பழைய விலைக்கே திரும்பிய தங்கம்: டிரம்ப் வேற சிக்னல் கொடுத்துட்டாரு.. இப்போவே நகை வாங்கலாமா?

ஈரான் போர் நிலவரங்களுக்கு ஏற்ப ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வரக்கூடிய தங்கத்தின் விலை இன்றைய தினம் குறைந்து பொதுமக்களுக்கு நிம்மதியை தந்திருக்கிறது. சென்னை ,கோவை , மதுரை உட்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இன்றைய தினம் ஆபரண தங்கத்தின் விலை என்ன என்பதை தற்போது நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் நேற்று ஒரு கிராம் 14,870 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்று விலை குறைந்திருக்கிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,750 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதாவது தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 120 ரூபாய் வரை விலை சரிவடைந்து இருக்கிறது. அதேபோல ஒரு சவரன் தங்கத்தை பொறுத்த வரை நேற்றைய தினம் 1,18,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்று 1,18,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பழைய விலைக்கே திரும்பிய தங்கம்: டிரம்ப் வேற சிக்னல் கொடுத்துட்டாரு.. இப்போவே நகை வாங்கலாமா?

ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 960 ரூபாய் விலை சரிவடைந்து இருக்கிறது. சென்னை பொருத்தவரை ஆபரண தங்கத்தின் விலை சனிக்கிழமை 15 ரூபாய் விலை சரிவடைந்து 14, 750ரூபாய்க்கு விற்பனையானது. அதன் பின்னர் ஞாயிறு , திங்கள் என இரண்டு நாட்களும் தங்கத்தின் விலையில் மாற்றமில்லை. நேற்றைய தினம் ஒரு கிராமுக்கு 120 ரூபாய் விலை உயர்ந்த தங்கம் இன்றைய தினம் ஒரு கிராமுக்கு 120 ரூபாய் விலை சரிவடைந்து மீண்டும் பழைய விலைக்கு திரும்பி இருக்கிறது.

சென்னை மட்டும் என இல்லாமல் தமிழ்நாட்டின் பிரதான நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சி என பல்வேறு நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 14, 750 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,18,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மே மாதம் பத்தாம் தேதியிலிருந்து விலை உயரத் தொடங்கிய தங்கம் மே 13ஆம் தேதிக்கு பிறகு சரிவடைந்து வருகிறது.

இறக்குமதி வரி உயர்த்தப்பட்ட பிறகு வெள்ளி விலை வேகமாக உயர்ந்த நிலையில் தற்போது அதுவும் விலை சரிவடைந்திருக்கிறது. சென்னையில் நேற்று 300 ரூபாய்க்கு கிராமுக்கு விற்பனையான ஒரு கிராம் வெள்ளி இன்று 15 ரூபாய் விலை குறைந்து 285 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 15 ஆயிரம் ரூபாய் விலை சரிவடைந்து 2.85 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே டிரம்ப் ஈரான் போர் விரைவில் முடியும் என்றும் கச்சா எண்ணெய் விலை சரிவடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். அந்த வகையில் ஈரான் போர் முடிவுக்கு வந்து கச்சா எண்ணெய் விலை சரியும் போது தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் உயரத் தொடங்கும். எனவே இந்த விலை குறைவு வாய்ப்பை மக்கள் தவற விட்டு விடக்கூடாது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+