அக்டோபர் 14-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு 25 ரூபாய் ஏறிய தங்கம் விலை இன்று வெறும் 5 ரூபாய் மட்டுமே குறைந்திருக்கிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தங்கம் விலை இன்னும் குறைய வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தப் பதிவில் கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் தங்கம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 7,115 ரூபாயாகவும் அதேபோல 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 7,762 ரூபாயாகவும் உள்ளது.

கோயம்புத்தூர் மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் 5 ரூபாய் குறைந்து 7,115 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 சவரன் 22 கேரட் தங்கம் 40 ரூபாய் குறைந்து 56,920 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கம் 5 ரூபாய் குறைந்து 7,762 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 சவரன் 24 கேரட் தங்கம் 40 ரூபாய் குறைந்து 62,096 ரூபாயாக உள்ளது.
பொதுவாக தங்கம் விலை அதிகரிப்பதில் பல்வேறு காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றுள் ஒன்று மத்திய மாநில அரசு வரியாகும். இந்தியாவில் பெரும்பாலான தங்கம் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் வெவ்வேறு நகரங்களில் வெவ்வேறு மாதிரியாக தங்கம் விற்பனையாக இதுவே காரணமாகிறது. ஏனெனில் கேரளாவில் ஒரு வரியும், தமிழ்நாட்டில் ஒரு வரியும் விதிக்கப்படும். அது மட்டும் இன்றி மக்கள் தொகை அதிகம் இருக்கும் நகரங்களில் விலை சற்று குறைவாக இருக்கலாம். அதே நேரம் மக்கள் தொகை குறைவாக உள்ள நகரங்களில் தங்கம் விலை சற்று அதிகமாக இருக்கும்.
நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. அதற்கு முன் தினம் அதாவது அக்டோபர் 12-ஆம் தேதி அன்று தங்கம் விலை சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்து இருந்தது. ஆனால் இன்று சவரனுக்கு 40 ரூபாய் மட்டுமே குறைந்துள்ளது. இந்த விலை குறைவும் பொது மக்களிடையே பெரிய வித்யாசமாக பார்க்கப்படவில்லை. ஏனெனில் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ள தங்கம் விலை இன்னும் குறைய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: சென்னை, கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று வெள்ளி விலை 1 ரூபாய் அதிகரித்து 103 ரூபாயை எட்டியுள்ளது. 1 கிலோ வெள்ளி 1,03,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


Click it and Unblock the Notifications