தங்கம் விலை 2வது நாளாக 'பெத்த' சரிவு..!! நகைக்கடைக்கு 2வது ரவுண்டு போகும் மக்கள்..!!

தங்கம் விலை ஜூலை மாதம் பெரிய அளவில் குறைந்த போது பலர் இந்த விலை சரிவைப் பயன்படுத்தி தங்கத்தையும், தங்க நகைகளையும் வாங்கினர். ஆனால் ஒரு சிலர் தங்கம் விலை கூடுதலாகச் சரியும் என எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில் ஜூலை மாத இறுதியில் தங்கம் விலை உயர துவங்கியுள்ளது. இப்படி வாய்ப்பை இழந்தவர்களுக்காகவே 2வதாக தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய ரீடைல் சந்தையில் 2வது நாளாகத் தங்கம் விலை பெரிய அளவில் சரிந்துள்ளது.

அமெரிக்க வேலைவாய்ப்பின்மையும், ஜப்பான் மத்திய வங்கியின் வட்டி உயர்வு, மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலையும் தங்கம் விலையில் மந்த நிலையை உருவாக்கியுள்ளது. இதேநேரத்தில் சரிவில் தத்தளித்த பங்குச்சந்தைகள் மீண்டு வர துவங்கியுள்ளது, பத்திர முதலீட்டில் மீண்டும் முதலீடுகள் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

தங்கம் விலை 2வது நாளாக 'பெத்த' சரிவு..!! நகைக்கடைக்கு 2வது ரவுண்டு போகும் மக்கள்..!!

இந்த கலவையான சூழ்நிலையில் இன்று சர்வதேச வர்த்தக சந்தையில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கம் விலை 2391 டாலராக உள்ளது, இதுவே பியூச்சர் சந்தையில் ஒரு அவுன்ஸ் 2432 டாலராக உள்ளது. மேலும் எம்சிஎக்ஸ் சந்தையில் அக்டோபர் மாதம் முடியும் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.02 சதவீதம் சரிந்து 68,952 ரூபாயாக உள்ளது. இதுவே 0.74 சதவீதம் சரிந்து 79,033 ரூபாயாக உள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 700 ரூபாய் குறைந்து 63,300 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 760 ரூபாய் குறைந்து 69,060 ரூபாயாக உள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 560 ரூபாய் குறைந்து 50,640 ரூபாயாக உள்ளது.

மேலும் வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 500 ரூபாயும், கிராமுக்கு 50 பைசாவும் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 87 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் பிளாட்டினம் விலை 10 கிராம் 40 ரூபாய் உயர்ந்து 24,680 ரூபாயாக உள்ளது.

உலகளாவிய பொருளாதார மந்தநிலை கவலைகள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் பதற்றம் ஆகியவை தங்கம் விலையின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தும் என்று முதலீட்டுச் சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.

"எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கத்தின் அக்டோபர் மாதம் ஆர்டரின் விலை இந்த வாரம் 1.35% சரிந்துள்ளது. இருப்பினும், மத்திய கிழக்கு பதற்றம் மற்றும் உலகளாவிய மந்தநிலை கவலைகள் தங்கத்தின் விலை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தி வருகிறது. பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் SPDR கோல்ட் ETF-ல் மார்ச் 8 அன்று 815 டன் என இருந்த நிலையில், ஆகஸ்ட் 6 நிலவரப்படி 848 டன் வரையில் மெதுவாக அதிகரித்துள்ளது இதற்கு ஒரு உதாரணம்" என்று ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சி ஆய்வாளர் ஜிகர் திரிவேதி தெரிவித்தார்.

டாலர் குறியீடு 103.25 ஆக உயர்ந்தது, இதனால் வெளிநாட்டில் தங்கம் வாங்குபவர்களுக்குத் தங்கம் மலிவானதாக இனி இருக்காது. இந்தியாவில் சுங்க வரி குறைக்கப்பட்டதால் அதிகப்படியான விற்பனை உள்நாட்டிலேயே நடைபெறும் என்பதால் நகைக் கடைகளின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் வெளியான அமெரிக்காவின் மோசமான வேலைவாய்ப்பின்மை அறிக்கை, அரசின் கடன் அளவு ஆகியவை வட்டி விகித குறைப்பில் மாறுபட்ட நிலைப்பாட்டை வெளியிடத் துவங்கியுள்ளனர். இதுதான் பத்திர சந்தையில் முதலீடுகள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாக உள்ளது.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,330 ரூபாய், மும்பை - 6,350 ரூபாய், டெல்லி - 6,365 ரூபாய், கொல்கத்தா - 6,350 ரூபாய், பெங்களூர் - 6,350 ரூபாய், ஹைதராபாத் - 6,350 ரூபாய், கேரளா - 6,350 ரூபாய், புனே - 6,350 ரூபாய், பரோடா - 6,355 ரூபாய், அகமதாபாத் - 6,355 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,365 ரூபாய், லக்னோ - 6,365 ரூபாய், கோயம்புத்தூர் - 6,330 ரூபாய், மதுரை - 6,330 ரூபாய்.

