படு பாதாளத்தில் தங்கம் விலை? மேற்கொண்டு பவுன் விலை சரியுமா?

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக செப்டம்பர் 2020 தொடக்கத்தில் இருந்து தங்கம் விலையில் காணப்படும் தடுமாற்றம் மிக அதிகமாக இருக்கிறது.

சென்னை ஆபரணத் தங்கம் விலை தொடங்கி, சர்வதேச தங்கம், எம் சி எக்ஸ் தங்கம் என எல்லாவற்றின் விலையும், கடந்த ஆகஸ்ட் 2020-ல், வரலாறு காணாத பெரு உச்சத்தைத் தொட்டது.

ஆனால் இப்போது சுமாராக 9.7 - 11.8 சதவிகிதம் வரை வீழ்ச்சி கண்டு இருக்கிறது. இதுவரை வீழ்ச்சி கண்டது இருக்கட்டும். மேற்கொண்டு தங்கம் விலை வீழ்ச்சி காணுமா? எதிர்காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பதைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம். முதலில் தங்கம் விலை நிலவரத்தில் இருந்து தொடங்குவோம்.

11.8 % வீழ்ச்சியில் 24 கே 10 கி சென்னை ஆபரணத் தங்கம்

11.8 % வீழ்ச்சியில் 24 கே 10 கி சென்னை ஆபரணத் தங்கம்

பெசன் நகர் கடற்கரை கொண்ட சென்னை பெரு நகரத்தில், நேற்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 52,140 ரூபாய்க்கு விற்பனை ஆனது. 24 கேரட் 10 கிரம் தங்கம் விலையை, ஆகஸ்ட் உச்ச விலை உடன் ஒப்பிட்டால், சுமாராக 11.8 % வீழ்ச்சி கண்டு இருக்கிறது.

ரூ.6,400 வீழ்ச்சியில் 22 கே 10 கி சென்னை ஆபரணத் தங்கம்

ரூ.6,400 வீழ்ச்சியில் 22 கே 10 கி சென்னை ஆபரணத் தங்கம்

சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 47,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆகஸ்ட் 2020 உச்ச விலையான 54,200 ரூபாயில் இருந்து, நேற்றைய விலையான 47,800 ரூபாயை கணக்கிட்டால் 6,400 ரூபாய் விலை வீழ்ச்சி கண்டு இருக்கிறது.

MCX Gold price - 11.6% வீழ்ச்சி

MCX Gold price - 11.6% வீழ்ச்சி

அக்டோபர் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, கடந்த வெள்ளிக்கிழமை 238 ரூபாய் (0.48 %) சரிந்து, 49,666 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆகஸ்ட் 2020 உச்சத்தில் இருந்து கணக்கிட்டால் கிட்டத்தட்ட 6,500 ரூபாய் (11.6 %) விலை சரிந்து வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

பாதாளத்தில் MCX வெள்ளி விலை

பாதாளத்தில் MCX வெள்ளி விலை

கடந்த 25 செப்டம்பர் 2020, வெள்ளிக்கிழமை அன்று, டிசம்பர் 2020 மாதத்துக்கான 1 கிலோ வெள்ளி ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, முந்தைய குளோசிங் விலையான 59,629 ரூபாயில் இருந்து 611 ரூபாய் (1.02 %) சரிந்து, 59,018 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆகஸ்ட் உச்சத்தில் இருந்து சுமாராக 25 % விலை வீழ்ச்சி கண்டு இருக்கிறது எம் சி எக்ஸ் வெள்ளி.

தடுமாறும் சர்வதேச தங்கம் விலை

தடுமாறும் சர்வதேச தங்கம் விலை

ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, கடந்த 25 செப்டம்பர் 2020 அன்று 6.4 டாலர் (0.35 %) விலை சரிந்து, 1,861 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆகஸ்ட் 2020 மாத உச்ச விலையில் இருந்து கணக்கிட்டால் சுமாராக 9.7 % விலை வீழ்ச்சி அடைந்து இருக்கிறது சர்வதேச தங்கம் விலை.

ஏன் இந்த விலை சரிவு?

ஏன் இந்த விலை சரிவு?

