இந்திய ரீடைல் சந்தையில் இன்று ஒரு கிராம் விலை 55 ரூபாய் குறைந்து மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது, இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா ஈரானின் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து நடத்தும் தாக்குதல் மூலம் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது தான். இந்த 6 நாட்களில் 5 நாட்களுக்கு தங்கம் விலை இந்தியாவில் குறைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை ரீடைல் சந்தையில் 24 கேரட் தங்கம் விலை 55 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,291 ரூபாயாக உள்ளது, இதேபோல் 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை 50 ரூபாய் குறைந்து 13,100 ரூபாயாக உள்ளது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாயும், கிலோவுக்கு 5000 ரூபாயும் குறைந்து ஒரு கிலோ வெள்ளி விலை 2,35,000 ரூபாயாக உள்ளது. மேலும் பிளாட்டினம், அதன் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரு கிராம் 5,151 ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 0.15 சதவீதம் மட்டும் உயர்ந்து 3,983.09 டாலராக உள்ளது, இதேபோல் வெள்ளி விலை ஒரு அவுன்ஸ் 0.51 சதவீதம் குறைந்து 55.24 டாலராக உள்ளது. இதேவேளையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 12 பைசா குறைந்து 96.46 ரூபாயாக உள்ளது.
இன்றைய சரிவுக்கு அடிப்படை காரணம் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் காரணமும், ஈரான் மற்றும் ஹவுதிக்கள் ஹார்முஸ், பாப் அல் மண்டெப் வழித்தடத்தை முடக்குவதாக அறிவித்தது தான்.
இதனால் சர்வதேச வர்த்தகம் மீண்டும் பெரிய அளவில் பாதிக்கப்படும், இதேபோல் டாலர் மதிப்பு உயர்வால் தங்கத்திற்கு எதிரான சூழ்நிலை உருவாக துவங்கியுள்ளது. இதை உணர்ந்து முதலீட்டாளர்கள் சமீபத்தில் செய்த தங்கம், வெள்ளி மீதான முதலீட்டை விற்பனை செய்ய துவங்கியுள்ளனர், இதனால் உள்நாட்டு சந்தை முதல் வெளிநாட்டுகள் வரையில் profit booking season துவங்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
இதேவேளையில் கடந்த சில நாட்களாக முதலீட்டு சந்தையில் டெக் பங்குகளில் செய்யப்பட்ட முதலீடுகள் அனைத்தும் மற்ற துறை பங்குகளுக்கு மாறியது, இந்த இடம்மாற்றத்தில் ஒரு சிறு பகுதி உலோக சந்தை பக்கம் திரும்பியது.
தற்போது போர் அச்சம் அதிகரித்த காரணத்தால் இந்த முதலீடுகள் மீண்டும் விற்கப்பட்டு லாபம் பார்க்கப்படுகிறது. தங்கத்தை காட்டிலும் வெள்ளி அதிகளவில் குறைந்து வருவதை பார்க்கும் போது வெள்ளி சார்ந்துள்ள உற்பத்தி துறையின் இயக்கமும் குறைந்துள்ளதாக என்ற கேள்வி எழுகிறது.
அடுத்தக்கட்டமாக தற்போது மொத்த முதலீட்டு சந்தையின் பார்வையும் மத்திய பெடரல் ரிசர்வ்-ன் வட்டி விகிதங்கள் தொடர்பான முடிவுகள் மீதே உள்ளது. சமீபத்தில் வெளியான அமெரிக்கா பணவீக்க தரவுகளை பார்க்கும் போது நாணய கொள்கையை அதிரடியாக மாற்றும் போக்கில் இருந்து பெட் விலகியது உறுதியாகியுள்ளது. இது தங்க முதலீட்டுக்கு சாதகமான சூழ்நிலையாகும்.


Click it and Unblock the Notifications

