சென்னை: இந்தியாவில் இன்று தங்கம் விலை மந்த நிலைக்குத் தள்ளப்பட்டாலும், நாளை பெரும் உயர்வுடன் சந்தை வர்த்தகம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வார இறுதியில் சர்வதேச சந்தை விடுமுறை என்பதாலும் அமெரிக்கச் சந்தையில் பதிவான தடுமாற்றமும், டாலர் மதிப்பில் ஏற்பட்ட உயர்வும் தங்கம் விலையை இன்று மாற்றமில்லா நிலையில் இந்திய ரீடைல் சந்தையில் வைத்துள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் தங்கம் விலை மாற்றமில்லாமல் ஒரு சவரன் 53,560 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலை அதிகப்படியான ஏற்ற இறக்கத்தைச் சந்தித்தாலும் இன்று வரையில் தங்கம் விலை ஆகஸ்ட் மாதத்தில் 4.12 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்த நிலையில் சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை திங்கட்கிழமை வர்த்தகத்தில் 2,500 டாலருக்கும் அதிகமாக நிலையில் தொடர்ந்து வர்த்தகமாகி வருகிறது. சீனாவில் தங்கம் கொள்முதல் அதிகரித்துள்ள காரணத்தால் தினமும் ஆசியச் சந்தை வர்த்தகத்தில் தங்கம் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
இருப்பினும், அமெரிக்க மத்திய வங்கியான Federal Reserve (Fed) செப்டம்பர் மாதம் தனது பென்ச்மார்க் வட்டி விகிதங்களைக் குறைக்கத் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள காரணமாக, தங்கத்தின் வீழ்ச்சிக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது. குறைந்த வட்டி விகிதங்கள் பொதுவாகத் தங்கத்தின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும்.
மேலும், மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை ஆகியவை சர்வதேச முதலீட்டாளர்கள் தங்களது பணத்தைப் பாதுகாப்பாக வைக்க ஒரு இடம் வேண்டும். இதற்குத் தங்கம் தொடர்ந்து முக்கிய முதலீடாகவே திகழ்ந்து வருகிறது.
மறுபுறம், சீனாவின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தடுமாற்றம் சாமானிய மக்கள் தங்கம் வாங்குவதைக் குறைக்கத் துவங்கினாலும் அந்நாட்டு மத்திய வங்கிகளும், பிற முதலீட்டு நிறுவனங்களும் தங்கத்தின் மீது கணிசமான முதலீட்டை வைத்து வருவதால் தங்கம் விலை தொடர்ந்து உயர்வுடன் காணப்படுகிறது.
திங்கள் பிற்பகுதியில், அமெரிக்க ஜூலை நிலையான பொருட்கள் ஆர்டர்கள் அளவுகள் வெளியிடப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டாம் காலாண்டிற்கான அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் ஜூலைக்கான தனிப்பட்ட நுகர்வு செலவுகள்-விலைக் குறியீடு (PCE) ஆகியவை வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும். இவை அனைத்தும் அந்நாட்டின் பென்ச்மார்க் வட்டி விகித குறைப்பிற்கு நேரடி தொடர்பில் இருக்கும் காரணத்தால் இது தங்கம் விலையில் கட்டாயம் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இன்று சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை யாரும் 2515 டாலருக்கும் அதிகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், இதன் தாக்கம் நாளை கட்டாயம் எதிரொலிக்கும். எனவே இரவு அமெரிக்க வர்த்தக நடைமுறை நாளைய தங்கம் விலையைத் தீர்மானிக்கும் காரணத்தால், தங்கம் வாங்கத் திட்டமிடுவோர் இன்றே தங்கம் வாங்குவது நல்ல வாய்ப்பாக அமையும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களில் விலை எப்படி இருக்கும்?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

ஈரோடு மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது!! இனி கோவை மக்கள் ஈரோடுக்கு படையெடுப்பாங்க!!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?



Click it and Unblock the Notifications