தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

ஈரான் போர் தொடர்பான ஒவ்வொரு தகவல்களும் தங்கத்தின் விலையில் மாற்றத்தை கொண்டு வருகின்றன. அந்த வகையில் ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து இன்றுவரையிலான இந்த 11 நாட்களில் தங்கத்தின் விலை ஒரு நாள் விலை ஏறுவது, ஒருநாள் விலை இறங்குவது என ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இதனால் இப்போது தங்கத்தை வாங்கலாமா அல்லது மேலும் விலை குறையும் என காத்திருக்கலாமா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை உயர்வு கண்டு ஒரு கிராம் 14,050 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை அடுத்து ஏப்ரல் 2ஆம் தேதியே தங்கத்தின் விலை 13,750 ரூபாய் என சரிவடைந்தது. இதன் பின்னர் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த தங்கம் விலை ஏப்ரல் 8ஆம் தேதி அன்று அதிகபட்சமாக ஒரு கிராம் 14,200 ரூபாய் என விலை உயர்வு கண்டது. ஏப்ரல் மாதத்திலேயே அதிகபட்ச விலைக்கு தங்கம் விற்பனை செய்யப்பட்ட நாள் இதுவாகும்.

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

இதன் பின்னர் மீண்டும் தங்கத்தின் விலை குறைவதும் ஏறுவதுமாக இருந்து வருகிறது. இந்த 11 நாட்களில் 5 நாட்கள் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது, 4 நாட்கள் தங்கத்தின் விலை சரிவடைந்து இருக்கிறது. ஒரு நாள் விலை மாற்றம் இல்லை. சென்னை பொருத்தவரை இன்றைய தினம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு 25 ரூபாய் விலை குறைந்திருக்கிறது.

நேற்று 14,125 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம் இன்று 14,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனை பொறுத்தவரை நேற்று 1,13,000 ரூபாய்க்கு விற்பனையான தங்கம் இன்று 1,12, 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது நேற்றுடன் ஒப்பிடும்போது இன்றைய தினம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் விலை சரிவடைந்து இருக்கிறது.

தங்கத்தின் இந்த விலை ஏற்ற இறக்கம் ஈரான் போர் தொடர்பான அறிவிப்புகளோடு ஒத்துப்போகிறது. ஈரான் போர் தீவிரமடைவதாக அறிவிப்பு வெளியே வரும்போது எல்லாம் தங்கத்தின் விலை சரிவடைகிறது. ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியங்கள் தென்படும் போது தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் இன்றைய தினம் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இதனை ஒட்டி தங்கம் விலை எந்த ஒரு பெரிய அளவிலான மாற்றமும் இல்லாமல் தங்கம் விலை விற்பனை செய்யப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையின் போக்கு எப்படி இருக்கும் என்பதை பொறுத்து அடுத்த வாரத்தில் தங்கத்தின் விலையில் நாம் பெரிய அளவிலான மாற்றத்தை எதிர்பார்க்க முடியும். தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையில் இன்றைய தினம் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் இல்லை 265 ரூபாய் என்ற அளவிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து பார்த்தால் ஜனவரி மாதத்தில் வரலாற்று உச்சபட்ச விலை எட்டிய தங்கம் அதன் பிறகு சரிவடைந்தது. ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்ளாகவே விலை நீடித்து வருகிறது. தற்போது வீட்டில் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு தங்க நகை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் இந்த ஏற்ற இறக்கத்தை கண்டு குழப்பம் அடையாமல் தற்போதே நகையை வாங்கிக் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

ஏனெனில் ஈரான் போர் அமைதி பேச்சு வார்த்தையில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உடன்பாடு ஏற்படும் பட்சத்தில் போர் பதற்றம் இன்னும் தனியும். இது இது கச்சா எண்ணெய் விலையை குறைய செய்யும். கச்சா எண்ணெய் விலை குறையும்போது தங்கத்தின் விலை உயரும். அதுமட்டுமில்லாமல் உலகின் இரண்டாவது பெரிய தங்க உற்பத்தி நாடான ரஷ்யா மே 1ஆம் தேதியிலிருந்து தங்க ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்திருக்கிறது. இதன் காரணமாக மே ஒன்றாம் தேதிக்குப் பின்னர் உலக சந்தையில் தங்கத்தின் சப்ளை குறைந்து தங்கத்தின் விலை உயரும்.எனவே விலை ஏறுவது இறங்குவது என்பதை கவனத்தில் கொள்ளாமல் தற்போது வாங்கி வைத்துக் கொள்வது நல்லது என நிபுணர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+