இந்தியாவில் அக்டோபர் 7-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ. 20 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த 2 தினங்களாக தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி இருந்த நிலையில், இன்றைய தினம் தங்கம் விலை குறைந்து காணப்படுகிறது. இந்தப் பதிவில் கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
இந்தியாவில் ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 7,100 ரூபாயாக உள்ளது. அதேபோல 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 7,745 ரூபாயாக உள்ளது.

கோயம்புத்தூர் மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: இன்றைய நிலவரப்படி கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 20 குறைந்து 7,100 ரூபாயாக உள்ளது. 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 160 ரூபாய் குறைந்து ரூ. 56,800 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் 24 கேரட் தங்கம் 22 ரூபாய் குறைந்து ரூ. 7,745 ஆக உள்ளது. 1 சவரன் 24 கேரட் தங்கம் 276 ரூபாய் குறைந்து ரூ. 61,960 ரூபாயாக உள்ளது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய ஏற்றம் முதலீட்டாளர்களுக்கு கவலை தரும் விஷயமாகத்தான் உள்ளது. கடந்த ஜூலை 23-ஆம் தேதி அன்று வெளியான பட்ஜெட் அறிவிப்பில் தங்கத்திற்கான சுங்க வரி குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து தங்கம் விலை வெகுவாக குறைக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சியில் இருந்த மக்களுக்கு கவலை அளிக்கும் விதமாக செப்டம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து தங்கம் விலை கிடுகிடுவென ஏறத் தொடங்கியது.
கோயம்பத்தூர் மதுரை போன்ற பரபரப்பான நகரங்களில் உள்ள மக்கள் தங்கத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். இந்த இரு நகரங்கள் மட்டுமின்றி நம் நாட்டில் பொதுவாகவே தங்கத்தின் மீதான ஈர்ப்பு தங்க நகை விலை எவ்வளவு ஏறினாலும் குறையாது. அதே சமயத்தில் தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் போது அது சாமானிய மக்களை வெகுவாக பாதிக்கலாம். ஏனெனில் தங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க சில பெற்றோர்கள் சேமிப்புத் திட்டங்களை தேர்ந்தெடுத்தாலும், பலர் தங்க நகைகளை தான் நம்பியுள்ளனர். இது போன்ற நபர்களுக்கு இன்றைய தினம் ஏற்பட்டுள்ள விலை குறைவு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
கோயம்புத்தூர் மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இன்றைய தினம் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் உள்ளது. ஒரு கிராம் 103 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னை, மதுரை மற்றும் கோயம்பத்தூரில் ஒரு கிலோ 1,00,300 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!



Click it and Unblock the Notifications