கொரோனா மருந்தால் தங்கம் விலை 2,500 ரூபாய் சரிவு.. சாமானிய மக்கள் மகிழ்ச்சி..!

உலக நாடுகளைப் பயமுறுத்தி வரும் கொரோனாவை 90 சதவீதம் வரையில் குணப்படுத்தக் கூடிய மருந்தை ஃபைசர் மற்றும் ஜெர்மன் கூட்டணி நிறுவனமான பயோஎன்டெர் எஸ்ஈ கண்டுபிடித்து ஆய்வில் வெற்றி அடைந்துள்ளதாகச் செய்திகள் வெளியானதை அடுத்து முதலீட்டுச் சந்தையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகளைக் கணித்து முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை மற்றும் நாணய சந்தையில் இருக்கும் தங்களது முதலீட்டைப் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென முடிவு செய்து தங்கம் மீது முதலீடு செய்தனர். இதன் காரணமாகவே தங்கம் விலை தாறுமாறாக அதிகரித்தது.

இந்நிலையில் கொரோனாக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியான நிலையில், முதலீட்டாளர்கள் தங்கம் மீதான முதலீட்டை அதிரடியாகக் குறைத்துள்ளனர்.

இதன் வாயிலாகச் செவ்வாய்க்கிழமை காலை வர்த்தகத்தில் தங்கம் விலை 2,500 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.

கொரோனா மருந்து

கொரோனா மருந்து

மனிதர்களை ஆடிப்படைத்து வரும் கொரோனா தொற்றை 90 சதவீதம் வரையில் குணப்படுத்தக் கூடிய மருந்தை ஃபைசர் மற்றும் ஜெர்மன் கூட்டணி நிறுவனமான பயோஎன்டெர் எஸ்ஈ கண்டுபிடித்து ஆய்வில் வெற்றி அடைந்துள்ளதாகச் செய்திகள் வெளியானது உலக நாடுகள் மத்தியில் புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

அமெரிக்கா பிரிட்டன்

அமெரிக்கா பிரிட்டன்

காரணம் கடந்த வாரம் பிரிட்டனில் கொரோனா தொற்று அதிகமாகிய மீண்டும் நாடு முழுவதும் டிசம்பர் 2 வரையில் 2ஆம் முறை லாக்டவுன் அறிவித்துள்ளது. இதேபோல் அமெரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்து உலகின் இரு முக்கியப் பொருளாதார நாடுகளின் நிலை மிகலும் மோசமாக உள்ளது.

இந்தியச் சந்தை

இந்தியச் சந்தை

கொரோனா மருந்து கண்டுபிடிப்பின் எதிரொலியாக இந்தியச் சந்தையில் 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை இன்று காலை வர்த்தகத்தில் 5 சதவீதம் சரிவில் சுமார் 2,500 ரூபாய் சரிந்து 49,659 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இதேபோல் வெள்ளி விலை 6 சதவீத சரிவில் சுமார் 4000 ரூபாய் சரிந்து ஒரு கிலோ வெள்ளி 61,384 ரூபாய்க்கு வர்த்தகமானது.

 

சர்வதேச சந்தை நிலவரம்

சர்வதேச சந்தை நிலவரம்

இதேபோல் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை நேற்று இரவு வர்த்தக முடிவில் 1,44,488 ரூபாயாக இருந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் தடாலடியாக 1,37,207 ரூபாய் வரையில் குறைந்துள்ளது.

மேலும் செவ்வாய்க்கிழமை 10 மணி அளவில் சர்வதேச சந்தையின் ஸ்பாட் கோல்டு ரேட் 1,39,470 ரூபாயாக உள்ளது. நேற்றை விலையை ஒப்பிடுகையில் கிட்டதட்ட 5018 ரூபாய் சரிந்துள்ளது.

 

ஆகஸ்ட் மாதம்

ஆகஸ்ட் மாதம்

தங்கம் விலையில் ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட சரிவிற்கு மிகப்பெரிய சரிவு இன்றைய வர்த்தகத்தில் ஏற்பட்ட சரிவு தான். இந்திய சந்தையைப் போல் சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை காலை வர்த்தகத் துவக்கத்தின் போது 5 சதவீதம் வரையில் சரிவை எதிர்கொண்டது.

பக்க விளைவுகள்

பக்க விளைவுகள்

ஃபிப்சர் நிறுவனத்தின் தலைவர் ஆல்பர்ட் போர்லா கூறுகையில், ஃபிப்சர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருத்துக் கொரோனா பரவலை 90 சதவீதத்திற்கு அதிகமான அளவில் தடுக்கிறது. மேலும், இந்தத் தடுப்பூசியால் மிகப்பெரிய பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்பது மிகவும் முக்கியமானது.

டிசம்பர் மாத ஆர்டர்கள்

டிசம்பர் மாத ஆர்டர்கள்

செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணி அளவில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை MCX தளத்தில் டிசம்பர் மாதத்திற்கான ஆர்டரில் 1.32 சதவீகம் வரையில் அதிகரித்து 50,405 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

இதேபோல் வெள்ளி விலை 2.38 சதவீதம் அதிகரித்து 62,300 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+