தங்கம் விலை 2வது நாளாக சரிவு.. இதுதான் நல்ல சான்ஸ்.. சென்னை, கோவை, மதுரையில் ஆபரண தங்கம் விலை என்ன..?

அமெரிக்க பொருளாதாரத்திலும், நிதி நிலையிலும் ஏற்பட்டு உள்ள தடுமாற்றம் தங்கம் வாங்க நினைப்போருக்கு பெரிய வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

அமெரிக்க அரசு தனது கடன் வரம்பை அதிகரிப்பது குறித்த பேச்சுவார்த்தையை வேகப்படுத்திய நிலையில் கடந்த 7 நாட்களாக டாலர் மதிப்பு உயர்ந்த வண்ணம் இருந்தது, ஆனால் இன்று காலை வர்த்தகத்தில் டாலர் இன்டெக்ஸ் சரிந்த காரணத்தால் இந்தியாவில் தங்கம் விலை 2வது நாளாக குறைந்துள்ளது.

தங்கம் விலை 2வது நாளாக சரிவு.. இதுதான் நல்ல சான்ஸ்.. சென்னை, கோவை, மதுரையில் ஆபரண தங்கம் விலை என்ன?

அமெரிக்காவில் ரெசிஷன் அச்சம், நிதி நெருக்கடி ஆகிய பிரச்சனைகளால் முதலீட்டை சந்தை மந்தமடைந்துள்ளது. இதன் எதிரொலியாக தங்கம் மீதான முதலீடு குறைந்து வருகிறது, இது இந்தியர்களுக்கு ஜாக்பாட் ஆக மாறியுள்ளது.

சர்வதேச சந்தையில் மே 11 ஆம் தேதி ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2038 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 1977 டாலர் வரையில் சரிந்துள்ளது. இந்த தொடர் சரிவில் டாலர் மதிப்பில் ஏற்பட்ட தடுமாற்றம் இந்தியர்களுக்கு அதிகளவில் நன்மை அளித்துள்ளது என்றால் மிகையில்லை.

டாலர் மதிப்பில் இன்று காலையில் பதிவான சரிவு எம்சிஎக்ஸ் சந்தையில் பியூச்சர்ஸ் ஆர்வர் விலை 0.10 சதவீதம் வரையில் சரிந்து 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 60,083 ரூபாயாக சரிந்துள்ளது. இதேபோல் வெள்ளி விலை 0.29 சதவீதம் வரையில் சரிந்து 72,450 ரூபாயாக உள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் தங்கம் விலை இந்திய அளவில் சராசரியாக, 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 200 ரூபாய் சரிந்து 56100 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 220 ரூபாய் சரிந்து 61200 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.

மேலும் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை இந்திய அளவில் சராசரியாக ஒரு சவரன் 44,880 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை சராசரியாக இந்திய அளவில் 100 ரூபாய் குறைந்து 74,500 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 56,500 ரூபாய், மும்பை - 56,100 ரூபாய், டெல்லி - 56,250 ரூபாய், கொல்கத்தா - 56,100 ரூபாய், பெங்களூர்56,150 - ரூபாய், ஹைதராபாத் 56,100 - ரூபாய், கேரளா - 56,100 ரூபாய், புனே - 56,100 ரூபாய், பரோடா - 56,150 ரூபாய், அகமதாபாத் - 56,150 ரூபாய், ஜெய்ப்பூர் - 56,250 ரூபாய், லக்னோ - 56,250 ரூபாய், கோயம்புத்தூர் - 56,500 ரூபாய், மதுரை - 56,500 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 61,640 ரூபாய், மும்பை - 61,200 ரூபாய், டெல்லி - 61,350 ரூபாய், கொல்கத்தா - 61,200 ரூபாய், பெங்களூர் - 61,250 ரூபாய், ஹைதராபாத் - 61,200 ரூபாய், கேரளா - 61,200 ரூபாய், புனே - 61,200 ரூபாய், பரோடா - 61,250 ரூபாய், அகமதாபாத் - 61,250 ரூபாய், ஜெய்ப்பூர் - 61,350 ரூபாய், லக்னோ - 61,350 ரூபாய், கோயம்புத்தூர் - 61,640 ரூபாய், மதுரை - 61,640 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 45200 ரூபாய், மும்பை - 44880 ரூபாய், டெல்லி - 45000 ரூபாய், கொல்கத்தா - 44880 ரூபாய், பெங்களூர் - 44920 ரூபாய், ஹைதராபாத் - 44880 ரூபாய், கேரளா - 44880 ரூபாய், புனே - 44880 ரூபாய், பரோடா - 44920 ரூபாய், அகமதாபாத் - 44920 ரூபாய், ஜெய்ப்பூர் - 45000 ரூபாய், லக்னோ - 45000 ரூபாய், கோயம்புத்தூர் - 45200 ரூபாய், மதுரை - 45200 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 78100 ரூபாய், மும்பை - 74500 ரூபாய், டெல்லி - 74500 ரூபாய், கொல்கத்தா - 74500 ரூபாய், பெங்களூர் - 78100 ரூபாய், ஹைதராபாத் - 78100 ரூபாய், கேரளா - 78100 ரூபாய், புனே - 74500 ரூபாய், பரோடா - 74500 ரூபாய், அகமதாபாத் - 74500 ரூபாய், ஜெய்ப்பூர் - 74500 ரூபாய், லக்னோ - 74500 ரூபாய், கோயம்புத்தூர் - 78100 ரூபாய், மதுரை - 78100 ரூபாய்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+