சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி விலை திங்கள்கிழமை வர்த்தகம் சொல்லி வைத்தது போல் எதிர்த் திசையில் பயணிக்கத் துவங்கியுள்ளது. தங்கம் விலை பெரிய அளவில் அதிகரித்துத் தொடர்ந்து நிலைபெற்று இருக்கும் காரணத்தால் மக்களும், முதலீட்டாளர்களும் வெள்ளி மீது திரும்புவார்கள் என தமிழ்குட்ரிட்டன்ஸ் தளத்தில் கணித்திருந்த நிலையில் இன்று எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் சரிந்திருக்கும் வேளையில் வெள்ளி உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.
இதைவிட முக்கியமான விஷயம் தங்கம் விலை இன்று காலை முதல் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை தொடர்ந்து 1.5 லட்சத்திற்குக் கீழ் உள்ளது. வியாழக்கிழமை வர்த்தகத்தை ஒப்பிடும் போது சுமார் 1200 ரூபாய்க்கும் அதிகமாகச் சரிந்துள்ளது. மாலை வர்த்தகத்தில் தங்கம் விலை என்பது 0.36 சதவீதம் குறைந்து 1,49,852 ரூபாயாக உள்ளது.

ஆனால் ரீடைல் சந்தையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 22 கேரட் தங்கம் விலை 13,675 ரூபாயாகவே உள்ளது. மேலும் தங்கம் விலை அதிகரித்துள்ள காரணத்தால் மக்கள் தற்போது 18 கேரட், 14 கேரட் தங்க நகைகளை வாங்கத் துவங்கியுள்ளனர். இதன் அடிப்படையில் சென்னை ரீடைல் சந்தையில் இன்று 18 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை 11,235 ரூபாயாக உள்ளது, 14 கேரட் விலை 8950 ரூபாயாக உள்ளது.
தங்கம் விலை வேகமாகச் சரிய மிக முக்கிய காரணம் அமெரிக்கா பத்திர முதலீட்டுச் சந்தையும், ரூபாய் மதிப்பில் ஏற்படும் தடுமாற்றம் தான்.
இதேவேளையில் ஆர்பிஐ தனது நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்த அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கும் காரணத்தால் இந்திய பங்குச்சந்தையும் உயர்வுடன் துவங்கி முடிந்தும் உள்ளது. தற்போதைய முதலீட்டுச் சந்தையின் நிலைமை தொடர்ந்தால் தங்கம் விலை 1,48,000-1,47,300 வரையில் சரியவும் வாய்ப்புள்ளது.
ஆனால் வெள்ளி இன்று எம்சிஎக்ஸ் சந்தையில் 0.5 சதவீதம் வரையில் உயர்ந்து 2,26,999 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இது வியாழக்கிழமை வர்த்தகத்தை ஒப்பிடுகையில் 1122 ரூபாய் அதிகமாகவும்.
இன்று மாலை எம்சிஎக்ஸ் சந்தையில் சுமார் 1 சதவீதம் வரையில் உயர்ந்து 2,27,938 ரூபாயாக உள்ளது. ஆனால் ரீடைல் சந்தையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் 245 ரூபாயாக உள்ளது.
இது பண்டிகை காலம் என்பதால் தங்க நகைக்கு அதிகப்படியான டிமாண்ட் இருந்தாலும் அதிகப்படியான விலை காரணமாக மக்கள் வெள்ளியில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளது ஈடிஎப் முதலீடுகளும் காட்டுகிறது.


Click it and Unblock the Notifications
