தங்கம் விலை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் முழுவதும் முதலீட்டாளர்களுக்கு கவலை அளிக்கும் விதமாக எகிறிக்கொண்டே சென்றாலும் இன்று 3-வது நாளாக தொடர்ந்து சரிவை கண்டுள்ளது. செப்டம்பர் மாதத்தின் 2-வது நாளான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் வரை குறைந்துள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று அதள பாதாளத்திற்கு சென்ற தங்கம் விலை அதன் பிறகு படிப்படியாக ஏறி நகை பிரியர்களுக்கு ஷாக் தந்தது. இதனால் பலரும் எப்போது தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கு தற்போது நேரம் வந்துள்ளது.
இந்தியாவில் ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 6,670 ஆகவும், அதேபோல் 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 7,277 ஆகவும் உள்ளது. இந்த பதிவில் கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: செப்டம்பர் 2-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 25 ரூபாய் குறைந்து 6,670 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை 200 ரூபாய் குறைந்து 53,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 27 ரூபாய் குறைந்து 7,277 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் 24 கேரட் தங்கத்தின் விலை 216 ரூபாய் குறைந்து 58,216 ரூபாயாக உள்ளது.
இன்று 1 கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை 20 ரூபாய் குறைந்து 5,464 ரூபாயாக உள்ளது. அதேபோல 1 சவரன் 18 கேரட் தங்கத்தின் விலை 160 ரூபாய் குறைந்து 43,712 ரூபாயாக உள்ளது.
கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.91 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ. 91,000 ஆகவும் உள்ளது. சர்வதேச வெள்ளி விலை நிலவரத்தை பொறுத்தே.. இந்தியாவில் வெள்ளியின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. எனவே இதை பொறுத்து வெள்ளியின் விலை உயரலாம் அல்லது குறையலாம்.
நம் நாட்டுப் பெண்களின் முக்கியமான முதலீடு தங்க நகைகள் தான். கையில் சிறிதளவு பணம் சேர்ந்தால் உடனே அதை வைத்து நகை வாங்கிவிடுவார்கள். இதுபோன்ற நபர்களுக்கு தடையாய் அமைந்தது சமீபத்திய தங்க விலை ஏற்றம். இதனால் பலரும் விலை குறைவுக்காக காத்திருந்தனர். அதற்கு உதவும் வகையில் இன்று தங்க நகையின் விலை குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications