சர்வதேச சந்தையில் அமெரிக்க பெடரல் வங்கியின் பென்ச்மார்க் வட்டி விகிதம் ஜூன் மாதம் குறைய வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகிவிட்ட வேளையில் செப்டம்பர் மாதம் கூட்டத்தில் குறைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது என சந்தை நிலவரம் கூறுகிறது.
இந்த நிலையில் சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பாக ப்ளூ சிப் பங்குகளிலும், பத்திர சந்தையிலும் அதிகளவில் முதலீடு செய்ய துவங்கியுள்ளதால் தங்கம் மீதான முதலீடுகள் குறைந்து வருகிறது. இதன் எதிரொலியாகவே இந்தியாவிலும், சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ளது.

பொதுவாக நிலையற்ற பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலையின் போது முதலீட்டாளர்கள் தங்கம் மீது முதலீடு செய்வது தான் இயல்பு, ஆனால் தற்போது தங்கம் விலை வரலாற்று உச்ச அளவில் இருக்கும் போது அடுத்தடுத்து பல நாடுகளில் பொதுத் தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் நடக்க வாய்ப்பு உள்ள காலகட்டத்தில் தங்கத்தில் கூடுதலாக முதலீடு செய்வது ரிஸ்க் என்பதாலேயே இந்த மாறுபட்ட முதலீட்டு சென்டிமென்ட் நிலவுகிறது.
இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை நேற்றைய வர்த்தகத்தில் பதிவான ஒரு அவுன்ஸ் 2318 டாலர் விலை நிலவரம் 2308 டாலராக சரிந்து 2312 டாலர் அளவில் வர்த்தகமாகி வருகிறது. இந்த உயர்வும் ஆசியச் சந்தை வர்த்தகத்தில் பதிவான உயர்வு மட்டுமே.
நாளை அட்சய திருதியை பண்டிகையின் காரணமாகத் தங்கம் மற்றும் வெள்ளிக்கான டிமாண்ட் அதிகமாக இருக்க வாய்ப்புகள் உள்ளது. தங்கம் விலை அதிகமாக இருந்தாலும், அடுத்த ஒரு வருடத்தில் 10 கிராம் தங்கம் 1 லட்சம் வரையில் உயரும் என சந்தை நிலவரம் கூறுவதால் சாமானிய மக்களும் தங்கம் வாங்க வாய்ப்புகள் உள்ளது.
எம்சிஎக்ஸ் சந்தையில் மிக சொற்ப அளவிலேயே உயர்ந்த தங்கம் விலை, இன்று ரீடைல் சந்தையில் பெரிய அளவில் சரிந்துள்ளது மட்டும் அல்லாமல் புதன்கிழமை சரிவை காட்டிலும் கூடுதலாக சரிந்துள்ளது. இதனால் அட்சய திருதியை பண்டிகை தினமான நாளையும் தங்கம் விலை குறைய வாய்ப்புகள் உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 150 ரூபாய் குறைந்து 66,150 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 170 ரூபாய் குறைந்து 72,160 ரூபாயாக உள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 120 ரூபாய் குறைந்து 52,920 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 300 ரூபாய் உயர்ந்து 88,700 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 120 ரூபாய் உயர்ந்து 26,260 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 66,150 ரூபாய், மும்பை - 66,150 ரூபாய், டெல்லி - 66,300 ரூபாய், கொல்கத்தா - 66,150 ரூபாய், பெங்களூர் - 66,150 ரூபாய், ஹைதராபாத் - 66,150 ரூபாய், கேரளா - 66,150 ரூபாய், புனே - 66,150 ரூபாய், பரோடா - 66,200 ரூபாய், அகமதாபாத் - 66,200 ரூபாய், ஜெய்ப்பூர் - 66,300 ரூபாய், லக்னோ - 66,300 ரூபாய், கோயம்புத்தூர் - 66,150 ரூபாய், மதுரை - 66,150 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 72,160 ரூபாய், மும்பை - 72,160 ரூபாய், டெல்லி - 72,310 ரூபாய், கொல்கத்தா - 72,160 ரூபாய், பெங்களூர் - 72,160 ரூபாய், ஹைதராபாத் - 72,160 ரூபாய், கேரளா - 72,160 ரூபாய், புனே - 72,160 ரூபாய், பரோடா - 72,210 ரூபாய், அகமதாபாத் - 72,210 ரூபாய், ஜெய்ப்பூர் - 72,310 ரூபாய், லக்னோ - 72,310 ரூபாய், கோயம்புத்தூர் - 72,160 ரூபாய், மதுரை - 72,160 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 52920 ரூபாய், மும்பை - 52920 ரூபாய், டெல்லி - 53040 ரூபாய், கொல்கத்தா - 52920 ரூபாய், பெங்களூர் - 52920 ரூபாய், ஹைதராபாத் - 52920 ரூபாய், கேரளா - 52920 ரூபாய், புனே - 52920 