தங்கம் விலை நேற்றைய தினம் 15 ரூபாய் குறைந்திருந்தது. அதேபோல இன்றும் 15 ரூபாய் குறைந்து நகைப் பிரியவர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. இந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தொடர்ந்து தங்கம் விலை ஏறிக்கொண்டே சென்றது. இதனால் சவரனுக்கு 1400 ரூபாய் வரை ஏறியது. இதனால் தங்கம் வாங்குவதற்கான சிறந்த நாளை எண்ணி மக்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு உதவும் வகையில் தற்போது தங்கம் விலை கடந்த 2 தினங்களாக குறைந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி கோவை மற்றும் மதுரையில் தங்கம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 6,850 ரூபாயாகவும், 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 7,473 ரூபாயாகவும் உள்ளது.

கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று 22 கேரட் தங்கம் விலை கிராமுக்கு 6,850 ரூபாயாக உள்ளது, நேற்றிலிருந்து இன்று வரை 15 ரூபாய் குறைந்துள்ளது, 1 சவரன் 22 கேரட் தங்கம் விலை 54,800 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் 22 கேரட் தங்கம் நேற்றைய தினத்தை விட 120 ரூபாய் குறைந்துள்ளது.
ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை 7,473 ரூபாயாக உள்ளது. 24 கேரட் தங்கம் 16 ரூபாய் குறைந்துள்ளது. 1 சவரன் 24 கேரட் தங்கம் விலை 59,784 ரூபாயாக உள்ளது. இது 128 ரூபாய் வரை குறைந்துள்ளது.
கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: கோவை மற்றும் மதுரையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி இன்று 1 கிராம் 96 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னை, மதுரை மற்றும் கோயம்பத்தூரில் 1 கிலோ வெள்ளி விலை 96,000 ரூபாயாக உள்ளது.
நம் நாட்டின் பணவீக்கத்திற்கு எதிராக மக்கள் பெரிதும் நம்பி இருக்கும் முதலீடு என்றால் அது தங்க நகைகள் தான். சிலரது வீட்டில் மாதம் மாதம் 1 கிராம் கோல்டு காயின் வாங்கி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். இதன் மூலம் மாதம் மாதம் கணிசமாக குறிப்பிட்ட தொகை சேமிக்கப்படுகிறது. அது மட்டுமின்றி தங்கம் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே செல்வதால் கண்டிப்பாக இது லாபம் தரும் என்று பல குடும்பங்கள் எண்ணுகின்றனர்.
2030-ஆம் ஆண்டுக்குள் தங்கம் விலை சவரனுக்கு 1 லட்ச ரூபாயை எட்டும் என்று பல நிபுணர்களும் கருதுகின்றனர். அதற்கேற்ப இனிவரும் காலங்களிலும் தங்கம் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?



Click it and Unblock the Notifications