தங்கம் விலையில் நடந்த மேஜிக்..!! ஒரே நாளில் சர்ரென குறைந்த விலை..!!

சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை தடாலடியாக குறைந்து மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சில நாட்களாக லேசாக விலை ஏறுவது, இறங்குவது என இருந்த தங்கம் இன்று 1000 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது.

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 14,230 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு சவரன் பொறுத்தவரை 1,13,840 ரூபாய்க்கு விற்பனையானது. அதுவே இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 130 ரூபாய் விலை குறைந்து 14,100 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் விலை 1,040 ரூபாய் விலை சரிந்து 1, 12,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையில் நடந்த மேஜிக்..!! ஒரே நாளில் சர்ரென குறைந்த விலை..!!

சென்னையில் இன்றைய நிலவரப்படி ஒரு பவுன் நகை வாங்க வேண்டும் என்றால் செய்கூலி , சேதாரம், ஜிஎஸ்டி சேர்த்து சராசரியாக 1.30 லட்சம் ரூபாய் வரை செலுத்த வேண்டி இருக்கும். தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏறுவதும் இறங்குவதும் என இருந்து இன்று பெரிய விலை குறைவை சந்தித்துள்ளது.

சென்னையில் ஏப்ரல் 1ஆம் தேதி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 14,050 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை அடுத்து விலை ஏறுவது இறங்குவதுமாக இருந்து வந்த தங்கம் அதிகபட்சமாக ஏப்ரல் 18ஆம் தேதி 14,360 ரூபாய்க்கு விற்பனையானது. இதன் பிறகு படிப்படியாக குறைந்து இன்று ஒரு 14,100ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைவு அப்படியே நீடிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

Also Read

ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தை, கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி நடவடிக்கை ஆகியவை தான் தங்கம் விலையில் மாற்றத்தை ஏற்படுத்த போகின்றன. அந்த வகையில் மே மாதத்தில் தங்கத்தின் விலை போக்கு எப்படி இருக்கும் என்பதை ஈரான் போர் அமைதி ஒப்பந்தம் தான் முடிவு செய்யப் போகிறது.

சென்னையில் இன்றைய தினம் 24 கேரட் தங்கம் கிராமுக்கு 142 ரூபாய் விலை சரிந்து யர்ந்து 15,382 ரூபாய்க்கும் 10 கிராம் தங்கத்தின் விலை 1420 ரூபாய் விலை சரிந்து 1,53,820 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,760 ரூபாய்க்கும் ஒரு சவரன் 94,080 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Recommended For You

சென்னையின் இன்றைய தினம் வெள்ளியின் விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் குறைந்து 265 ரூபாக்கும் ஒரு கிலோ வெள்ளி 5000 ரூபாய் சரிந்து 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஏப்ரல் 1ஆம் தேதி அன்று ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஏப்ரல் 18இல் ஒரு கிராம் 280 ரூபாய் வரை விலை உயர்ந்து பின்னர் சரிவடைந்தது. இன்று ஏப்ரல் 1ஆம் தேதி விலைக்கே வந்து நிற்கிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+