ஓடியாங்க, ஓடியாங்க.. தங்கம் விலை 3வது நாளாக சரிவு.. தங்க நகை வாங்க சூப்பர் சான்ஸ்..!!

சென்னை: தங்கமும், தங்க நகையும் இந்திய மக்களின் முக்கியமான சேமிப்பு கருவியாகக் காலம் காலமாக இருந்து வரும் காரணத்தால் தங்கம் விலையில் ஏற்படும் சிறிய அளவிலான சரிவும் பெரும் மகிழ்ச்சியை எப்போதும் அளிக்கிறது. அந்த வகையில் செப்டம்பர் 2ஆம் தேதி திங்களன்று, உள்நாட்டு வர்த்தக சந்தையில் தங்க விலை ஆரம்பத்தில் சரிவுடன் துவங்கி மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

தங்கம் விலை இந்திய ரீடைல் சந்தையில் கடந்த 2 வர்த்தக நாளாக கிராமுக்கு 10 ரூபாய் வீதம் குறைந்து வந்த நிலையில் இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் கிராமுக்கு 25 ரூபாய் குறைந்துள்ளது. இது தங்க நகை வாங்கும் மக்களுக்கு ஜாக்பாட் என்றே சொல்லாம்.

ஓடியாங்க, ஓடியாங்க..  தங்கம் விலை 3வது நாளாக சரிவு.. தங்க நகை வாங்க சூப்பர் சான்ஸ்..!!

அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் செப்டம்பர் கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தைக் குறைப்பதற்கான சாத்தியத்தை மதிப்பிட முதலீட்டாளர்கள் முக்கிய பொருளாதார தரவுகளை ஆய்வு செய்யும் போது உலகளவில் மந்தநிலையின் போக்கு அதிகரித்துள்ளது வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டு உள்ளது.

அக்டோபர் 4 ஆம் தேதி முதிர்வு பெரும் பியூச்சர்ஸ் ஆர்டர் விலை MCX சந்தையில் தங்கம் காலை 9:10 மணியளவில் 0.23 சதவீதம் சரிந்து ரூ. 71,448 க்கு வர்த்தகமானது, இது தொடர்ந்து கணிசமாகக் குறைந்து வருகிறது.

அமெரிக்காவின் வேலைவாய்ப்பு அறிக்கைகள், JOLTS வேலை தரவுகள் மற்றும் ISM கணக்கெடுப்புகள் இந்த வாரம் தங்க விலையைப் பாதிக்கும். உள்நாட்டில், டாலர்-ரூபாய் இயக்கம் மற்றும் ஸ்பாட் சந்தையின் தேவை MCX தங்க விலையை பாதிக்கும் என்பதால் இந்த வாரமும் தங்கம் விலை அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அமெரிக்காவின் நுகர்வோர் செலவு ஜூலை மாதத்தில் அதிகரித்தது, இதன் எதிரொலியாக இந்த மாதம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைப்பின் அளவீட்டைப் பாதியாகக் குறைத்துள்ளது. இதனால் அதிகப்படியான வட்டி விகித குறைப்பு தொடர்பான எதிர்பார்ப்பை இந்த டேட்டா நொறுக்கியது. இதனால் தங்க விலையைக் குறைக்கும் வகையில் பத்திர சந்தையில் மீண்டும் முதலீடு செல்ல துவங்கியுள்ளது, டாலர் மதிப்பும் மந்த நிலைக்கு சென்றுள்ளது.

சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் லிலை 2503 டாலரில் இருந்து 2491 டாலராக குறைந்துள்ளது, காமெக்ஸ் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை வெறும் 1.7 டாலர் அதிகரித்து 2529.3 டாலராக உள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 250 ரூபாய் குறைந்து 66,700 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 270 ரூபாய் குறைந்து 72,770 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 200 ரூபாய் உயர்ந்து 53,360 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு 1000 ரூபாய் குறைந்து 91,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 30 ரூபாய் குறைந்து 24,940 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,670 ரூபாய், மும்பை - 6,670 ரூபாய், டெல்லி - 6,685 ரூபாய், கொல்கத்தா - 6,670 ரூபாய், பெங்களூர் - 6,670 ரூபாய், ஹைதராபாத் - 6,670 ரூபாய், கேரளா - 6,670 ரூபாய், புனே - 6,670 ரூபாய், பரோடா - 6,675 ரூபாய், அகமதாபாத் - 6,675 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,685 ரூபாய், லக்னோ - 6,685 ரூபாய், கோயம்புத்தூர் - 6,670 ரூபாய், மதுரை - 6,670 ரூபாய்.

