தங்கம் விலை கடந்த 2 வாரமாக அதிகப்படியான ஏற்ற இறக்கங்களை எதிர்கொண்டு வரும் வேளையில், இந்த வாரம் தொடர்ந்து 3 நாட்களாகத் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து மக்களைப் பயமுறுத்தியது. ஆனால் டாலர் மதிப்பில் ஏற்பட்ட தடுமாற்றமும், டிரம்ப் செய்த லீலைகள் வாயிலாகத் தங்கம் விலை மீண்டும் குறையத் துவங்கியுள்ளது.
தங்கம் விலை வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 550 ரூபாய் குறைந்த நிலையின், சனிக்கிழமை வர்த்தகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 900 ரூபாய்க்கு அதிகமாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் இந்த வாரம் 3 நாள் பதிவான 1700 ரூபாய் உயர்வைக் கிட்டத்தட்ட சமன் செய்துள்ளது.

டாலர் மதிப்பு அதிகமாக இருப்பதாலும், அமெரிக்க அரசு பத்திர முதலீட்டுச் சந்தையில் அதிகப்படியான லாபம் கிடைக்கும் காரணத்தாலும், பங்குச்சந்தையில் சீனா, அமெரிக்க சந்தையில் அதிகப்படியான வாய்ப்புகள் உருவாகியிருப்பதாலும் தங்கத்திற்கு டிமாண்ட் குறைந்து தங்கம் விலை டிசம்பர் மாதம் முழுக்க மந்த நிலையிலேயே உள்ளது.
இப்போது தங்கம் வாங்கலாமா என்றால்..? கட்டாயம் வாங்கலாம், விலை குறையும் போது எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம். ஆனால் தற்போது வாங்க கூடிய தங்கத்திற்கு லாபம் பார்க்க வேண்டுமானால் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கும். இன்று தங்கம் வாங்கிவிட்டு 1 -2 வருடத்திற்குப் பின்பு பணமாக்கத் திட்டமிட்டால் இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். ஆனால் குறுகிய கால அடிப்படையில் லாபம் பார்க்கத் தங்கம் வாங்குவது தவறான முடிவாக இருக்கும்.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 900 ரூபாய் குறைந்து 71,400 ரூபாயாக உள்ளது. இதேபோல் 24 கேரட் தங்கம் விலை 980 ரூபாய் குறைந்து 77,890 ரூபாயாக உள்ளது. மேலும் ஒரு சவரன் தங்கம் விலை 720 ரூபாய் குறைந்து 57,120 ரூபாயாக உள்ளது.
இன்று ஒரு கிலோ வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 1 ரூபாயும், கிலோவுக்கு 1000 ரூபாயும் குறைந்து 1 லட்சம் ரூபாய் அளவில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் 10 கிராம் பிளாட்டினம் விலை 250 ரூபாய் குறைந்து 25,190 ரூபாயாக உள்ளது. மேலும் நாட்டின் முக்கியமான நகரங்களில் இன்றைய தங்கம், வெள்ளி, பிளாட்டினம் விலையை இப்போது பார்ப்போம்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 57120 ரூபாய், மும்பை - 57120 ரூபாய், டெல்லி - 57240 ரூபாய், கொல்கத்தா - 57120 ரூபாய், பெங்களூர் - 57120 ரூபாய், ஹைதராபாத் - 57120 ரூபாய், கேரளா - 57120 ரூபாய், புனே - 57120 ரூபாய், பரோடா - 57160 ரூபாய், அகமதாபாத் - 57160 ரூபாய், ஜெய்ப்பூர் - 57240 ரூபாய், லக்னோ - 57240 ரூபாய், கோயம்புத்தூர் - 57120 ரூபாய், மதுரை - 57120 ரூபாய்.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,140 ரூபாய், மும்பை - 7,140 ரூபாய், டெல்லி - 7,155 ரூபாய், கொல்கத்தா - 7,140 ரூபாய், பெங்களூர் - 7,140 ரூபாய், ஹைதராபாத் - 7,140 ரூபாய், கேரளா - 7,140 ரூபாய், புனே - 7,140 ரூபாய், பரோடா - 7,145 ரூபாய், அகமதாபாத் - 7,145 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,155 ரூபாய், லக்னோ - 7,155 ரூபாய், கோயம்புத்தூர் - 7,140 ரூபாய், மதுரை - 7,140 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,789 ரூபாய், மும்பை - 7,789 ரூபாய், டெல்லி - 7,804 ரூபாய், கொல்கத்தா - 7,789 ரூபாய், பெங்களூர் - 7,789 ரூபாய், ஹைதராபாத் - 7,789 ரூபாய், கேரளா - 7,789 ரூபாய், புனே - 7,789 ரூபாய், பரோடா - 7,794 ரூபாய், அகமதாபாத் - 7,794 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,804 ரூபாய், லக்னோ - 7,804 ரூபாய், கோயம்புத்தூர் - 7,789 ரூபாய், மதுரை - 7,789 ரூபாய்.
