சரிவில் தொடங்கிய தங்கம் விலை! எல்லாமே தங்கத்துக்கு சாதகமாக இருந்தும் விலை ஏறவில்லையே!

கடந்த சில வாரங்களாகவே, தங்கம் விலை (Gold Price) ஏற்றம் காண முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறது.

குறிப்பாக 01 செப்டம்பர் 2020 அன்றைய தங்கம் விலையைக் கூட (ஆபரணத் தங்கம், எம் சி எக்ஸ் தங்கம், சர்வதேச தங்கம்) இப்போது தொட முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறது.

இன்று, தங்கம் விலை ஏற்றம் காண எல்லா சூழலும் அமைந்து இருக்கிறது. இருப்பினும் தங்கம் விலை (Gold Price) புதிய ஏற்றங்களைக் காணவில்லை. ஒரு குறிப்பிட்ட விலை ரேஞ்சுக்குள்ளேயே வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

இவைகளை எல்லாம் பார்ப்போம்

இவைகளை எல்லாம் பார்ப்போம்

என்ன காரணிகள் எல்லாம் தங்கம் விலை ஏற்றத்துக்கு சாதகமாக அமைந்து இருக்கின்றன? ஆபரணத் தங்கம், எம் சி எக்ஸ் தங்கம், சர்வதேச தங்கம் போன்றவைகளின் விலை நிலவரம் என்ன? எதிர்காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும்? எப்போது எல்லாம் தங்கத்தை வாங்கலாம்? என விரிவாகப் பார்ப்போம். முதலில் சென்னை தங்கம் விலை நிலவரத்தில் இருந்து தொடங்குவோம்.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை - (24 கே 10 கி & 22 கே 10 கி)

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை - (24 கே 10 கி & 22 கே 10 கி)

பல பிரசித்தி பெற்ற கோவில்களைக் கொண்ட சிங்காரச் சென்னையில், நேற்று, 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 54,070 ரூபாய்க்கு விற்பனை ஆனது. 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 49,590 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இப்போது வரை 01 செப்டம்பர் 2020 விலையான 24 கே 10 கி 54,200 & 22 கே 10 கி 49,720 ரூபாயைத் தொட முடியாமல் திணறுகிறது.

MCX அக்டோபர் தங்க ஃப்யூச்சர் விலை

MCX அக்டோபர் தங்க ஃப்யூச்சர் விலை

இன்று, இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை (அக்டோபர் 2020 மாதத்துக்கான காண்டிராக்ட்), கடந்த வெள்ளிக்கிழமை குளோசிங் விலையான 51,715 ரூபாயை விட சுமாராக 0.37 % சரிந்து 51,520 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

விலை ஒப்பீடு - மீண்டும் சரிவில் எம் சி எக்ஸ் தங்கம் விலை

விலை ஒப்பீடு - மீண்டும் சரிவில் எம் சி எக்ஸ் தங்கம் விலை

01 செப்டம்பர் 2020 அன்று 52,100 என்கிற உச்ச விலையைத் தொட்டு வர்த்தகமானது எம் சி எக்ஸ் தங்கம். அதன் பின் கடந்த செப்டம்பர் 15 & 16 தேதிகளில் அதிகபட்சமாக 52,182 & 52,127 ரூபாயைத் தொட்டது. எப்படியும் விலை ஏற்றம் காணலாம் என நினைத்துக் கொண்டிருக்கும் போது, இன்று 51,520 ரூபாயைத் தொட்டு சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

XAU USD - இண்டர்நேஷனல் தங்கம் விலை

XAU USD - இண்டர்நேஷனல் தங்கம் விலை

சர்வதேச அளவில், ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,946 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை குளோசிங் விலையான 1,950 டாலரில் இருந்து சுமாராக 4 டாலர் இறக்கம் கண்டு (0.20 %) வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. 01 செப்டம்பர் 2020 அன்று 1,970 டாலருக்கு சர்வதேச தங்கம் விலை நிறைவடைந்தது. அதன் பின் ஒரு முறை கூட 1,970 டாலரைத் தொடவில்லை சர்வதேச தங்கம். சரி தங்கம் விலை சரிவிலும், இறக்கத்திலும் இருக்கிறது. தங்கம் விலை ஏற்றக் காரணிகள் எப்படி இருக்கின்றன?