டாலர் கரன்சி மெல்ல வலுவடைந்து வருகிறது. 25 செப் 2020 அன்று, கடந்த ஒரு மாத காலத்தில் இல்லாத அளவுக்கு, 94.64 என்கிற புதிய உச்சப் புள்ளியில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது டாலர் இண்டெக்ஸ் (DXY:CUR). அமெரிக்க பொருளாதாரத்தில் வேலை இல்லா திண்டாட்டம் கணிசமாக குறைந்து இருக்கிறது. உலக பங்குச் சந்தைகள் அவ்வப் போது ஆட்டம் கண்டாலும், மெல்ல பழைய நிலைக்குத் திரும்பிக் கொண்டு இருக்கிறது. இவை எல்லாம் தான், தங்கம் விலையை அதிகரிக்க விடாமல் வைத்திருக்கின்றன. தங்கம் விலை சரிவு மேலும் தொடருமா?

Credit suisse சொல்வது என்ன?

Credit suisse சொல்வது என்ன?

தங்கம் விலை, எதிர்பார்த்த காலத்தை விட அதிக காலம் தொடர்ந்து இறக்கம் கண்டு வர்த்தகமானால், 1,765 டாலர் வரை சரியலாம் என்கிறது க்ரெடிட் சூசி (Credit Suisse). சொல்லப் போனால் 1,726 டாலர் வரை கூட சரியலாம் எனக் கணித்து இருக்கிறது க்ரெடிட் சூசி.

Standard Chartered சொல்வது என்ன

Standard Chartered சொல்வது என்ன

தங்கம் விலை, அடுத்த வாரத்தில் 1,840 டாலரை வலுவான சப்போர்ட்டாக எடுத்து வர்த்தகமாக வேண்டும். அப்படி இல்லை என்றால், இந்த டவுன் டிரெண்ட் முடிவதற்குள், தங்கம் விலை 1,800 டாலரை உடைத்துக் கொண்டு வீழ்ச்சி காணும் என்கிறது. இந்த சரிவு 1,760 டாலர் வரை போகலாம் எனக் கணித்து இருக்கிறது.

தங்கம் விலை சரியலாம்

தங்கம் விலை சரியலாம்

க்ரெடிட் சூசி & ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் கணித்து இருப்பது போலவே, கடந்த வாரம் முழுக்க, தங்கம் விலை இறக்கத்திலேயே தான் வர்த்தகமானது. எனவே, மேலும் விலை சரிய நிறைய வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. தங்கம் விலை சரியும் போது எல்லாம், அதை வாங்குவதற்கான நல்ல வாய்ப்பாக பார்க்கச் சொல்லி பல அனலிஸ்ட்களும், தரகு நிறுவனங்களும் சொல்லி இருப்பது இங்கு நினைவு கூறத்தக்கது.

கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் க்ரெடிட் சூசி

கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் க்ரெடிட் சூசி

ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2,300 டாலர் வரைத் தொடலாம் எனக் கணித்து இருக்கிறது உலகின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான கோல்ட் மேன் சாக்ஸ். தற்போது தங்கத்தின் விலை 1,726 டாலர் வரை சரியலாம் எனக் கணித்து இருக்கும், இதே க்ரெடிட் சூசி தான், எதிர்காலத்தில், ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2,300 டாலர் வரை அதிகரிக்கலாம் எனச் சொல்லி இருக்கிறது.

கமாடிட்டி முதலீட்டின் பிதாமகர் ஜிம் ராஜர்ஸ்

கமாடிட்டி முதலீட்டின் பிதாமகர் ஜிம் ராஜர்ஸ்

உலகின் முன்னணி கமாடிட்டி முதலீட்டாளர்களில் ஒருவரான ஜிம் ராஜர்ஸ், வருங்காலத்தில் தங்கம் விலை கூரையைப் பிய்த்துக் கொண்டு உயரும் எனக் கணித்து இருக்கிறார். வெறுமனே வாயால் சொல்லிக் கொண்டு இருக்காமல், கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார். ஆக தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள், நிதி ஆலோசகரிடம், கலந்தாலோசித்துவிட்டு, முதலீடுகளைத் தொடங்குங்கள். நல்ல வாய்ப்ப நழுவ விட்டுவிடாதீர்கள். பிறகு வருத்தப்பட்டு பயன் இல்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+