செப்டம்பர் 30-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்துள்ளது. செப்டம்பர் 12-ஆம் தேதிக்குப் பிறகு கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலையில் கடந்த 2 தினங்களாக குறைவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த 18 தினங்களில் தோராயமாக 400 ரூபாய் வரை கிராமுக்கு தங்கம் விலையில் ஏற்றம் இருந்தது. ஆனால் கடந்த 2 தினங்களில் 30 ரூபாய் மட்டுமே குறைந்துள்ளது.
இந்தியாவில் ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் 7,080 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் 24 கேரட் தங்கம் 7,724 ரூபாயாக உள்ளது.

கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 7,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 7,724 ரூபாயாக உள்ளது. 1 சவரன் 22 கேரட் தங்கம் விலை 56,640 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் 24 கேரட் தங்கம் விலை 61,792 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
பொதுவாக 24 கேரட் தங்கத்தில் 99.99 சதவீத சுத்த தங்கமும், 22 கேரட்டில் 91.67 சதவீத சுத்த தங்கமும் இருக்கும். 24 கேரட் தங்கம் சுத்தமான தங்கம். இதை வைத்து கோல்ட் பார் மற்றும் கோல்ட் காயின்களை தான் செய்ய முடியும். 24 கேரட் தங்கத்தை வைத்து நகை செய்ய முடியாது. அதேபோல 22 கேரட் தங்கம் 24 கேரட் தங்கத்தை விட வளையக்கூடியதாக இருக்கும் காரணத்தினால் இவற்றை வைத்து தங்க நகைகளை செய்ய முடியும். இதனால்தான் எப்பொழுதும் 22 கேரட் தங்கத்தை ஒப்பிடுகையில் 24 கேரட் தங்கத்தின் விலை சற்று விலை உயர்ந்ததாக இருக்கும்.
கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு 0.10 காசுகள் குறைந்து 100.90 காசுகளுக்கு விற்பனையாகிறது. இன்று 1 கிலோ வெள்ளி விலை 1,00,900 ரூபாயாக உள்ளது.
பிற கடன்களை விட தங்க நகைகளை வைத்து பெரும் கடன்களுக்கு வட்டி விகிதம் குறைவு. இதனால் தங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளின் கல்வி செலவுகள், திடீர் மருத்துவச் செலவுகள், பிற அவசர செலவுகள் என பலவற்றுக்காகவும் தங்க நகைகளை வைத்து மக்கள் கடன் பெறுகின்றனர். அவசரத்திற்கு உதவுவதன் காரணமாகத்தான் நம் நாட்டில் தங்கத்திற்கு அவ்வளவு மதிப்பு. பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் முதன்மையாக சேமிக்கும் ஒரு பொருள் என்றால் அது தங்க நகைகள் தான்.
இன்றும் நேற்றும் தங்கம் விலை குறைந்து வருகிறது. ஆனால் கடந்த 18 நாட்களாக ஏற்பட்ட ஏற்றத்தை அவை ஈடு செய்ததா? என்று பார்த்தால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முன்பே பார்த்தது போல் தங்கம் விலை கடந்த 18 நாட்களில் 400 ரூபாய் ஏறி உள்ளது. ஆனால் கடந்த 2 நாட்களில் பார்க்கும்போது 30 ரூபாய் மட்டுமே குறைந்துள்ளது.
More From GoodReturns

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு.. நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்..!

தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களில் விலை எப்படி இருக்கும்?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை



Click it and Unblock the Notifications