குறைந்தது தங்கம் விலை..!! பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வுக்கு மத்தியில் தங்கம் தந்த ஆறுதல்..!!

ஜூன் மாதத்தின் முதல் நாளிலேயே தங்கம் விலை தடாலடியாக குறைந்து சாமானிய மக்களுக்கு நிம்மதியை தந்திருக்கிறது. பெட்ரோல் , டீசல் விலை உயர்வு மற்றும் எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு தங்கம் விலை சரிவடைந்து ஆறுதலை தந்திருக்கிறது.

சென்னையில் ஜூன் ஒன்றாம் தேதியான இன்று தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது. நேற்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 14,630 ரூபாய்க்கு விற்பனையானது. அதுவே இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 14,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது நேற்றுடன் ஒப்பிடும்போது சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 130 ரூபாய் விலை குறைந்திருக்கிறது.

குறைந்தது தங்கம் விலை..!! பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வுக்கு மத்தியில் தங்கம் தந்த ஆறுதல்

ஒரு சவரன் ஆபரண தங்கம் நேற்று 1,17,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்றைய தினம் 1,16,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதாவது தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1000 ரூபாய்க்கு மேல் விலை சரிவடைந்து இருக்கிறது.இன்றைய விலைக்கு 12% செய்கூலி சேதாரம் 3% ஜிஎஸ்டி சேர்த்தால் ஒரு பவுன் தங்க நகை அதாவது 8 கிராம் தங்க நகை வாங்க 1.34 லட்சம் ரூபாய் தேவைப்படும்.

சென்னையில் இன்று 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 15,818 ரூபாய்க்கும் 10 கிராம் 158,180 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு 12,180 ரூபாய்க்கும், , சவரன் 97,440 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஜூன் மாதத்தின் முதல் நாள் வாரத்தின் முதல் நாள் என தொடக்கத்திலேயே தங்கம் விலை குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது. இந்த மாதம் முழுவதுமே இந்த விலை குறைவு நீடிக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Also Read

வெள்ளியை பொறுத்தவரை அதன் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 290 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2.9 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மே மாதம் முழுவதுமே ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த தங்கத்தின் விலை ஜூன் மாதத்தில் விலை சரிவிலேயே வர்த்தகத்தை தொடங்கி இருக்கிறது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்தது தங்கத்தின் விலை சரிவடைவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

Recommended For You

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 28 டாலர்கள் சரிவடைந்து 4513 டாலராக விற்பனை ஆகிறது. இதன் தாக்கம் தான் இந்திய சந்தையிலும் எதிரொலித்திருக்கிறது. இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 1,54,200 ரூபாய் என சரிந்துள்ளது. அதே போல ஒரு கிலோ வெள்ளியின் விலை 2,65,677 ரூபாயாக வர்த்தகமாகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+