ரூபாய், பரோடா - 52960 ரூபாய், அகமதாபாத் - 52960 ரூபாய், ஜெய்ப்பூர் - 53040 ரூபாய், லக்னோ - 53040 ரூபாய், கோயம்புத்தூர் - 52920 ரூபாய், மதுரை - 52920 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,260 ரூபாய், மும்பை - 26,260 ரூபாய், டெல்லி - 26,260 ரூபாய், கொல்கத்தா - 26,260 ரூபாய், பெங்களூர் - 26,260 ரூபாய், ஹைதராபாத் - 26,260 ரூபாய், கேரளா - 26,260 ரூபாய், அகமதாபாத் - 26,260 ரூபாய், ஜெய்ப்பூர் - 26,260 ரூபாய், லக்னோ - 26,260 ரூபாய், கோயம்புத்தூர் - 26,260 ரூபாய், மதுரை - 26,260 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 88700 ரூபாய், மும்பை - 85200 ரூபாய், டெல்லி - 85200 ரூபாய், கொல்கத்தா - 85200 ரூபாய், பெங்களூர் - 85200 ரூபாய், ஹைதராபாத் - 88700 ரூபாய், கேரளா - 88700 ரூபாய், புனே - 85200 ரூபாய், பரோடா - 85200 ரூபாய், அகமதாபாத் - 85200 ரூபாய், ஜெய்ப்பூர் - 85200 ரூபாய், லக்னோ - 85200 ரூபாய், கோயம்புத்தூர் - 88700 ரூபாய், மதுரை - 88700 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 270 - 59,783.94 ரூபாய்,
குவைத் - KWD 220.50 - 59,859.58 ரூபாய்,
மலேசியா - MYR 3,360 - 59,156.60 ரூபாய்,
ஓமன் - OMR 280 - 60,737.88 ரூபாய்,
கத்தார் - QAR 2,650 - 60,690.04 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,660 - 59,223.55 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 976 - 60,107.85 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,595 - 59,083.32 ரூபாய்,
அமெரிக்கா - USD 705 - 58,858.98 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 2,595 - 59,083.32 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 2,595 - 59,083.32 ரூபாய்,
துபாய் (UAE) - AED 2,595 - 59,083.32 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 2,595 - 59,083.32 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 2,595 - 59,083.32 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 2,595 - 59,083.32 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 2,650 - 60,690.04 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 280 - 60,737.88 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 2,660 - 59,223.55 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 287 - 63,548.11 ரூபாய்,
குவைத் - KWD 233.50 - 63,388.71 ரூபாய்,
மலேசியா - MYR 3,630 - 63,910.25 ரூபாய்,
ஓமன் - OMR 294.50 - 63,883.23 ரூபாய்,
கத்தார் - QAR 2,825 - 64,697.87 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,860 - 63,676.44 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 1,083 - 66,697.54 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,802.50 - 63,807.70 ரூபாய்,
அமெரிக்கா - USD 745 - 62,198.49 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 2,802.50 - 63,807.70 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 2,802.50 - 63,807.70 ரூபாய்,
துபாய் (UAE) - AED 2,802.50 - 63,807.70 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 2,802.50 - 63,807.70 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 2,802.50 - 63,807.70 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 2,802.50 - 63,807.70 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 2,825 - 64,697.87 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 294.50 - 63,883.23 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 2,860 - 63,676.44 ரூபாய்.
More From GoodReturns

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?



Click it and Unblock the Notifications