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 5,895 ரூபாய், மும்பை - 5,842 ரூபாய், டெல்லி - 5,854 ரூபாய், கொல்கத்தா - 5,842 ரூபாய், பெங்களூர் - 5,842 ரூபாய், ஹைதராபாத் - 5,842 ரூபாய், கேரளா - 5,842 ரூபாய், புனே - 5,842 ரூபாய், பரோடா - 5,846 ரூபாய், அகமதாபாத் - 5,846 ரூபாய், ஜெய்ப்பூர் - 5,854 ரூபாய், லக்னோ - 5,854 ரூபாய், கோயம்புத்தூர் - 5,895 ரூபாய், மதுரை - 5,895 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,190 ரூபாய், மும்பை - 25,190 ரூபாய், டெல்லி - 25,190 ரூபாய், கொல்கத்தா - 25,190 ரூபாய், பெங்களூர் - 25,190 ரூபாய், ஹைதராபாத் - 25,190 ரூபாய், கேரளா - 25,190 ரூபாய், புனே - 25,190 ரூபாய், வதோதரா - 25,190 ரூபாய், அகமதாபாத் - 25,190 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,00,000 ரூபாய், மும்பை - 92,500 ரூபாய், டெல்லி - 92,500 ரூபாய், கொல்கத்தா - 92,500 ரூபாய், பெங்களூர் - 92,500 ரூபாய், ஹைதராபாத் - 1,00,000 ரூபாய், கேரளா - 1,00,000 ரூபாய், புனே - 92,500 ரூபாய், பரோடா - 92,500 ரூபாய், அகமதாபாத் - 92,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 92,500 ரூபாய், லக்னோ - 92,500 ரூபாய், கோயம்புத்தூர் - 1,00,000 ரூபாய், மதுரை - 1,00,000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30 - 6,746 ரூபாய்
குவைத் - KWD 24.35 - 6,705 ரூபாய்
மலேசியா - MYR 363 - 6,918 ரூபாய்
ஓமன் - OMR 31.85 - 7,016 ரூபாய்
கத்தார் - QAR 302 - 7,025 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 304 - 6,863 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 108.60 - 6,827 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 299 - 6,903 ரூபாய்
அமெரிக்கா - USD 78 - 6,615 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 299 - 6,903 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 299 - 6,903 ரூபாய்
துபாய் (UAE) - AED 299 - 6,903 ரூபாய்
புஜைரா (UAE) - AED 299 - 6,903 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 299 - 6,903 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 299 - 6,903 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 302 - 7,025 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 31.85 - 7,016 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 304 - 6,863 ரூபாய்
இங்கிலாந்து - GBP 61.96 - 6,631 ரூபாய்
கனடா - CAD 118.25 - 7,045 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 124.80 - 6,734 ரூபாய்
நேபாளம் - NPR 12,162.76 - 7,594 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 31.90 - 7,173 ரூபாய்
குவைத் - KWD 26.55 - 7,311 ரூபாய்
மலேசியா - MYR 378 - 7,204 ரூபாய்
ஓமன் - OMR 33.90 - 7,467 ரூபாய்
கத்தார் - QAR 322.50 - 7,502 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 328 - 7,405 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 120.50 - 7,575 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 323 - 7,458 ரூபாய்
அமெரிக்கா - USD 83 - 7,039 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 323 - 7,458 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 323 - 7,458 ரூபாய்
