5 நாள் தொடர் சரிவு.. 7 மாத சரிவை தொட்ட தங்கம் விலை.. இதுதான் சரியான நேரம்..!

பட்ஜெட் அறிவித்த நாள் முதல் முதலீட்டுச் சந்தையில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்பட்டுள்ள காரணத்தால் கடந்த 5 நாட்களாகத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.

தங்கம் விலை அதிகமாக இருந்த காரணத்தால் சாமானிய மக்கள் நீண்ட காலமாக வாங்க முடியாமல் தவித்து வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள விலை சரிவைப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ள சாமானிய மக்கள் தங்க நகைகளை வாங்க நகைக் கடைகளுக்குப் படையெடுத்து வருகின்றனர்.

பட்ஜெட் அதிரடிகள்

பட்ஜெட் அதிரடிகள்

பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2022 நிதியாண்டுக்கான பட்ஜெட் சாமானிய மக்களுக்குப் பெரிய அளவிலான லாபத்தை அளிக்காமல் ஏமாற்றப்பட்டாலும், பங்குச்சந்தைக்கும் வர்த்தகச் சந்தைக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. இதனால் பெருமளவிலான முதலீடுகள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதன் எதிரொலியாகக் கடந்த ஒரு வாரமாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 4000 புள்ளிகளுக்கு அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்த முதலீட்டாளர்களைக் குஷிப்படுத்தியுள்ளது. இந்த அதிரடி வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அதிரடி முதலீடுகள் என்றால் மிகையில்லை.

ரூபாய் மதிப்பு வலிமை

ரூபாய் மதிப்பு வலிமை

இந்தியச் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ள நிலையில் ரூபாய் மதிப்பு சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ளது. இதன் வாயிலாக அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.20 ரூபாயில் இருந்து 72.81 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. ரூபாய் மதிப்பில் ஏற்பட்டு உயர்வு தங்கம் விலையில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் மீதான முதலீடுகள்

தங்கம் மீதான முதலீடுகள்

இதேபோல் உலக நாடுகளின் பங்குச்சந்தையும் சிறப்பான வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், சரிவில் இருந்து முதலீட்டைக் காப்பாற்றத் தங்கத்தின் மீது செய்யப்பட்ட முதலீட்டை அதிகளவில் வெளியேற்றப்பட்டுப் பங்குச்சந்தைக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனால் இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் தங்கம் மீதான முதலீடுகள் குறைந்து தங்கம் விலை குறைய முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

24 கேரட் தங்கத்தின் விலை

24 கேரட் தங்கத்தின் விலை

இந்நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 163 ரூபாய் சரிந்து 46,738 ரூபாயாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் 24 கேரட் தங்கம் 4,673 ரூபாய்க்கு சரிந்துள்ளது. வியாழக்கிழமை வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தூய தங்கம் 46,901 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆபரணத் தங்கத்தின் விலை

ஆபரணத் தங்கத்தின் விலை

இதேபோல் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் தங்கத்தின் விலை 35,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நீண்ட காலத்திற்குப் பின் தங்கம் விலை பெரிய அளவில் குறைந்துள்ள காரணத்தால் மக்கள் தங்க நகைளை வாங்க நகைகளுக்குக் குவிந்து வருகின்றனர். இதேபோல் வெள்ளி விலையிலும் பெரிய அளவிலான மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

இன்றைய வெள்ளி விலை

இன்றைய வெள்ளி விலை

இன்றைய வர்த்தக முடிவில் வெள்ளி விலை கணிசமாக உயர்ந்துள்ளது, குறிப்பாக வாரத்தின் கடைசி நாளான இன்று ஒரு கிலோ வெள்ளியின் விலை 530 ரூபாய் உயர்ந்து 67,483 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது. தங்கம் விலை குறைந்துள்ள போது வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.

சர்வதேச சந்தை விலை

சர்வதேச சந்தை விலை

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் நேற்று 1820 டாலரில் இருந்து 1,786 டாலர் வரையில் சரிந்து தங்க முதலீட்டாளர்களை அதிர்ச்சி அடைய செய்தது. ஆனால் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் சரிவில் இருந்து மீண்டு 1,801 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. ரூபாய் மதிப்பின் ஆதிக்கத்தால் இந்திய ரூபாய் மதிப்பின் படி தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் 1,32,568 ரூபாயில் இருந்து 1,31,411.01 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை

சென்னையில் தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் விலையைத் தெரிந்துகொள்ள இதைக் கிளிக் (https://tamil.goodreturns.in/gold-rates/) செய்யுங்கள். தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் சென்னை மட்டும் அல்லாமல் இந்தியாவின் முக்கியமான அனைத்து பெரும் நகரங்களின் சந்தை விலையைத் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வாசகர்களுக்குச் சரியான தங்கம் விலையை அளிக்க முயற்சி செய்கிறது.

சென்னையில் வெள்ளி விலை

சென்னையில் வெள்ளி விலை

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையையும் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் தனது வாசகர்களுக்கு, இந்தியாவின் முக்கியமான அனைத்து பெரும் நகரங்களின் சந்தை விலையைத் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வாசகர்களுக்குச் சரியான தங்கம் விலையை அளிக்க முயற்சி செய்கிறது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம் https://tamil.goodreturns.in/silver-rates/

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+