92.78-ல் டாலர் இண்டெக்ஸ்

92.78-ல் டாலர் இண்டெக்ஸ்

உலகின் ஆறு முக்கிய கரன்சிகளுக்கு எதிராக, அமெரிக்க டாலரின் பலத்தை வெளிப்படுத்தும் டாலர் இண்டெக்ஸ் இன்று 0.15 % இறக்கம் கண்டு 92.78 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. கடந்த 08 செப் 2020 அன்று 93.44 புள்ளிகளாக வர்த்தகமான இண்டெக்ஸ், இன்று 92.78 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. கிட்டத்தட்ட 0.70 % சரிந்து இருக்கிறது அமெரிக்க டாலர் கரன்சி. டாலர் பலவீனமடைந்தால், தங்கம் விலை ஏற்றம் காணும். ஆனால் இப்போது கணிசமாக டாலர் பலவீனமடைந்து இருக்கும் போதும், தங்கம் விலை தடுமாறிக் கொண்டு இருக்கிறது.

1.03 % அதிகரித்த SPDR Gold Trust ஹோல்டிங்ஸ்

1.03 % அதிகரித்த SPDR Gold Trust ஹோல்டிங்ஸ்

கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, உலகின் மிகப் பெரிய தங்க டிரஸ்டான SPDR Gold Trust-ன் ஹோல்டிங்ஸ், கிட்டத்தட்ட 1.03 % அதிகரித்து 1,259.84 டன்னாக உயர்ந்து இருக்கிறது. தங்கத்தில் முதலீடு அதிகரிக்கிறது என்றால், டிமாண்ட் அதிகரிக்கிறது என்று பொருள். டிமாண்ட் அதிகரித்தால், விலை அதிகரிக்க வேண்டும். ஆனால், தங்கம் விலை அதிகரிக்கவில்லை.

பணக் கொள்கைகள் Monetary Policy

பணக் கொள்கைகள் Monetary Policy

உலகின், பல நாட்டின் மத்திய வங்கிகளும் தங்கள் வட்டி விகிதங்களைக் குறைத்து இருக்கிறார்கள். இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கி முதல் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வரை பலரும் வட்டி விகிதங்களை கணிசமாக குறைத்திருப்பதை நாம் செய்திகளில் படித்து இருப்போம். இதுவும் தங்கத்தின் விலை அதிகரிக்க உதவும் செய்திகள் தான். இருப்பினும் தங்கம் விலையில் பெரிய முன்னேற்றம் இல்லை.

தங்கம் விலைக்கு சப்போர்ட்டாக இருக்கும் காரணிகள்

தங்கம் விலைக்கு சப்போர்ட்டாக இருக்கும் காரணிகள்

மேலே சொன்ன டாலர் இண்டெக்ஸ் பலவீனம் மற்றும் தங்கத்தில் அதிகரித்த முதலீடுகள் இரண்டும் போக, பிரெக்ஸிட் பிரச்சனை மற்றும் அமெரிக்க அரசின் ஸ்டிமுலஸ் பேக்கேஜ் போன்ற காரணிகளும், தங்கம் விலையை, பெரிய அளவில் இறக்கம் காணவிடாமல் தாங்கிக் பிடித்துக் கொண்டு இருக்கின்றன. அது போக கொரோனா வைரஸ் எண்ணிக்கை வேறு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போவதும் தங்கம் விலை ஏற்றத்துக்கு சாதகமான சூழல் தான்.

எதிர்காலத்தில் எப்படி

எதிர்காலத்தில் எப்படி

இத்தனை சாதகமான சூழல்களை கண்டு கொள்ளாமல் விடலாம். ஆனால், தங்கம் விலை இப்போது இல்லை என்றாலும், எதிர்காலத்தில் விலை அதிகரிக்க நிறைய வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள் உலகின் பல முன்னணி கம்பெனிகள் மற்றும் முக்கிய முதலீட்டாளர்கள். எனவே தங்கம் விலை அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பில், விலை இறங்கும் போது எல்லாம் தங்கத்தை வாங்கிக் போடலாம் என்கிறது கோட்டக் செக்யூரிட்டீஸ் கம்பெனி.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+