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,906 ரூபாய், மும்பை - 6,927 ரூபாய், டெல்லி - 6,942 ரூபாய், கொல்கத்தா - 6,927 ரூபாய், பெங்களூர் - 6,927 ரூபாய், ஹைதராபாத் - 6,927 ரூபாய், கேரளா - 6,927 ரூபாய், புனே - 6,927 ரூபாய், பரோடா - 6,932 ரூபாய், அகமதாபாத் - 6,932 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,942 ரூபாய், லக்னோ - 6,942 ரூபாய், கோயம்புத்தூர் - 6,906 ரூபாய், மதுரை - 6,906 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 50640 ரூபாய், மும்பை - 50800 ரூபாய், டெல்லி - 50920 ரூபாய், கொல்கத்தா - 50800 ரூபாய், பெங்களூர் - 50800 ரூபாய், ஹைதராபாத் - 50800 ரூபாய், கேரளா - 50800 ரூபாய், புனே - 50800 ரூபாய், பரோடா - 50840 ரூபாய், அகமதாபாத் - 50840 ரூபாய், ஜெய்ப்பூர் - 50920 ரூபாய், லக்னோ - 50920 ரூபாய், கோயம்புத்தூர் - 50640 ரூபாய், மதுரை - 50640 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 24,680 ரூபாய், மும்பை - 24,680 ரூபாய், டெல்லி - 24,680 ரூபாய், கொல்கத்தா - 24,680 ரூபாய், பெங்களூர் - 24,680 ரூபாய், ஹைதராபாத் - 24,680 ரூபாய், கேரளா - 24,680 ரூபாய், அகமதாபாத் - 24,680 ரூபாய், ஜெய்ப்பூர் - 24,680 ரூபாய், லக்னோ - 24,680 ரூபாய், கோயம்புத்தூர் - 24,680 ரூபாய், மதுரை - 24,680 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 87,000 ரூபாய், மும்பை - 82,000 ரூபாய், டெல்லி - 82,000 ரூபாய், கொல்கத்தா - 82,000 ரூபாய், பெங்களூர் - 81,000 ரூபாய், ஹைதராபாத் - 87,000 ரூபாய், கேரளா - 87,000 ரூபாய், புனே - 82,000 ரூபாய், பரோடா - 82,000 ரூபாய், அகமதாபாத் - 82,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 82,000 ரூபாய், லக்னோ - 82,000 ரூபாய், கோயம்புத்தூர் - 87,000 ரூபாய், மதுரை - 87,000 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 28 - 6,191 ரூபாய்
குவைத் - KWD 22 - 5,988 ரூபாய்
மலேசியா - MYR 342 - 6,393 ரூபாய்
ஓமன் - OMR 29 - 6,303 ரூபாய்
கத்தார் - QAR 273 - 6,286 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 275 - 6,150 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 99 - 6,244 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 268 - 6,132 ரூபாய்
அமெரிக்கா - USD 72 - 6,087 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 268 - 6,132 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 268 - 6,132 ரூபாய்
துபாய் (UAE) - AED 268 - 6,132 ரூபாய்
புஜைரா (UAE) - AED 268 - 6,132 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 268 - 6,132 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 268 - 6,132 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 273 - 6,286 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 29 - 6,303 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 275 - 6,150 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30 - 6,592 ரூபாய்
குவைத் - KWD 24 - 6,534 ரூபாய்
மலேசியா - MYR 353 - 6,599 ரூபாய்
ஓமன் - OMR 30 - 6,641 ரூபாய்
கத்தார் - QAR 291 - 6,700 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 296 - 6,620 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 108 - 6,864 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 290 - 6,623 ரூபாய்
அமெரிக்கா - USD 77 - 6,465 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 290 - 6,623 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 290 - 6,623 ரூபாய்
துபாய் (UAE) - AED 290 - 6,623 ரூபாய்
புஜைரா (UAE) - AED 290 - 6,623 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 290 - 6,623 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 290 - 6,623 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 291 - 6,700 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 30 - 6,641 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 296 - 6,620 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+