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,277 ரூபாய், மும்பை - 7,277 ரூபாய், டெல்லி - 7,292 ரூபாய், கொல்கத்தா - 7,277 ரூபாய், பெங்களூர் - 7,277 ரூபாய், ஹைதராபாத் - 7,277 ரூபாய், கேரளா - 7,277 ரூபாய், புனே - 7,277 ரூபாய், பரோடா - 7,282 ரூபாய், அகமதாபாத் - 7,282 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,292 ரூபாய், லக்னோ - 7,292 ரூபாய், கோயம்புத்தூர் - 7,277 ரூபாய், மதுரை - 7,277 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 53360 ரூபாய், மும்பை - 53360 ரூபாய், டெல்லி - 53480 ரூபாய், கொல்கத்தா - 53360 ரூபாய், பெங்களூர் - 53360 ரூபாய், ஹைதராபாத் - 53360 ரூபாய், கேரளா - 53360 ரூபாய், புனே - 53360 ரூபாய், பரோடா - 53400 ரூபாய், அகமதாபாத் - 53400 ரூபாய், ஜெய்ப்பூர் - 53480 ரூபாய், லக்னோ - 53480 ரூபாய், கோயம்புத்தூர் - 53360 ரூபாய், மதுரை - 53360 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 91,000 ரூபாய், மும்பை - 86,000 ரூபாய், டெல்லி - 86,000 ரூபாய், கொல்கத்தா - 86,900 ரூபாய், பெங்களூர் - 85,000 ரூபாய், ஹைதராபாத் - 91,000 ரூபாய், கேரளா - 91,000 ரூபாய், புனே - 86,000 ரூபாய், பரோடா - 86,000 ரூபாய், அகமதாபாத் - 86,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 86,000 ரூபாய், லக்னோ - 86,000 ரூபாய், கோயம்புத்தூர் - 91,000 ரூபாய், மதுரை - 91,000 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 29.10 - 6,476 ரூபாய்
குவைத் - KWD 22.75 - 6,255 ரூபாய்
மலேசியா - MYR 345 - 6,679 ரூபாய்
ஓமன் - OMR 29.95 - 6,526 ரூபாய்
கத்தார் - QAR 285 - 6,559 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 287 - 6,415 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 102.60 - 6,586 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 280.75 - 6,412 ரூபாய்
அமெரிக்கா - USD 76.50 - 6,417 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 280.75 - 6,412 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 280.75 - 6,412 ரூபாய்
துபாய் (UAE) - AED 280.75 - 6,412 ரூபாய்
புஜைரா (UAE) - AED 280.75 - 6,412 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 280.75 - 6,412 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 280.75 - 6,412 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 285 - 6,559 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 29.95 - 6,526 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 287 - 6,415 ரூபாய்
இங்கிலாந்து - GBP 60.70 - 6,682 ரூபாய்
கனடா - CAD 105 - 6,525 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 114.90 - 6,517 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 30.90 - 6,877 ரூபாய்
குவைத் - KWD 24.81 - 6,821 ரூபாய்
மலேசியா - MYR 357 - 6,911 ரூபாய்
ஓமன் - OMR 31.80 - 6,929 ரூபாய்
கத்தார் - QAR 304.50 - 7,007 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 309 - 6,907 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 112.60 - 7,228 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 303.25 - 6,925 ரூபாய்
அமெரிக்கா - USD 81 - 6,794 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 303.25 - 6,925 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 303.25 - 6,925 ரூபாய்
துபாய் (UAE) - AED 303.25 - 6,925 ரூபாய்
புஜைரா (UAE) - AED 303.25 - 6,925 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 303.25 - 6,925 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 303.25 - 6,925 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 304.50 - 7,007 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 31.80 - 6,929 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 309 - 6,907 ரூபாய்
இங்கிலாந்து - GBP 61.20 - 6,737 ரூபாய்
கனடா - CAD 111 - 6,898 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 125.40 - 7,112 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+