கடந்த 4 நாட்களாக அதிர்ச்சி அளித்த வந்த தங்கம் விலை இன்றைய தினம் கிராமுக்கு 15 ரூபாய் குறைந்துள்ளது. ஏனெனில் இந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு 1,400 ரூபாய் வரை தங்கம் விலையில் ஏற்றம் இருந்தது. இந்நிலையில் தங்கம் விலை எப்போது குறையும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இன்றைய தினம் கிராமுக்கு 15 ரூபாய் குறைந்துள்ளது. கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
இந்தியாவில் ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.6,865 ஆகவும், அதேபோல் 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 7,489 ஆகவும் உள்ளது.

கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்துள்ளது. 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 6,865 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 சவரன் 22 கேரட் தங்கம் விலை 120 ரூபாய் குறைந்து 54,920 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 16 ரூபாய் குறைந்து 7,489 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் 24 கேரட் தங்கம் விலை 128 ரூபாய் குறைந்து 59,912 ரூபாயாக உள்ளது.
1 கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை 12 ரூபாய் குறைந்து 5,623 ரூபாயாக உள்ளது. 1 சவரன் 18 கேரட் தங்கம் விலை 96 ரூபாய் குறைந்து 44,984 ரூபாயாக உள்ளது.
கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: கோவை மற்றும் மதுரையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி இன்று 1 கிராம் 97 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னை, மதுரை மற்றும் கோயம்பத்தூரில் 1 கிலோ வெள்ளி விலை 97,000 ரூபாயாக உள்ளது.
கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிவிப்பில் தங்கத்திற்கான சுங்க வரி குறைக்கப்பட்டது. இதன் காரணமாக தங்கம் விலை கணிசமாக குறைந்தது.எனவே இதைப் பயன்படுத்தி பொதுமக்கள் மட்டுமின்றி நகை வியாபாரிகளும் அதிக அளவில் தங்கத்தை வாங்கினர். இதனால் சில்லறை தங்க நகை வியாபாரிகளின் வருவாய் இந்த நிதியாண்டில் 22 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று கிரிசில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் அறிவிப்பில் ஏற்பட்ட விலை குறைப்பின் காரணமாக தங்க நகை கடைகளை விரிவுபடுத்தவும் பல நகைக்கடைக்காரர்கள் திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications