 - 7,791 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 331.50 - 7,588 ரூபாய்
அமெரிக்கா - USD 87 - 7,314 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 331 - 7,577 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 331 - 7,577 ரூபாய்
துபாய் (UAE) - AED 331 - 7,577 ரூபாய்
புஜைரா (UAE) - AED 331 - 7,577 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 331 - 7,577 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 331 - 7,577 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 329.50 - 7,599 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 34.55 - 7,546 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 328 - 7,343 ரூபாய்
இங்கிலாந்து - GBP 68.14 - 7,439 ரூபாய்
கனடா - CAD 120.25 - 7,316 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 132.70 - 7,450 ரூபாய்
கடந்த ஆறு நாட்களில் ஐந்தாவது நாளாக தங்க விலை உயர்ந்துள்ளது. இதன் மூலம் சர்வதேச சந்தையில் தங்க விலை ஒரு அவுன்ஸ்-க்கு 2,748 டாலர்களை எட்டியுள்ளது. இது வரலாற்றிலேயே அதிகபட்ச விலை என்பதால் இதன் தாக்கம் உலக நாடுகள் முழுவதும் எதிரொலிக்க உள்ளது.
தங்கம் விலை சர்வதேச ஸ்பாட் சந்தையில் தொடர்ந்து உயர மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம், மற்றும் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-ன் அடுத்தடுத்த வட்டி விகிதத்தை தொடர்ந்து குறைக்கும் எதிர்பார்ப்பு ஆகியவை தங்கத்தின் விலையை உயர்த்துவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
இதேவேளையில் அமெரிக்காவில் அடுத்த சில வாரத்தில் நடக்க உள்ள அதிபர் தேர்தலில், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என்ற கணிப்பு இருக்கும் காரணத்தால் முதலீட்டு சந்தையில் பெரும் மாற்றம் ஏற்ப துவங்கியுள்ளது. இதன் காரணமாக இந்த தடுமாற்றத்தில் இருந்து தப்பிக்க தங்கத்தின் மீது முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர்.
டொனால்டு டிரம்ப் மீண்டும் அதிகாரத்திற்கு வந்தால் இறக்குமதி வரியை அதிகரித்து, முறைகேடாக வெளிநாட்டில் இருந்து வரும் மக்கள் குடியேறுவதை கட்டுப்படுத்துவார் என அறிவித்துள்ளார். அமெரிக்க அரசாங்கப் பத்திரங்களின் வட்டி விகிதம் உயர்ந்திருந்தாலும், முதலீட்டாளர்கள் தங்கத்தை தேடி வருகின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு.. நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்..!

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

வெள்ளி என்பது தங்கம் போன்றதல்ல.. அது ஒரு ஸ்மால்-கேப் பங்கு! மியூச்சுவல் ஃபண்ட் ஜாம்பவான் வார்னிங்!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!



Click it and Unblock the Notifications