துபாய் (UAE) - AED 323 - 7,458 ரூபாய்
புஜைரா (UAE) - AED 323 - 7,458 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 323 - 7,458 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 323 - 7,458 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 322.50 - 7,502 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 33.90 - 7,467 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 328 - 7,405 ரூபாய்
இங்கிலாந்து - GBP 67.59 - 7,234 ரூபாய்
கனடா - CAD 124.75 - 7,432 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 136.10 - 7,343 ரூபாய்
நேபாளம் - NPR 13,220.39 - 8,254 ரூபாய்
அமெரிக்க சந்தையில் விடுமுறை காலம் நெருங்கி வரும் வேளையில் ஒவ்வொரு நாள் வர்த்தகமும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த வகையில் அமெரிக்காவில் வெள்ளிக்கிழமையன்று தொடங்கிய சில மணி நேரங்களில், தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 2660 டாலர் என்ற குறைந்த விலையிலிருந்து சிறிய அளவு மீண்டது.
இதேவேளையில் இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருந்த அமெரிக்க டாலர் (USD) தற்போது குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்து வருகிறது. இது தங்கம் விலை உயர்வதற்கான சிறிய வாய்ப்பை கொடுத்துள்ளது. அதே நேரத்தில், அமெரிக்க அரசு பத்திரம் மீதான முதலீடுகளுக்கு லாபம் அதிகரித்து வருவது மூலம் தங்கத்தை வாங்குபவர்கள் எண்ணிக்கையை குறைக்கும், இதனால் சந்தையில் டிமாண்ட் குறைந்து விலை உயரும் வாய்ப்பை குறைக்கும் நிலைப்பாடும் உள்ளது.
இந்த வார தொடக்கத்தில் வெளியிடப்பட்ட அமெரிக்க பொருளாதாரத் தரவுகளில், அந்நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருப்பதையும், பணவீக்கம் அதிகரித்து வருவதையும் காட்டுகின்றன. டொனால்ட் ட்ரம்பின் இறக்குமதிக்கான அதிக வரிகள் மற்றும் குடியேற்றக் கொள்கை ஆகியவை பணவீக்கத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அடுத்த ஆண்டு அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது நாணய கொள்கையை தளர்த்துவதில் கவனமாக அணுக வேண்டிய நிலைக்கு தள்ளும்.
இதேவேளையில் உலகளவில் பெரும்பாலான மத்திய வங்கிகள், வட்டி விகிதங்களை கடுமையாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் ஐரோப்பிய மத்திய வங்கி (ECB), கனடா வங்கி (BoC) மற்றும் சுவிஸ் தேசிய வங்கி (SNB) ஆகியவற்றின் நாணய கொள்கை கூட்ட முடிவுகளை வெளியிடுகிறது.
இந்த கூட்டத்தின் முடிவுகள் நாணய சந்தையிலும், தங்கம் விலையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றால் மிகையில்லை. இந்த வாரம் டாலர் மதிப்பு இதுவரை 1% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது, இது தங்க விலைக்கு பாதகமாக அமைந்துள்ளது. டாலரின் மதிப்பு உயர்வு தங்கத்தின் விலையை குறைக்கும் ஒரு முக்கிய காரணியாக கருதப்படுகிறது.
ஏனெனில், டாலரில் தங்கம் வாங்கும்போது, டாலரின் மதிப்பு உயரும்போது தங்கத்தின் விலை குறையும். அதே நேரத்தில், மற்ற நாணயங்களில் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு, டாலரின் மதிப்பு உயர்வு தங்கத்தின் விலையை உயர்த்தும்.
More From GoodReturns

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

வெள்ளி என்பது தங்கம் போன்றதல்ல.. அது ஒரு ஸ்மால்-கேப் பங்கு! மியூச்சுவல் ஃபண்ட் ஜாம்பவான் வார்னிங்!

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?



Click it and Unblock the Notifications