பெண்களுக்கு மட்டுமே பிடிக்கும் தங்கம் தற்போது ஆண்களுக்கு அதிகம் பிடிக்க துவங்கியுள்ளது, இதேபோல் பெண்களும் தங்கத்தை நகையாக வாங்காமல் தங்க காயின் மற்றும் பார்களாக வாங்குவது அதிகரித்துள்ளது.
இது ஒருபக்கம் முதலீடாக இருந்தாலும் திருமணத்தின் போது லேட்டஸ்ட் டிசைனில் நகை வாங்க இந்த யுக்தி பயன்படுவதாக பல இளம் பெண்கள் கூறுகின்றனர்.

சர்வதேச சந்தை வர்த்தகத்தால் அதிகம் பாதிக்கப்படும் தங்கம் விலை இன்று பெரிய அளவில் குறைந்துள்ளது, அமெரிக்க பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருக்கும் வேளையில் எப்படியாவது ஜூன் 1 ஆம் தேதிக்குள் அரசின் கடன் வரம்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக ஜோ பைடன் நிர்வாகம் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
இதனால் அமெரிக்க முதலீட்டு சந்தை அதிகளவிலான தடுமாற்றம் இல்லாமல் நிலையாக உள்ளது.
இதேவேளையில் டாலர் மதிப்பு மே 6 ஆம் தேதி முதல் தொடர்ந்து வலிமை அடைந்து வருவதால் இறக்குமதி செய்யப்படும் தங்கம் விலை அதிகரித்தாலும், நிலையான முதலீட்டு சந்தை காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை பெரிய அளவிலான சரிவை பதிவு செய்த காரணத்தால் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பில் எவ்விதமான அதிரடி உயர்வும் இல்லாமல் உள்ளது.
புதன்கிழமை வர்த்தகத்தில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2013 டாலரில் இருந்து 1988 டாலர் வரையில் சரிந்துள்ளது. எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை ஜூன் 5ஆம் தேதி முடியும் ஆர்டர் விலை 0.13 சதவீதம் உயர்ந்து 60,324 ரூபாயாக உள்ளது. ஜூலை 05 ஆம் தேதி முடியும் வெள்ளிக்கான பியூச்சர் ஆர்டர் விலை இன்று 0.18 சதவீதம் சரிந்து 0.18 சதவீதம் சரிந்து 72,453 ரூபாயாக உள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் தங்கம் விலை இந்திய அளவில் சராசரியாக, 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 450 ரூபாய் சரிந்து 56300 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 490 ரூபாய் சரிந்து 61420 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.
மேலும் ரீடைல் சந்தையில் இன்று தங்கம் விலை இந்திய அளவில் சராசரியாக ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 45,040 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை சராசரியாக இந்திய அளவில் 500 ரூபாய் குறைந்து 74,600 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 56,700 ரூபாய், மும்பை - 56,300 ரூபாய், டெல்லி - 56,450 ரூபாய், கொல்கத்தா - 56,300 ரூபாய், பெங்களூர் - 56,350 ரூபாய், ஹைதராபாத் - 56,300 ரூபாய், கேரளா - 56,300 ரூபாய், புனே - 56,300 ரூபாய், பரோடா - 56,350 ரூபாய், அகமதாபாத் - 56,350 ரூபாய், ஜெய்ப்பூர் - 56,450 ரூபாய், லக்னோ - 56,450 ரூபாய், கோயம்புத்தூர் - 56,700 ரூபாய், மதுரை - 56,700 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 61,850 ரூபாய், மும்பை - 61,420 ரூபாய், டெல்லி - 61,570 ரூபாய், கொல்கத்தா - 61,420 ரூபாய், பெங்களூர் - 61,470 ரூபாய், ஹைதராபாத் - 61,420 ரூபாய், கேரளா - 61,420 ரூபாய், புனே - 61,420 ரூபாய், பரோடா - 61,470 ரூபாய், அகமதாபாத் - 61,470 ரூபாய், ஜெய்ப்பூர் - 61,570 ரூபாய், லக்னோ - 61,570 ரூபாய், கோயம்புத்தூர் - 61,850 ரூபாய், மதுரை - 61,850 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 45360 ரூபாய், மும்பை - 45040 ரூபாய், டெல்லி - 45160 ரூபாய், கொல்கத்தா - 45040 ரூபாய், பெங்களூர் - 45080 ரூபாய், ஹைதராபாத் - 45040 ரூபாய், கேரளா - 45040 ரூபாய், புனே - 45040 ரூபாய், பரோடா - 45080 ரூபாய், அகமதாபாத் - 45080 ரூபாய், ஜெய்ப்பூர் - 45160 ரூபாய், லக்னோ - 45160 ரூபாய், கோயம்புத்தூர் - 45360 ரூபாய், மதுரை - 45360 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 78200 ரூபாய், மும்பை - 74600 ரூபாய், டெல்லி - 74600 ரூபாய், கொல்கத்தா - 74600 ரூபாய், பெங்களூர் - 78200 ரூபாய், ஹைதராபாத் - 78200 ரூபாய், கேரளா - 78200 ரூபாய், புனே - 74600 ரூபாய், பரோடா - 74600 ரூபாய், அகமதாபாத் - 74600 ரூபாய், ஜெய்ப்பூர் - 74600 ரூபாய், லக்னோ - 74600 ரூபாய், கோயம்புத்தூர் - 78200 ரூபாய், மதுரை - 78200 ரூபாய்.


Click it and Unblock the Notifications