தங்கமே உன்னத் தான் தேடி வந்தேனே நானே... பாட்டு தான் நினைவுக்கு வருகிறது. அந்த அளவுக்கு எங்கு திரும்பினாலும் தங்கம் விலை சரிந்து கொண்டு இருக்கிறது.
ஏன் திடீரென தங்கம் விலை சரிகிறது, எங்கு எல்லாம் தங்கம் விலை சரிந்து இருக்கிறது. தங்கம் விலை சரிவுக்கு என்ன காரணங்கள் போன்றவைகளையும் விரிவாகப் பார்ப்போம்.
அதோடு கடந்த சில நாட்களில் தங்கத்தின் விலை எவ்வளவு குறைந்து இருக்கிறது என்பதையும் விரிவாகப் பார்ப்போம்.
தங்க வர்த்தகம்
சாதாரண மக்கள் கடைகளுக்குச் சென்று வாங்கும் தங்கத்தின் விலையை பிறகு பார்க்கலாம். முதலில் பங்குகளைப் போல வர்த்தகம் செய்யப்படும் தங்கத்தின் விலை விவரங்களில் இருந்து தொடங்குவோம். இந்தியாவில் 03 ஏப்ரல் 2020 10 கிராம் தங்க ஃப்யூச்சர்ஸின் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது.
5000 ரூபாய் சரிவு
கடந்த மார்ச் 06, 2020 அன்று 44,961 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது ஏப்ரல் 2020 காண்டிராக்ட். நேற்று மார்ச் 18, 2020 அன்று 39,872 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவு அடைந்து இருக்கிறது. ஆக சுமார் 5,089 ரூபாய், விலை சரிந்து இருக்கிறது. காண்டிராக்ட் தங்க வர்த்தகத்தில் விலை சரிந்தால் ஆபரண தங்கத்திலும் விலை சரியத் தானே செய்யும்.
சர்வதேச ஸ்பாட் தங்கம் விலை
கடந்த மார்ச் 09, 2020 அன்று ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கத்தின் விலை அமெரிக்காவில், 1,680 டாலரைத் தொட்டு வர்த்தகமானது. ஆனால் இன்று மார்ச் 19, 2020 அன்று சுமாராக 1,483 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது அதே ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கம். ஆக 1680 - 1,483 = 197 டாலர் விலை சரிந்து இருக்கிறது.
சென்னையில் ஆபரணத் தங்கம்
கடந்த மார்ச் 06, 2020 அன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 46,160 ரூபாய்க்கு விற்பனை ஆனது. நேற்று மார்ச் 18, 2020 அன்று அதே 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 42,970 ரூபாய்க்கு விற்பனை செய்தார்கள். ஆக 46,160 - 42,970 = 3,190 ரூபாய் விலை சரிந்து இருக்கிறது. அதெல்லாம் சரி... ஏன் இப்படி தங்கம் விலை சரிகிறது..?
அமெரிக்க சந்தை காரணிகள்
அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ், எஸ் & பி 500, நாஸ்டாக் போன்ற சந்தைகள் எல்லாமே பெரிய அளவில் சுமார் சரிந்து வர்த்தகமாகின்றன. கடந்த 1987-ம் ஆண்டுக்குப் பிறகு, அமெரிக்க சந்தைகள், ஒரே நாளில் காணும் மிகப் பெரிய சரிவு எல்லாம் கண்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்த பயம் தங்கத்தின் விலை ஏற்றத்தை தடுத்து, இறங்க வைத்திருக்கிறது.
கொரோனா பயம்
அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் 0.5 சதவிகித வட்டி விகித குறைப்பால், பொருளாதாரம் எதிர்பார்த்த அளவுக்கு வளரவில்லை. அதோடு கொரோனா வைரஸ் பிரச்சனை ஜூலை அல்லது ஆகஸ்ட் வரை நீடிக்கலாம் என அதிபர் ட்ரம்ப் சொன்னது எல்லாம், தற்போது தங்கத்தில் முதலீடு செய்யக் கூட பயப்படத் தொடங்கி இருக்கிறார்கள் முதலீட்டாளர்கள். எனவே தான் தங்கம் சற்றே இறங்கு முகம் காட்டத் தொடங்கி இருக்கிறது.
விலை ஏறும்
ஆனால், கொரோனா வைரஸ் பயம் இன்னும் முழுமையாக குறையவில்லை. எனவே கூடிய விரைவில் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரிக்கலாம் என்கிறார்கள் அனலிஸ்ட்கள். விலை அதிகரிப்பது இருக்கட்டும். இந்த விலை இறக்கத்தை பயன்படுத்தி தங்கத்தை வாங்க நினைப்பவர்கள் வாங்கலாமா..? என்கிற கேள்வியும் எழுகிறது.
வாங்கலாம்
சுமாராக, கடந்த ஒரு மாத காலத்தில், மிகக் குறைந்த நாட்களே, 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 42,970 ரூபாயைத் தொட்டு இருக்கிறது. எனவே இது போல தங்கத்தின் விலை குறையும் போது வாங்கிக் கொள்வது நல்லது தான். யார் என்ன சொன்னால் என்ன முடிவு உங்கள் கையில் தானே. தீர ஆலோசித்து, குறைந்த விலையில் தரமான தங்கம் வாங்க வாழ்த்துக்கள்.
More From GoodReturns

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?



Click it and Unblock the Notifications