சென்னை: தங்கத்தின் பயன்பாடு மக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் தொழிற்துறையிலும் பல வகையில் அதிகரித்துள்ளது. இப்படியிருக்கையில் தங்கத்திற்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வேளையில் இதன் விலையும் அதிகரிக்க வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாகத் தங்கம் விலை மந்த நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதால் மக்கள் என்ன செய்வதெனத் தெரியாமல் விழித்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்படியிருக்கும் சூழ்நிலையில் அமெரிக்கச் சந்தையில் நேற்று பங்குச்சந்தை பெரும் சரிவை எதிர்கொண்ட நிலையில், தங்கம் விலையில் சிறிய அளவிலான மாற்றம் பதிவாகியுள்ளது.

இன்று சர்வதேச ஸ்பாட் சந்தையில் வர்த்தகம் துவங்கியதில் இருந்து கிட்டத்தட்ட ஓரே மட்டத்தில் தான் வர்த்தகமாகி வருகிறது. நேற்றைய வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2505 டாலருக்கு வர்த்தகமான நிலையில், அமெரிக்க வர்த்தக நேரத்தில் 2476 டாலர் வரையில் சரிந்தது. ஆனால் இது நேற்றைய வர்த்தக முடிவில் 2492 டாலருக்கு முடிந்தது.
இந்த சூழ்நிலையில் இன்றைய வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2495 டாலருக்குத் தொடர்ந்து வர்த்தகம் செய்யப்பட்டு மந்த நிலையிலேயே உள்ளது.
மேலும் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.17 சதவீதம் அதிகரித்து அக்டோபர் மாதம் பியூச்சர்ஸ் ஆர்டர் மதிப்பு 71,504 ரூபாயாக உள்ளது. இதோடு வெள்ளி விலை 0.01 சதவீதம் அதிகரித்து 83,259 ரூபாயாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்க டாலர் மதிப்பு நேற்றைய வர்த்தகத்தில் உயர்ந்தது. இன்று டாலர் மதிப்பு 0.20 சதவீதம் குறைந்து 101.62 ஆக உள்ளது DXT இன்டெக்ஸ்.
அமெரிக்க டாலர் மதிப்பு புதன்கிழமை அதிகரிக்கத் துவங்கியது மூலம், பல நாட்களாக மந்த நிலையில் இருந்த தங்கம் விலை இன்று கணிசமாக உயரத் துவங்கியுள்ளது. இன்று தங்கம் விலை சிறிய அளவில் உயர்ந்தாலும் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2,500 டாலருக்கும் குறைவாகவே உள்ளது.
இருப்பினும், தொடர்ச்சியான புவிசார் அரசியல் அபாயங்கள் மற்றும் நெருங்கிய ஃபெடரல் ரிசர்வ் (Fed) வட்டி விகிதக் குறைப்புகள் ஆகியவை தங்கத்தின் விலையை ஆதரிக்கலாம். இதேவேளையில் அமெரிக்காவில் உற்பத்தித் துறை தரவுகள் வெளியான நிலையில் அந்நாட்டில் மீண்டும் ரெசிஷன் அச்சம் அதிகரித்து பங்குச்சந்தையைப் பதம் பார்த்துள்ளது. இதுவும் தங்கம் விலை இன்று சிறிய அளவில் உயர முக்கியமான காரணமாக உள்ளது.
மேலும் புதன்கிழமை பிற்பகுதியில், JOLTS வேலைவாய்ப்பு தரவுகள் மற்றும் ஃபெட் பெய்ஜ் புத்தக தரவுகள் வெளியிடப்படும். ஆனாலும் முதலீட்டாளர்களின் கவனம் அனைத்தும் வெள்ளிக்கிழமை வெளியாகும் அமெரிக்காவின் ஆகஸ்ட் மாத நான் ஃபார்ம் பேரோல்ஸ் (NFP) தரவுகள் தான். இதுதான் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்-ன் செப்டம்பர் மாத நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி குறைப்பிற்கு வழிவகுக்கும்.
நான் ஃபார்ம் பேரோல்ஸ் (NFP) தரவுகள் எதிர்பார்த்ததை விடப் பலவீனமானதாக இருந்தால் அமெரிக்காவில் ரெசிஷன் அச்சம் அதிகரித்து, வேகமான வட்டி குறைப்புக்கு வழிவகுக்கும். இது நடந்தால் தங்கம் விலை சர்வதேசச் சந்தையில் அதிகரிக்கும். எனவே தங்கம் வாங்கத் திட்டமிடுவோர் தங்கம் விலை மந்த நிலையில் இருக்கும் போதே வாங்குவது உத்தமம். காரணம் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் எந்த அளவுக்கு வட்டியைக் குறைக்கும் எனச் சரியாகக் கணிக்க முடியாத காரணத்தால் முதலீட்டுச் சந்தையில் இந்த குழப்பம் நிலவுகிறது.
More From GoodReturns

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!



Click it and Unblock the Notifications