உலகம் முழுவதும் முக்கிய முதலீடாக விளங்கும் தங்கம், தற்போது 3 பக்கம் அடிவாங்கும் காரணத்தால் அதன் போக்கைக் கணிப்பதில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. பொதுவாகத் தங்கம் விலை என்பது அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தினால் குறையும். இது தான் கடந்த 50 வருடங்களாக நடந்து வருகிறது.
தற்போது பெடரல் ரிசர்வ் வட்டியைக் குறைத்தும், இந்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் குறைக்கும் என்ற கணிப்பு இருக்கும் வேளையிலும் தங்கம் விலை குறையாமல் நிற்கிறது. இதற்கு 3 முக்கிய காரணம் உள்ளது, எப்போது தங்கம் விலையில் கயிறு இழுக்கும் போட்டி போல் எந்த பக்கம் வலிமை அதிகமாக இருக்கிறதோ, அந்த பக்கம் செல்லும்.

ஆனால் தற்போது தங்கம் விலை நிர்ணயம் செய்வதில் வட்டி விகிதத்தைத் தாண்டி 5 பக்கம் இழக்கப்படும் காரணத்தால் சுப்ரீம் நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது. தங்கம் விலையைத் தீர்மானிப்பதில் தற்போது உலக நாடுகளின் பணவீக்க அளவுகள், உலகளாவிய மத்திய வங்கிகளின் வட்டி விகித உயர்வில் நிலவும் மாறுபட்ட நிலைப்பாடு, டாலர் மதிப்பில் நிலவும் வலிமை, பத்திர முதலீட்டில் அதிகரிக்கும் லாபம், இஸ்ரேல் துவங்கி ரஷ்யா வரையில் நிலவும் போர் பதற்றம் என 5 பக்கத்தில் தங்கம் விலை அடிவாங்குகிறது.
தங்கம் மீதான லாபமும், முதலீடும்..
தங்கம் மீதான முதலீட்டில் வட்டி விகிதமோ அல்லது டிவிடெண்ட் வருமானமோ கிடைக்காது. இதனால் பணவீக்கம் அடிப்படையில் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரித்தால் முதலீட்டாளர்கள் சாரை சாரையாகப் பத்திர முதலீட்டுச் சந்தைக்குச் செல்வார்கள். இதனால் தங்கம் விலையில் பெரும் சரிவு ஏற்படும்.
தங்கத்தில் முதலீடு செய்வோர் பணவீக்கத்திற்கும் அதிகமான லாபத்தைப் பெற வேண்டும் என்பதைத் தாண்டி தற்போது முதலீடு செய்து வருகின்றனர். இதற்கு முக்கியமான காரணம் உலக நாடுகளின் மோசமான நிதி நிலை. அமெரிக்கா முதல் ஜப்பான் வரையில் உலக நாடுகள் தற்போது பெரும் கடனில் சிக்கித்தவித்துக்கொண்டு இருக்கிறது.
இத்தகைய நிலையில் பத்திர சந்தையில் செய்யும் முதலீட்டுக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. உலக நாடுகளில் கடன் அதிகமாகும் போது, பத்திர முதலீடுகள் மீதான லாபத்தைக் கொடுக்க முடியாமல் போகலாம், அல்லது அரசை நடத்தத் தொடர்ந்து அதிக வட்டியில் கடனை வாங்கலாம்.
அடுத்தாக டாலர் ஆதிக்கம் அமெரிக்காவின் அதீத கடன் நிலுவை, பணவீக்கம், பொருளாதார கொள்கை, போர் அச்சம் காரணமாகத் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் பெரும் பகுதி முதலீட்டாளர்கள் தற்போது பாதுகாப்பான முதலீட்டுக்காகத் தங்கம் மீது திரும்பியுள்ளனர்.
ஏன் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் கூட, இதே பிரச்சனைகளைக் காரணம் காட்டி அமெரிக்க அரசு பத்திரத்தை விற்றுவிட்டுத் தொடர்ந்து தங்கத்தை வாங்கி வருகிறது. குறிப்பாகச் சீனா, இந்திய மத்திய வங்கிகள்.
இதேபோல் சாமானிய மக்களும் இந்த ஆண்டின் முதல் பாதியில் அதிகப்படியாகத் தங்கக் காயின், பார் வாங்கி குவித்துள்ளனர். உலக தங்க கவுன்சிலின் தரவுகள் படி இந்த வருடத்தின் முதல் பாதியில் சுமார் 380 பில்லியன் டாலர் மதிப்பிலான உலோக தங்கத்திற்கு டிமாண்ட் இருந்ததாகத் தெரிவித்துள்ளது.
இன்றைய விலையை பேஸ்லைன் ஆக வைத்துக்கொண்டால் கூட, தங்கம் விலை தொடர்ந்து குறைந்தால் மத்திய வங்கிகள், முதலீட்டாளர்கள் இணைந்து தங்கத்தை அதிகமாக வங்கி விலை சரிவைக் கட்டுப்படுத்துவார்கள் என முதலீட்டாளர்கள் கணித்துள்ளனர்.
இதேவேளையில் மத்திய கிழக்கு போர், கச்சா எண்ணெய் விலை உயர்வும் தங்கம் விலை உயர்வதற்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. மேலும் போர் நிறுத்தம் தொடர்பான முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அவை தொடர்ந்து தோல்வியில் முடிவதால் தங்கம் விலை 5 பக்கம் அடிவாங்கினாலும் விலையில் நிலைத்தன்மை கொண்டு உள்ளது.
தங்கம் விலை..
இன்றைய சர்வதேச சந்தை வர்த்தகத்தில் தங்கம் விலை ஒரு ட்ராய் அவுன்ஸ் 0.28 சதவீதம் குறைந்து 4,329 டாலராக உள்ளது. தங்கம் விலை கடந்த 6 மாதமாகக் கிட்டத்தட்ட 4200-4450 டாலர் அளவில் வர்த்தகமாகி வருகிறது. 6 மாதத்தில் வெறும் 3.63 சதவீதம் மட்டுமே தங்கம் விலை சரிந்து காணப்படுகிறது. இதன் மூலம் ஈரான் போர் துவங்கியதில் இருந்து தங்கம் மந்த நிலைக்குச் சென்றுள்ளது.
சென்னை ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று சரிவுடன் காணப்படுகிறது. 24 கேரட் தங்கம் விலை கிராமுக்கு 93 ரூபாயும், 22 கேரட் தங்கம் விலை 85 ரூபாய் குறைந்து 14,185 ரூபாயும் குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications
