நவம்பர் 26-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது. சமீபத்திய தினங்களில் ஏறத் தொடங்கிய தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்து புதிதாக நகை வாங்க திட்டமிடுபவர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,080-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் 7,724-க்கும் விற்பனையாகிறது.
கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: தமிழகத்தின் முக்கிய நகரங்களான கோவை, மதுரை, சேலம், திருவாரூர், தஞ்சாவூர், சென்னை போன்ற நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் 120 ரூபாய் குறைந்து ரூ.7,080-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் 960 குறைந்து ரூ.56,640-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.1200 குறைந்த ரூ.70,800க்கும் விற்பனையாகிறது.

1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.131 குறைந்த ரூ.7,724-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.148 குறைந்து ரூ.61,792-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.1310 குறைந்து ரூ.77,740-க்கும் விற்பனையாகிறது. நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று சவரனுக்கு 1,000 ரூபாய் குறைந்துள்ளது. இது உண்மையிலேயே மிகப்பெரிய இறக்கம் என்று சொல்லலாம்.
நீண்ட காலமாக நம் நாட்டில் தங்கத்திற்கென்று தனி மதிப்பு உண்டு. அதுவும் கோயம்பத்தூர் மற்றும் மதுரை போன்ற பரபரப்பான ஊர்களில் உள்ள மக்கள் தங்களிடம் சிறிது பணம் சேர்ந்தால் உடனடியாக தங்கத்தை வாங்க வேண்டும் என்றுதான் எண்ணுவர். இதில் மாதம் ஒரு கோல்ட் காயின் வாங்கி சேமிக்கும் இந்தியக் குடும்பங்களும் உள்ளது. இது போன்ற குடும்பங்களுக்கு சமீபத்திய தினங்களாக ஏறிக்கொண்டே சென்ற தங்கம் விலை சிக்கலை ஏற்படுத்தியது. ஆனால் இன்றைய தினம் சற்று நிவாரணம் அளிக்கும் வகையில் சவரனுக்கு 1000 ரூபாய் குறைந்திருக்கிறது.
இந்தியாவில் வெள்ளி விலை நிலவரம்: இந்தியாவில் வெள்ளி விலை ரூ.2.50 காசுகள் குறைந்த 98 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளி சென்னை, கோயம்பத்தூர், டெல்லி போன்ற நகரங்களில் 1 கிலோ வெள்ளி 98,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


Click it and Unblock the Notifications