சாமானிய மக்கள் மற்றும் நகை கடை உரிமையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மீதான இறக்குமதி வரியை பட்ஜெட்டில் குறைக்கப்பட்டது மூலம் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்தாலும் ரீடைல் சந்தையில் தங்கம் விலை கிராமுக்கு 260 ரூபாய் குறைந்து இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. நேற்று தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் சந்தையில் இந்த வரி குறைப்பு முழுமையாக ரீடைல் சந்தை உள்வாங்கும் வரையில் தங்கம் விலை குறையும் என கணித்தது போலவே இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.
பட்ஜெட் நாளான நேற்று தங்கம் விலை 24 கேரட் 10 கிராம் 3000 ரூபாய் வரை சரிந்த நிலையில், இன்று 660 ரூபாய் வரையில் சரிந்துள்ளது. இதேவேளையில் சர்வதேச சந்தையிலும், எம்சிஎக்ஸ் சந்தையிலும் தங்கம் விலை உயர்ந்துள்ள போதிலும் அது ரீடைல் சந்தையில் எதிரொலிக்கவில்லை என்பது கவனிக்க வேண்டிய ஓன்று.

தங்கம் விலை கடந்த 6 நாட்களாக ரீடைல் சந்தையில் தொடர்ந்து குறைந்து வருவது, சாமானிய மக்கள் தங்கம் வாங்குவதற்கு பெரும் வாய்ப்பாக மாறியுள்ளது. ஜூலை 18ஆம் தேதியில் துவங்கிய தங்கம் விலை சரிவு இன்று வரையில் தொடர்கிறது. இன்று இந்திய ரீடைல் சந்தையில் நிலவும் தங்கம் விலைக்கும் சர்வதேசச் சந்தை விலைக்கும் தொடர்பில்லாமல் இயங்குகிறது, இதற்குக் காரணம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இறக்குமதி வரி குறைப்பு தான்.
இன்று சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2408 டாலரில் இருந்து 2416 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையில் இன்று காலை முதல் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர் உடனே காணப்படுகிறது. 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.50 சதவீதம் உயர்ந்து 68,855 ரூபாயாக உள்ளது, 1 கிலோ வெள்ளி விலை 0.34 சதவீதம் உயர்ந்துள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 600 ரூபாய் குறைந்து 64,900 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 660 ரூபாய் குறைந்து 70,800 ரூபாயாக குறைந்துள்ளது. ஜூலை 18ஆம் தேதியில் இருந்து 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை 430 ரூபாய் குறைந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 480 ரூபாய் குறைந்து 51,920 ரூபாயாக உள்ளது. மேலும் ரீடைல் சந்தையில் ஒரு கிலோ வெள்ளி விலை 500 ரூபாய் குறைந்து 92000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 320 ரூபாய் குறைந்து 25,520 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,490 ரூபாய், மும்பை - 6,494 ரூபாய், டெல்லி - 6,509 ரூபாய், கொல்கத்தா - 6,494 ரூபாய், பெங்களூர் - 6,494 ரூபாய், ஹைதராபாத் - 6,494 ரூபாய், கேரளா - 6,494 ரூபாய், புனே - 6,494 ரூபாய், பரோடா - 6,499 ரூபாய், அகமதாபாத் - 6,499 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,509 ரூபாய், லக்னோ - 6,509 ரூபாய், கோயம்புத்தூர் - 6,490 ரூபாய், மதுரை - 6,490 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,080 ரூபாய், மும்பை - 7,085 ரூபாய், டெல்லி - 7,100 ரூபாய், கொல்கத்தா - 7,085 ரூபாய், பெங்களூர் - 7,085 ரூபாய், ஹைதராபாத் - 7,085 ரூபாய், கேரளா - 7,085 ரூபாய், புனே - 7,085 ரூபாய், பரோடா - 7,090 ரூபாய், அகமதாபாத் - 7,090 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,100 ரூபாய், லக்னோ - 7,100 ரூபாய், கோயம்புத்தூர் - 7,080 ரூபாய், மதுரை - 7,080 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 51920 ரூபாய், மும்பை - 51952 ரூபாய், டெல்லி - 52072 ரூபாய், கொல்கத்தா - 51952 ரூபாய், பெங்களூர் - 51952 ரூபாய், ஹைதராபாத் - 51952 ரூபாய், கேரளா - 51952 ரூபாய், புனே - 51952 ரூபாய், பரோடா - 51992 ரூபாய், அகமதாபாத் - 51992 ரூபாய், ஜெய்ப்பூர் - 52072 ரூபாய், லக்னோ - 52072 ரூபாய், கோயம்புத்தூர் - 51920 ரூபாய், மதுரை - 51920 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,520 ரூபாய், மும்பை - 25,520 ரூபாய், டெல்லி - 25,520 ரூபாய், கொல்கத்தா - 25,520 ரூபாய், பெங்களூர் - 25,520 ரூபாய், ஹைதராபாத் - 25,520 ரூபாய், கேரளா - 25,520 ரூபாய், அகமதாபாத் - 25,520 ரூபாய், ஜெய்ப்பூர் - 25,520 ரூபாய், லக்னோ - 25,520 ரூபாய், கோயம்புத்தூர் - 25,520 ரூபாய், மதுரை - 25,520 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 92,000 ரூபாய், மும்பை - 87,500 ரூபாய், டெல்லி - 87,500 ரூபாய், கொல்கத்தா - 87,500 ரூபாய், பெங்களூர் - 88,750 ரூபாய், ஹைதராபாத் - 92,000 ரூபாய், கேரளா - 92,000 ரூபாய், புனே - 87,500 ரூபாய், பரோடா - 87,500 ரூபாய், அகமதாபாத் - 87,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 87,500 ரூபாய், லக்னோ - 87,500 ரூபாய், கோயம்புத்தூர் - 92,000 ரூபாய், மதுரை - 92,000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 28 - 6,216 ரூபாய்
குவைத் - KWD 22 - 5,964 ரூபாய்
மலேசியா - MYR 356 - 6,374 ரூபாய்
ஓமன் - OMR 29 - 6,315 ரூபாய்
கத்தார் - QAR 274 - 6,289 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 276 - 6,158 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 101 - 6,283 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 269 - 6,135 ரூபாய்
அமெரிக்கா - USD 74 - 6,151 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 270 - 6,141 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 270 - 6,141 ரூபாய்
துபாய் (UAE) - AED 270 - 6,141 ரூபாய்
புஜைரா (UAE) - AED 270 - 6,141 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 270 - 6,141 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 270 - 6,141 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 274 - 6,289 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 29 - 6,315 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 276 - 6,158 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 30 - 6,615 ரூபாய்
குவைத் - KWD 24 - 6,536 ரூபாய்
மலேசியா - MYR 372 - 6,661 ரூபாய்
ஓமன் - OMR 31 - 6,652 ரூபாய்
கத்தார் - QAR 292 - 6,713 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 298 - 6,648 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 111 - 6,930 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 291 - 6,625 ரூபாய்
அமெரிக்கா - USD 78 - 6,486 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 291 - 6,636 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 291 - 6,636 ரூபாய்
துபாய் (UAE) - AED 291 - 6,636 ரூபாய்
புஜைரா (UAE) - AED 291 - 6,636 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 291 - 6,636 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 291 - 6,636 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 292 - 6,713 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 31 - 6,652 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 298 - 6,648 ரூபாய்
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?



Click it and Unblock the Notifications