பொதுத்தேர்தல் முடிவுகள் இந்திய முதலீட்டுச் சந்தையில் பெரும் தடுமாற்றத்தைக் கொடுத்துள்ளது, ஜூன் 4 தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் இந்தியப் பங்குச்சந்தை வரலாறு காணாத சரிவை எதிர்கொண்டு வந்த நிலையில், தங்கம் விலை தடாலடியாக உயர்ந்தது.
ஆனால் பிஜேபி கூட்டணி 3வது முறையாக ஆட்சியை பிடிப்பது உறுதியாகியிருக்கும் வேளையில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது, இதேபோல் தங்கம் விலையும் குறைந்துள்ளது.

ஆனால் தங்கம் விலை குறைவுக்கு இந்திய முதலீட்டுச் சந்தை மட்டும் காரணமில்லை, சர்வதேச அளவில் நிலவிய மாற்றங்களும் முக்கிய காரணம். அமெரிக்காவில் பதிவாகியுள்ள மந்தமான பொருளாதார தரவுகள், டாலர் மதிப்பில் கணிசமான உயர்வு, சந்தை கணிப்பைத் தாண்டிய கச்சா எண்ணெய் இருப்பு ஆகியவை வட்டி விகித குறைப்புக்கு வழிவகுத்துள்ளது.
அமெரிக்காவின் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் டாலர் மதிப்பில் ஏற்பட்ட உயர்வு தங்கம் விலையில் முதலீட்டைக் குறைந்து பங்குச்சந்தையில் முதலீட்டை அதிகரித்துள்ளது. மேலும் அடுத்த சில வாரங்களுக்குத் தங்கம் விலையில் பெரும் தடுமாற்றம் இருக்கும், இதனால் விலை சரியும் போது தங்கத்தை வாங்குவது தங்கம் முதலீட்டாளர்களுக்கு நல்லது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2327 டாலருக்கு செவ்வாய்க்கிழமை வர்த்தகமான நிலையில், இன்று 2332 டாலருக்கு மட்டுமே வர்த்தகமாகி வருகிறது. இதேவேளையில் எம்சிஎக்ஸ் சந்தையில் காலையில் உயர்வுடன் துவங்கிய தங்கம் மற்றும் வெள்ளி 0.03 சதவீதம், 0.18 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 200 ரூபாய் குறைந்து 67,250 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 220 ரூபாய் குறைந்து 73,360 ரூபாயாக குறைந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 160 ரூபாய் குறைந்து 53,800 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோ 23000 ரூபாய் குறைந்து 96200 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 660 ரூபாய் குறைந்து 26,480 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,725 ரூபாய், மும்பை - 6,660 ரூபாய், டெல்லி - 6,675 ரூபாய், கொல்கத்தா - 6,660 ரூபாய், பெங்களூர் - 6,660 ரூபாய், ஹைதராபாத் - 6,660 ரூபாய், கேரளா - 6,660 ரூபாய், புனே - 6,660 ரூபாய், பரோடா - 6,665 ரூபாய், அகமதாபாத் - 6,665 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,675 ரூபாய், லக்னோ - 6,675 ரூபாய், கோயம்புத்தூர் - 6,725 ரூபாய், மதுரை - 6,725 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,336 ரூபாய், மும்பை - 7,265 ரூபாய், டெல்லி - 7,280 ரூபாய், கொல்கத்தா - 7,265 ரூபாய், பெங்களூர் - 7,265 ரூபாய், ஹைதராபாத் - 7,265 ரூபாய், கேரளா - 7,265 ரூபாய், புனே - 7,265 ரூபாய், பரோடா - 7,270 ரூபாய், அகமதாபாத் - 7,270 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,280 ரூபாய், லக்னோ - 7,280 ரூபாய், கோயம்புத்தூர் - 7,336 ரூபாய், மதுரை - 7,336 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 53800 ரூபாய், மும்பை - 53280 ரூபாய், டெல்லி - 53400 ரூபாய், கொல்கத்தா - 53280 ரூபாய், பெங்களூர் - 53280 ரூபாய், ஹைதராபாத் - 53280 ரூபாய், கேரளா - 53280 ரூபாய், புனே - 53280 ரூபாய், பரோடா - 53320 ரூபாய், அகமதாபாத் - 53320 ரூபாய், ஜெய்ப்பூர் - 53400 ரூபாய், லக்னோ - 53400 ரூபாய், கோயம்புத்தூர் - 53800 ரூபாய், மதுரை - 53800 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,480 ரூபாய், மும்பை - 26,480 ரூபாய், டெல்லி - 26,480 ரூபாய், கொல்கத்தா - 26,480 ரூபாய், பெங்களூர் - 26,480 ரூபாய், ஹைதராபாத் - 26,480 ரூபாய், கேரளா - 26,480 ரூபாய், அகமதாபாத் - 26,480 ரூபாய், ஜெய்ப்பூர் - 26,480 ரூபாய், லக்னோ - 26,480 ரூபாய், கோயம்புத்தூர் - 26,480 ரூபாய், மதுரை - 26,480 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 96200 ரூபாய், மும்பை - 91700 ரூபாய், டெல்லி - 91700 ரூபாய், கொல்கத்தா - 91700 ரூபாய், பெங்களூர் - 91900 ரூபாய், ஹைதராபாத் - 96200 ரூபாய், கேரளா - 96200 ரூபாய், புனே - 91700 ரூபாய், பரோடா - 91700 ரூபாய், அகமதாபாத் - 91700 ரூபாய், ஜெய்ப்பூர் - 91700 ரூபாய், லக்னோ - 91700 ரூபாய், கோயம்புத்தூர் - 96200 ரூபாய், மதுரை - 96200 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 27.10 - 5,995 ரூபாய்,
குவைத் - KWD 22.20 - 6,042 ரூபாய்,
மலேசியா - MYR 346 - 6,143 ரூபாய்,
ஓமன் - OMR 28.30 - 6,131 ரூபாய்,
கத்தார் - QAR 266.50 - 6,096 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 268 - 5,959 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 98.30 - 6,085 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 262.25 - 5,955 ரூபாய்,
அமெரிக்கா - USD 71 - 5,921 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 262.25 - 5,955 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 262.25 - 5,955 ரூபாய்,
துபாய் (UAE) - AED 262.25 - 5,955 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 262.25 - 5,955 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 262.25 - 5,955 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 262.25 - 5,955 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 266.50 - 6,096 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 28.30 - 6,131 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 268 - 5,959 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 28.90 - 6,393 ரூபாய்,
குவைத் - KWD 23.60 - 6,423 ரூபாய்,
மலேசியா - MYR 363 - 6,445 ரூபாய்,
ஓமன் - OMR 29.80 - 6,456 ரூபாய்,
கத்தார் - QAR 284 - 6,496 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 289 - 6,426 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 108.60 - 6,723 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 283.25 - 6,432 ரூபாய்,
அமெரிக்கா - USD 75 - 6,255 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 283.25 - 6,432 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 283.25 - 6,432 ரூபாய்,
துபாய் (UAE) - AED 283.25 - 6,432 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 283.25 - 6,432 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 283.25 - 6,432 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 283.25 - 6,432 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 284 - 6,496 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 29.80 - 6,456 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 289 - 6,426 ரூபாய்.
More From GoodReturns

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?



Click it and Unblock the Notifications