தங்கம் விலை கடந்த ஒருமாதமாக அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்ட நிலையில், அமெரிக்கா மத்திய வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளும், அமெரிக்காவின் பணவீக்க அளவுகளும் நேற்றைய உயர்வில் பெரும் பகுதியை இன்று திரும்பப்பெற்றது.
இன்று சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2310 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது, நேற்றைய வர்த்தகத்தில் இதன் விலை 2339 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

எம்சிஎக்ஸ் சந்தையில் இன்று காலை வர்த்தகம் துவக்கத்திலிருந்து தங்கம் விலை தொடர் சரிவில் உள்ளது. 10 கிராம் 24 கேரட் ஆகஸ்ட் மாதம் முடியும் பியூச்சர்ஸ்-ன் தங்கம் விலை 0.65 சதவீதம் சரிந்து 71,504 ரூபாயாக உள்ளது. இதுவே வெள்ளி விலை 1.83 சதவீதம் சரிந்து 88,790 ரூபாயாக குறைந்துள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 200 ரூபாய் குறைந்து 66,600 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 210 ரூபாய் குறைந்து 72,660 ரூபாயாக குறைந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 160 ரூபாய் குறைந்து 53,280 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோ 600 ரூபாய் குறைந்து 95,200 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 300 ரூபாய் குறைந்து 25,430 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,660 ரூபாய், மும்பை - 6,615 ரூபாய், டெல்லி - 6,625 ரூபாய், கொல்கத்தா - 6,615 ரூபாய், பெங்களூர் - 6,615 ரூபாய், ஹைதராபாத் - 6,615 ரூபாய், கேரளா - 6,615 ரூபாய், புனே - 6,615 ரூபாய், பரோடா - 6,620 ரூபாய், அகமதாபாத் - 6,620 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,625 ரூபாய், லக்னோ - 6,625 ரூபாய், கோயம்புத்தூர் - 6,660 ரூபாய், மதுரை - 6,660 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,266 ரூபாய், மும்பை - 7,216 ரூபாய், டெல்லி - 7,231 ரூபாய், கொல்கத்தா - 7,216 ரூபாய், பெங்களூர் - 7,216 ரூபாய், ஹைதராபாத் - 7,216 ரூபாய், கேரளா - 7,216 ரூபாய், புனே - 7,216 ரூபாய், பரோடா - 7,221 ரூபாய், அகமதாபாத் - 7,221 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,231 ரூபாய், லக்னோ - 7,231 ரூபாய், கோயம்புத்தூர் - 7,266 ரூபாய், மதுரை - 7,266 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 53280 ரூபாய், மும்பை - 52920 ரூபாய், டெல்லி - 53000 ரூபாய், கொல்கத்தா - 52920 ரூபாய், பெங்களூர் - 52920 ரூபாய், ஹைதராபாத் - 52920 ரூபாய், கேரளா - 52920 ரூபாய், புனே - 52920 ரூபாய், பரோடா - 52960 ரூபாய், அகமதாபாத் - 52960 ரூபாய், ஜெய்ப்பூர் - 53000 ரூபாய், லக்னோ - 53000 ரூபாய், கோயம்புத்தூர் - 53280 ரூபாய், மதுரை - 53280 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,430 ரூபாய், மும்பை - 25,430 ரூபாய், டெல்லி - 25,430 ரூபாய், கொல்கத்தா - 25,430 ரூபாய், பெங்களூர் - 25,430 ரூபாய், ஹைதராபாத் - 25,430 ரூபாய், கேரளா - 25,430 ரூபாய், அகமதாபாத் - 25,430 ரூபாய், ஜெய்ப்பூர் - 25,430 ரூபாய், லக்னோ - 25,430 ரூபாய், கோயம்புத்தூர் - 25,430 ரூபாய், மதுரை - 25,430 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 95200 ரூபாய், மும்பை - 90700 ரூபாய், டெல்லி - 90700 ரூபாய், கொல்கத்தா - 90700 ரூபாய், பெங்களூர் - 90850 ரூபாய், ஹைதராபாத் - 95200 ரூபாய், கேரளா - 95200 ரூபாய், புனே - 90700 ரூபாய், பரோடா - 90700 ரூபாய், அகமதாபாத் - 90700 ரூபாய், ஜெய்ப்பூர் - 90700 ரூபாய், லக்னோ - 90700 ரூபாய், கோயம்புத்தூர் - 95200 ரூபாய், மதுரை - 95200 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 26.90 - 5,961 ரூபாய்,
குவைத் - KWD 22 - 5,998 ரூபாய்,
மலேசியா - MYR 344 - 6,105 ரூபாய்,
ஓமன் - OMR 27.65 - 6,000 ரூபாய்,
கத்தார் - QAR 264.50 - 6,062 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 266 - 5,924 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 97.50 - 6,038 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 259.25 - 5,896 ரூபாய்,
அமெரிக்கா - USD 71 - 5,931 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 259.25 - 5,896 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 259.25 - 5,896 ரூபாய்,
துபாய் (UAE) - AED 259.25 - 5,896 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 259.25 - 5,896 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 259.25 - 5,896 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 259.25 - 5,896 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 264.50 - 6,062 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 27.65 - 6,000 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 266 - 5,924 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 28.60 - 6,338 ரூபாய்,
குவைத் - KWD 23.30 - 6,353 ரூபாய்,
மலேசியா - MYR 361 - 6,407 ரூபாய்,
ஓமன் - OMR 29.45 - 6,391 ரூபாய்,
கத்தார் - QAR 282 - 6,463 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 286 - 6,369 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 107.90 - 6,682 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 280 - 6,368 ரூபாய்,
அமெரிக்கா - USD 75 - 6,266 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 280 - 6,368 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 280 - 6,368 ரூபாய்,
துபாய் (UAE) - AED 280 - 6,368 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 280 - 6,368 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 280 - 6,368 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 280 - 6,368 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 282 - 6,463 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 29.45 - 6,391 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 286 - 6,369 ரூபாய்.
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் (US Fed) வட்டி விகித உயர்வு குறித்த தகவலால் தங்கம் விலையில் இன்று சரிவைச் சந்தித்தது. அமெரிக்கப் பணவீக்க அறிக்கை சாதகமாக இருந்த காரணத்தால், அமெரிக்காவில் இந்த வருடம் வட்டி விகித குறைப்பு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
இதேபோல் இன்று நடந்த அமெரிக்க மத்திய வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தில் பென்ச்மார்க் வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவிக்கப்பட்டது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டியைக் குறைத்தால் பத்திர சந்தையில் முடங்கியுள்ள பல பில்லியன் டாலர் பணம் பங்குச்சந்தைக்கும், தங்கம் மீதும் குவியும்.
அமெரிக்க மத்திய வங்கி இந்த வருட துவக்கத்தில் மூன்று வட்டி விகித குறைப்பை அறிவிக்கத் திட்டமிட்ட நிலையில், தற்போது ஒரு வட்டி விகித வெட்டுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அமெரிக்க டாலர் விகிதங்களும், கடன் பத்திரங்களின் லாப விகிதங்களும் (Treasury yields) அதிகரித்துள்ளன. இதுவே தங்கம் விலையில் ஏற்பட்ட சரிவுக்கு முக்கியமான காரணமாகும்.


Click it and Unblock the Notifications